அஜ்வா பேரீச்சம்பழம் பற்றிய வாதங்களும் அதற்குறிய தெளிவும்

239

அஜ்வா பேரீச்சம்பழம் பற்றிய வாதங்களும் அதற்குறிய தெளிவும்

 

📚 :- திருக்குர்ஆன் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ عَامِرُ بْنُ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தினந்தோறும் காலையில் ஏழு “அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாளில் எந்த விஷமும் தீங்களிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.

 

அறிவிப்பவர் :- ஆமிர் இப்னு ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5445

 

மேற்கூறிய ஹதீஸை மறுக்கும் ஹதீஸ் மறுப்பவர்கள் கீழ்காணும் திருக்குர்ஆன் இறைவசனத்தை ஆதாரமாக முற்படுத்துகின்றனர். அவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

 

اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

 

குர்ஆன் கூருகிறது அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங் கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார் “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

சூரா பகரா ஆயத் 258

 

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தெழிவான முறையில் கேள்வி கேட்டு மன்னன் கூறுவது அசத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டியது போல ஹதீஸ் மறுப்பாளர்களும் மேற்கூறிய ஹதீஸ்களிலுள்ள விடயங்களை முன் வைத்து அசத்தியத்தை நிரூபித்து காட்டியுள்ளோம் என்று மக்கள் மத்தியில் தவறான ஓர் கருத்தைக் கூறி வருகின்றனர். இவைகளை கூர்ந்து கவனியுங்கள். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அசத்தியத்தை நிரூபித்து காட்டினார்கள். இது உலகம் அறிந்த உண்மை இருந்தாலும் ஹதீஸ் மறுப்பாளர்கள் அசத்தியம் என்பதாகக் கூறி (ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை) சத்தியத்தை மறுக்க முற்படுவது முற்றிலும் தவறாகும். இது போன்ற ஓர் தவறை உண்மை படுத்துவதற்கு மேற்கூறிய நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் விடயத்தில் முற்படுத்துவது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை கீழ் காணும் இறைவசங்களை மூலமாக வைத்துப் பார்க்கலாம்.

 

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى‏

 

குர்ஆன் கூருகிறது அவர் (இறைத்தூதர்) தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.

 

اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ

 

குர்ஆன் கூருகிறது அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.

 

عَلَّمَهٗ شَدِيْدُ الْقُوٰىۙ

 

குர்ஆன் கூறுகிறது மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

சூரா நஜ்ம் ஆயத் 3,4,5

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மனோ இச்சைப்படி எதுவும் பேசமாட்டார்கள். மேலும் அவர்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் வஹி என்பதாக திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள காரணத்தால் அஜ்வா பேரீச்சம்பழம் சம்பந்தமாக இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மருக்க முற்படுவது வஹியை மருப்பதற்கு சமமாகும்.

 

மேற்கூறிய ஹதீஸை மறுப்பதற்காக வேண்டி அவர்கள் கூறும் வாதங்களுக்கு திருக்குர்ஆன் பதிலடியாக அமைந்துள்ளது.

 

عَنْ عَامِرُ بْنُ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தினந்தோறும் காலையில் ஏழு “அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாளில் எந்த விஷமும் தீங்களிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.

 

அறிவிப்பவர் :- ஆமிர் இப்னு ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5445

 

மேற்கூறிய ஹதீஸ் உன்மையென்றால் ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு நஞ்சை குடியுங்கள். அதற்கு பிறகும் நீங்கள் உயிருடன் இருந்தால் தான் மேற்கூறிய ஹதீஸை நாங்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஏற்றுக்கொள்வோம். இல்லையென்றால் அது இட்டுகட்டப்பட்ட ஹதீஸ் என்பதாகத்தான் அர்த்தமாகும் எனக்கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்கள் திருக்குர்ஆனிலுள்ள பல இறைவசங்களை மறுப்பதற்காக வேண்டி வழிகாட்டப்படும் முக்கிய வாதங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. உதாரணமாக

 

ﻗَﺎﻝَ ﺑَﻞْ ﺍَﻟْﻘُﻮْﺍۚ ﻓَﺎِﺫَﺍ ﺣِﺒَﺎﻟُﻬُﻢْ ﻭَﻋِﺼِﻴُّﻬُﻢْ ﻳُﺨَﻴَّﻞُ ﺍِﻟَﻴْﻪِ ﻣِﻦْ ﺳِﺤْﺮِﻫِﻢْ ﺍَﻧَّﻬَﺎ ﺗَﺴْﻌٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது அதற்கவர் “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத் தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.

 

ﻓَﺎَﻭْﺟَﺲَ ﻓِﻰْ ﻧَﻔْﺴِﻪٖ ﺧِﻴْﻔَﺔً ﻣُّﻮْﺳٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் (பயம்) கொண்டார்.

சூரா தாஹா ஆயத் 66, 67

 

சூனியக்காரர்கள் அவர்களுடைய சூனியத்தால் கயிறுகளையும் தடிகளையும் நெளிவதை போல் நேரடியாக தோன்ற செய்து நபி முஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பயமுறுத்தியதாக இடம் பெற்றுள்ளது.

 

இப்போழுது ஓர் வழிதவறிய கூட்டம் மேற்கூறிய திருக்குர்ஆன் இறைவசனங்கள் உன்மையானது உறுதியானது இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது என்று நீங்கள் கூறினால் கயிறுகளையும் தடிகளையும் நெளிவது போன்று நேரடியாக தோன்றச் செய்து எங்களை பயமுறுத்தி காட்டுங்கள். உண்மையில் சூனியம் பொய் பித்தலாட்டம் தானே. இவ்வாறு நீங்கள் செய்து காண்பித்தால் தான் மேற்கூறிய வசனத்தை நாங்கள் உன்மையான இறைவசனம் என்று ஏற்றுக் கொள்வோம். இல்லையென்றால் அது இறைவசனம் என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்டது என்பதாகத்தான் அர்த்தமாகும் எனக்கூறி

 

இதனை உண்மைப் படுத்துவதற்காக வேண்டி ஹதீஸ் மறுப்பாளர்கள் முன் வைத்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை கூறிய வண்ணம் மேற்கூறிய கேள்வியை வாதமாக ஓர் கூட்டம் முன் வைத்தால்! பகிரங்க சவாலிட்டால் இன்றைய காலத்தில் நாங்கள் தான் ஏகத்துவ வாதிகள் என்று பெருமை அடித்து கொள்ளும். ஹதீஸ் மறுப்பாளர்கள் இது போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுவார்களா? அல்லது திருக்குர்ஆன் வசனங்களை மறுப்பார்களா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

இன்னும் ஓர் உதாரணம்

 

يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‏

 

குர்ஆன் கூருகிறது மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

சூரா யூனுஸ் ஆயத் 57

 

وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا‏

 

குர்ஆன் கூருகிறது இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.

சூரா இஸ்ரா ஆயத் 82

 

ஆரம்ப ஆயத்தில் முஃமின்களுக்கு இதயங்களில் (உள்ளங்களில்) ஏற்படும் மறைமுகமான நோய்களுக்கு திருக்குர்ஆன் நோய் நிவாரணி என்றும். மற்ற ஆயத்தில் முஃமின்களுக்கு இதயங்களில் ஏற்படும் நோய் என்று மட்டுப்படுத்தாமல் பொதுப்படையாகவே திருக்குர்ஆன் நோய் நிவாரணியாகவும் ரஹ்மத்தாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம் என்று இறைவன் கூறிய காரணத்தினால் முஃமின்களுக்கு இதயங்களில் உணர்வு ரீதியாக ஏற்படும் நோய்களாக இருந்தாலும் சரி உடல் ரீதியாக ஏற்படும் நோய்களாக இருந்தாலும் சரி அதற்கு திருக்குர்ஆன் மருந்தாக நோய் நிவாரணமாக அமைந்துள்ளது.

 

இப்போழுது ஓர் வழிதவறிய கூட்டம் மேற்கூறிய இறைவசனங்கள் உண்மையானது உருதியானது இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது என்று நீங்கள் கூறினால் முஃமின்களில் அதிகமானவர்கள் மனநோய் அது அல்லாத எத்தனையோ விதமான நோய்களின் மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும் வீடுகளிலும் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு திருக்குர்ஆனை மூலமாக வைத்து நீங்கள் நேரடியாக நோய் நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் மேற்கூறிய வசனம் உன்மையான இறைவசனம் என்பதாக நாம் ஏற்றுக் கொள்வோம். இல்லையென்றால் அது இறைவசனம் என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்டது என்பதாகத்தான் அர்த்தமாகும் எனக்கூறி

 

இதனை உண்மைப் படுத்துவதற்காக வேண்டி ஹதீஸ் மறுப்பாளர்கள் முன் வைத்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை கூறிய வண்ணம் மேற்கூறிய கேள்வியை வாதமாக ஓர் கூட்டம் முன் வைத்தால்! பகிரங்க சவாலிட்டால் இன்றைய காலத்தில் நாங்கள் தான் ஏகத்துவ வாதிகள் என்று பெருமை அடித்து கொள்ளும். ஹதீஸ் மறுப்பாளர்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுவார்களா? அல்லது திருக்குர்ஆன் வசனங்களை மறுப்பார்களா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

இன்னும் ஓர் உதாரணம்

 

அஜ்வா பேரீச்சம்பழம் தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் விஷம் தீன்டாது என்பதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் விஷம் தீன்டினால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிடையாது என்றிருந்தால் கீழ் கானும் திருக்குர்ஆன் ஆயத்துக்களை யெல்லாம் என்ன செய்வது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

ﺍِﻧَّﻪٗ ﻟَﺎ ﻳُﻔْﻠِﺢُ ﺍﻟْﻤُﺠْﺮِﻣُﻮْﻥَ

 

குர்ஆன் கூறுகிறது (குற்றவாளிகள்) பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.

சூரா யூனுஸ் ஆயத் 17

 

ﺍِﻧَّﻪٗ ﻟَﺎ ﻳُﻔْﻠِﺢُ ﺍﻟﻈّٰﻠِﻤُﻮْﻥَ

 

குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். சூரா

அன்ஆம் ஆயத் 21

 

وَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ

 

குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக காஃபிர்கள் வெற்றியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

சூரா கஸஸ் ஆயத் 82

 

அநியாயக்காரர்கள் பாவம் செய்தவர்கள் காஃபிர்கள் அனைவரும் வெற்றி பெற மாட்டார்கள் என்று பொதுப்படையாகவே திருக்குர்ஆனில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது இன்றைய காலகட்டத்தில் அநியாயக்காரர்கள் பாவம் செய்தவர்கள் காஃபிர்கள் இவர்களெல்லாம் ஏதோ ஒரு வகையில் இவ்வுலகில் வெற்றி பெறுவது கிடையாதா? பல நாடுகளில் அநியாயக்காரர்கள் அப்பாவி முஸ்லிம்களையும் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் அழித்து கொண்டு தானே இருக்கின்றார்கள். இது அவர்களுக்கு வெற்றி இல்லையா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டு விட்டு நஞ்சை குடிப்பது வேரு. தினம்தோறும் அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டு விட்டு எதார்த்தமாக நஞ்சை குடிபடுவது வேரு. ஒரு வேளை இவ்வாறான செயலுக்கு பின்னர் ஒருவர் மரணித்து விட்டால் அஜ்வா சம்பந்தமாக இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உன்மை கிடையாது. அது பொய்யான ஹதீஸ் என்று நீங்கள் கூறினால்! மேற்கூறிய இறைவசங்களில் அநியாயக்காரர்கள் பாவிகள் காஃபிர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் கூருகிறது. ஆனால் அன்று தொட்டும் இன்று வரை இவ்வுலகில் ஏதோ ஓர் வகையில் இவர்களெல்லாம் வெற்றி பெறுகிற காரணத்தால் மேற்கூறிய இறைவசனங்கள் பொய்யானது, பின்னால் வந்தவர்கள் இட்டுகட்டியுள்ளார்கள் எனக்கூறி

 

இதனை உண்மைப் படுத்துவதற்காக வேண்டி ஹதீஸ் மறுப்பாளர்கள் முன் வைத்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை கூறிய வண்ணம் மேற்கூறிய கேள்வியை வாதமாக ஓர் கூட்டம் முன் வைத்தால். பகிரங்க சவாலிட்டால் இன்றைய காலத்தில் நாங்கள் தான் ஏகத்துவ வாதிகள் என்று பெருமை அடித்து கொள்ளும். ஹதீஸ் மறுப்பாளர்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுவார்களா? அல்லது திருக்குர்ஆன் வசனங்களை மறுப்பார்களா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

எனவே அஜ்வா பேரீச்சம்பழம் சம்பந்தமாக இடம்பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க முற்படுவது திருக்குர்ஆனை மருப்பதற்கு சமமாகும். இன்னும் தெழிவான முறையில் கூறப்போனால் திருக்குர்ஆனிலுள்ள பல இறைவசனங்களை மருப்பதற்கு வழிகாட்டியாக ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்கள் முன்னுதாரணமாக இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

 

♦️குறிப்பு :- இறைவனின் நாட்டத்தை கொண்டு தான் ஒவ்வொரு வஸ்துக்களும் செயல்படுகிறது இறைவன் நாடினால் திருக்குர்ஆனின் மூலம் நோய் நிவாரணம் கிடைக்கும். இல்லையென்றால் எந்த விதத்திலும் நோய் நிவாரணம் கிடைக்காது. அதே போண்று தான் இறைவன் நாடவில்லை என்றால் அநியாயக்காரர்கள் பாவிகள் காஃபிர்கள் வெற்றி பெற மாட்டார்கள். இறைவன் நாடினால் ஏதோ ஓர் வகையில் இவ்வுலகில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அதே போண்று தான் இறைவன் நாடினால் தான் தினம் தோரும் அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டு வருபவருக்கு அன்றைய நாளில் ஏந்த ஒரு விஷமும் தீங்களிக்காது எந்த ஒரு சூனியமும் இடையூர் அளிக்காது. இறைவன் நாடவில்லை என்றால் ஏதோ ஓர் வகையில் தீங்கு ஏற்படும் இடையூர் அளிக்கும். இதனை சர்வ சாதாரணமாக அனைவரும் புரிந்து கொள்ளளாம். இவைகளை மறுக்கவேண்டும் என்ற நோக்கில் தன் மனோ இச்சையை மூலமாக வைத்து பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க முற்படுவது திருக்குர்ஆனுடைய பல இறைவசனங்களை மறுப்பதற்கு சமமாகும் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.