அதான் (பாங்கின்) போது கை பெருவிரலை முத்தமிட்டு கண்ணில் வைப்பது ஆகுமானதாகும்

473

அதான் (பாங்கின்) போது கை பெருவிரலை முத்தமிட்டு கண்ணில் வைப்பது ஆகுமானதாகும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَسْحِ الْعَيْنَيْنِ بِبَاطِنِ أُنْمُلَتَيِ السَّبَّابَتَيْنِ بَعْدَ تَقْبِيلِهِمَا عِنْدَ سَمَاعِ قَوْلِ الْمُؤَذِّنِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّه مَعَ قَوْلِهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بالله رَبًّا وَبِالإِسْلامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا حَلَّتْ عَلَيْهِ شَفَاعَتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் முஅத்தின் (அதான்) பாங்கில் அஸ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்று சொல்வதை செவிமடுக்கும் போது ஆட்காட்டி விரல்களை முத்தமிட்ட பிறகு அதனின் விரல் நுனியின் உட்புறத்தை கண்ணில் வைத்து தடவியவாறு ரளீது பில்லாஹி ரப்பா வபில் இஸ்லாமி தீனா வபி முஹம்மதி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ம நபிய்யன் என்று கூறுபவர்களுக்கு எனது ஷபாஅத் பரிந்துரை கிடைத்து விட்டது.

 

நூல் ஆதாரம் :- பிர்தௌஸி, மகாஸித் அல் ஹஸனா 1021

 

قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَبَّلَ ظُفْرَيْ إبْهَامِهِ عِنْدَ سَمَاعِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فِي الْأَذَانِ أَنَا قَائِدُهُ وَمُدْخِلُهُ فِي صُفُوفِ الْجَنَّةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் பாங்கில் அஸ்ஹது அன்ன முஹம்மது ரஸுலுல்லாஹ் என்பதை செவிமடுக்கும் போது தனது பெருவிரல்களின் நகத்தை
முத்தமிடுவாரோ அவர்களை நான் சுவனத்தின் அணிகளிலே அழைத்து சென்று அவர்களை (சுவனத்தில்) நுழைவிப்பேன்.

 

நூல் ஆதாரம் :- அல் பிர்தௌஸி” துர்ருல் முக்தார் 1/429

 

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهُ لَمَّا سَمِعَ قَوْلِ الْمُؤَذِّنِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّه، قَالَ هَذَا، وَقَبَّلَ بَاطِنَ الأُنْمُلَتَيْنِ السَّبَّابَتَيْنِ وَمَسَحَ عَيْنَيْهِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ فَعَلَ مِثْلَ مَا فَعَلَ خَلِيلِي فَقَدْ حَلَّتْ عَلَيْهِ شَفَاعَتِي

 

நிச்சயமாக அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஅத்தின் அஸ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்றுக் கூறியதை செவிமடுத்த போது அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் இரண்டு பெருவிரல் நகங்களையும் முத்தமிட்டு அவர்களின் கண்களில் வைத்து தடவினார்கள். அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் தோழர் செய்தது போல் யார் செய்கிறாறோ அவருக்கு எனது ஷபாஅத் பரிந்துரை கிடைத்து விட்டது.

 

நூல் ஆதாரம் :- பிர்தௌஸி, மகாஸித் அல் ஹஸனா 1021

 

عَنْ الْخَضِرِ عَلَيْهِ السَّلَامُُ قَالَ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ يَقُولُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَرْحَبًا بِحَبِيبِي وَقُرَّةِ عَيْنِي مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يُقَبِّلُ إبْهَامَيْهِ وَيَجْعَلُهُمَا عَلَى عَيْنَيْهِ لَمْ يَعْمَ وَلَمْ يَرْمَدْ أَبَدًا

 

ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். முஅத்தின் அஸ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்று சொல்வதை செவிமடுக்கும் போது மர்ஹபன் பிஹபீபி குற்றதுல் அய்னி முஹம்மது இப்னு அப்துல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்லி இரு பெரும் விரலை முத்தமிட்டு கண்ணில் வைப்பவன் குருடாக மாட்டான், கண் வலி எக்காலமும் வராது.

 

ஆதாரம் :- ஷரஹ் முஹ்தஸிர் 3/355 ஆனா 1/243

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்டு ஸலவாத் சொல்லும் போது குறிப்பாக அஸ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று அதான் பாங்கில் கேட்டதும் (மர்ஹபன் பிஹபீபி குற்றதுல் அய்னி முஹம்மது இப்னு அப்துல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லது (ரளீது பில்லாஹி ரப்பா வபில் இஸ்லாமி தீனா வபி முஹம்மதி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ம நபிய்யன்) என்று சொல்லி இரு பெரு விரல்களையும் முத்தமிட்டு கண்ணில் வைப்பது முஸ்தஹப்பு விரும்பத்தக்கதாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.