அதான் (பாங்கு) மற்றும் இகாமத்து பற்றிய விபரம்
அதான் (பாங்கு) மற்றும் இகாமத்து பற்றிய விபரம்
♦️மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை அரபு மொழியில் “அதான்” என்றும் பாரஸீக மொழியில் பாங்கு என்றும் கூறப்படும் தமிழிலும் பாங்கு என்றே சொல்லப்படுகிறது.
عَنْ أَبِي عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاقُوسِ يُعْمَلُ لِيُضْرَبَ بِهِ لِلنَّاسِ لِجَمْعِ الصَّلَاةِ طَافَ بِي وَأَنَا نَائِمٌ رَجُلٌ يَحْمِلُ نَاقُوسًا فِي يَدِهِ فَقُلْتُ يَا عَبْدَ اللَّهِ، أَتَبِيعُ النَّاقُوسَ؟ قَالَ وَمَا تَصْنَعُ بِهِ؟ فَقُلْتُ نَدْعُو بِهِ إِلَى الصَّلَاةِ. قَالَ أَفَلَا أَدُلُّكَ عَلَى مَا هُوَ خَيْرٌ مِنْ ذَلِكَ؟ فَقُلْتُ لَهُ بَلَى. قَالَ فَقَالَ : تَقُولُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ. قَالَ ثُمَّ اسْتَأْخَرَ عَنِّي غَيْرَ بَعِيدٍ. ثُمَّ قَالَ : وَتَقُولُ إِذَا أَقَمْتَ الصَّلَاةَ : اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَلَمَّا أَصْبَحْتُ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ بِمَا رَأَيْتُ، فَقَالَ إِنَّهَا لَرُؤْيَا حَقٍّ إِنْ شَاءَ اللَّهُ، فَقُمْ مَعَ بِلَالٍ فَأَلْقِ عَلَيْهِ مَا رَأَيْتَ فَلْيُؤَذِّنْ بِهِ ؛ فَإِنَّهُ أَنْدَى صَوْتًا مِنْكَ فَقُمْتُ مَعَ بِلَالٍ فَجَعَلْتُ أُلْقِيهِ عَلَيْهِ وَيُؤَذِّنُ بِهِ. قَالَ : فَسَمِعَ ذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ يَجُرُّ رِدَاءَهُ وَيَقُولُ : وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ يَا رَسُولَ اللَّهِ لَقَدْ رَأَيْتُ مِثْلَ مَا رَأَى. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فَلِلَّهِ الْحَمْدُ
அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை தொழுகைக்கு ஒன்று சேர்ப்பதற்காக அடிப்பதற்கு மணி தயார் படுத்துமாறு ஏவியபோது நான் தூங்கிக் கொண்டிருக்கும் வேளை ஒருவர் தன் கையில் ஒரு மணியை ஏந்தியவராக என்னைச் சுற்றினார். அவரைப் பார்த்து அல்லாஹ்வின் அடியாரே! இந்த மணியை நீங்கள் விற்பீர்களா என்று வினவினேன், அதற்கவர் ‘இதைக் கொண்டு என்ன செய்வீர்’ என்று வினவிய போது ‘இதனைக் கொண்டு தொழுகைக்கு அழைப்போம்’ என்று சொன்னேன். அப்போது ‘இதனை விட சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஆம்’ என்று கூறினேன். அதற்கு அவர் அதானை முறையாக கூறினார். அதன் பின்னர் சற்று நேரத்தில் ‘இக்காமதை முழுமையாக சொன்னார். பின்னர் காலையில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்து கண்ட கனவைப் பற்றிக் கூறினேன். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அல்லாஹ் நாடினால் அது நிச்சயம் உண்மையான கனவாகும். எனவே பிலாலுடன் எழுந்து நீர் கனவில் கண்டதை அவருக்கு சொல்வீராக. அவர் அதனைக் கொண்டு அதான் சொல்லட்டும். ஏனெனில் அவர் உம்மை விட உயர்ந்த சப்தமுடையவர்’ எனக் கூறினார்கள். நான் பிலாலுடன் எழுந்து அவருக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர் அதனைக் கொண்டு அதான் சொன்னார். உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது வீட்டில் இருக்கும் நிலையில் அதானை செவிமடுத்த போது அவரது அங்கியை இழுத்துக் கொண்டு வெளியேறி வந்து யா ரஸூலல்லாஹ்! சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பிவைத்தவன் மீது ஆணையாக அவர் கண்ட கனவைப் போன்றே நானும் கண்டேன்’ எனக் கூறினார்கள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுக்கே புகழ்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். அபூ தாவூத் 499 இப்னு மாஜா 706 தாரமீ 1224 அஹ்மது 16476
அதான் (பாங்கின்) சொற்கள் :-
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
இகாமத்தின் சொற்கள் :-
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
பாங்கின் மொழிபெயர்ப்பு
أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ
🔸அல்லாஹு அக்பர் :- அல்லாஹு அக்பர் :- அல்லாஹு அக்பர் :- அல்லாஹு அக்பர்
♦️பொருள் :- அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் மிகப்பெரியவன்.
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
🔸அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் :- அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்
♦️பொருள் :- அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
🔸அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :- அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
♦️பொருள் :- முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ
🔸ஹய்ய அலஸ் ஸலாத் :- ஹய்ய அலஸ் ஸலாத்
♦️பொருள் :- தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்.
حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ
🔸ஹய்ய அலல் ஃபலாஹ் :- ஹய்ய அலல் ஃபலாஹ்
♦️பொருள் :- வெற்றியின் பக்கம் வாருங்கள் வெற்றியின் பக்கம் வாருங்கள்.
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ
🔸அல்லாஹு அக்பர் :- அல்லாஹு அக்பர்
♦️பொருள் :- அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் மிகப்பெரியவன்.
لَا إِلَهَ إِلَّا اللَّهُ
🔸லா இலாஹ இல்லல்லாஹ் :-
♦️பொருள் :- அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் இல்லை.
சுபஹ் பாங்கில் மேலதிக இரு வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ளது
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مِنَ السُّنَّةِ إِذَا قَالَ الْمُؤَذِّنُ فِي أَذَانِ الْفَجْرِ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ مَرَّتَيْنِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
🔶அதான் சொல்பவர் (சுபஹ்) ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல்பலாஹ் என்று கூறிய பின்னர் அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் என்று இரண்டு தடவை கூறுவது ஸுன்னத் நபிவழியாகும்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரகுத்னி 914 ஹாகிம் 742
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ (الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ) اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
🔸ஹய்ய அலல்பலாஹ் என்று கூறிய பின்னர் அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் என்று கூறிவிட்டு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறி முடிக்க வேண்டும்.
இதன் சொற்கள் :-
الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
🔸அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் :- அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம்
🔶பொருள் :- தூக்கத்தை விட தொழுகை மிகச் சிறந்தது. தூக்கத்தை விட தொழுகை மிகச் சிறந்தது.
பாங்கிற்குப் பிரதி கூறல்
حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ
🔸ஹய்ய அலஸ் ஸலாத் :- ஹய்ய அலஸ் ஸலாத் :- ஹய்ய அலல் ஃபலாஹ் :- ஹய்ய அலல் ஃபலாஹ் என்று முஅத்தின் கூறும் சமயங்களில் பின்வருமாறு கூறவும்.
لا حول ولا قوة إلا بالله العلي العظيم
🔸லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹில் அலிய்யில் அழீம்
🔶பொருள் :- வல்லமை மிக்க உயர்வான அல்லாஹ்வின் உதவியின்றி வேறு யாருக்கும் நன்மை செய்யவும் தீங்கைச் செய்யாமல் விடவும் எவ்வித ஆற்றலுமில்லை. அதாவது அல்லாஹ்வுக்கே சகல ஆற்றலும் உண்டு.
இனி முஅத்தின் சுப்ஹுக்குரிய பாங்கில்
الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
🔸அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் :- அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் என்று கூறும் போது பின்வருமாறு கூறிக்கொள்ளல் வேண்டும்.
صدقت وبررت وبالحق نطقت
🔸ஸதக்த வபரர்த வயில்ஹக்கி நதக்த
🔶பொருள் :- உண்மை சொன்னீர், நன்மையைச் செய்தீர் சத்தியத்தை மொழிந்தீர்
இகாமத்தில் முஅத்தின்
قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ
🔸கத்காமத்திஸ்ஸலாத்” தொழுகை ஆரம்பமாகி விட்டது என்று முஅத்தின் கூறும் போது பின்வருமாறு கூற வேண்டும்.
أقامها الله وأدامها
🔸அகாமஹல்லாஹு வஅதாமஹா
🔶பொருள் :- வானமண்டலங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹுத்தஆலா தொழுகையை நியமமாக நடைபெறவும் நிலைத்திருக்கவும் அருள் புரிவானாகவும்.
பாங்கு துஆ
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمـدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة العالية الشريفة وابعثه مقاما محمودن الذي وعدته وارزقنا شفاعته وأوردنا خوضه يوم القيامة إنك لا تخلف الميعاد وصلى الله على محمد و اله وصحبه أجمعين والحمد لله رب العالمين
🔸அல்லாஹும்ம றப்ப ஹாதிஹித் தஃவததித் தாம்மத்தி வஸ்ஸலாத்தில் காயிமதி ஆத்தி ஸய்யிதனா முஹம்மதனில் வஸீலத்த வல்பழீலத்த வத்தரஜதர் ரபீ அத்தல் ஆலியத்தஷ் ஷரீபத்த, வப்அதுஹு மகாமன், மகுமூதனில்லதீ வஅத்தஹுவர் ஜுக்னா, ஷுபா அதஹு வஅவ்ரித்னா ஹவ்ழஹு யவ்மல்கியா மத்தி, இன்னக்க லாதுக்லிபுல் மீஆத் வஸல்லல்லாஹு அலா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மான் வல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.
🔶பொருள் :- நாயனே! பரிபூரணமான இந்தப் பிரார்த்தனைக்குரிய றப்பே! நிரந்தரமாய் நடைபெறும் இத்தொழுகைக்குரிய இரட்சகனே! எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “வஸீலா” எனப்படும் ஆதாரத்தையும் மேன்மையையும் உயர்ந்த அந்தஸ்தையும் நன்மதிப்பையும் நீ அருள்புரிவானாக. மேலும் உன்னால் (திருக்குர்ஆனில்) வாக்களிக்கப்பட்ட மகாமன் மஹ்மூத் எனப்படும் புகழப்பட்ட ஸ்தலத்தில் அவர்களை எழுந்தருள மறுமையில் அருள் புரிவானாக. அவர்களின் மன்றாட்டத்தை (ஷபா அத்தை) எமக்கு அருள்புரிவாயாக. அன்னாருக்குரிய ஹவ்லுல் கவ்தர்) என ஆற்று நீரைப் பருக அதனருகே எம்மைச் சேர்த்து வைப்பாயாக. நீ வாக்குறுதி செய்தால் அதற்கு மாறு செய்யவே மாட்டாய். (வஸல்லல்லாஹு அலா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மான் வல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்)
♦️குறிப்பு :- தொழுகைக்கு முன்னால் பாங்கும், இகாமத்தும் சொல்வது ஸுன்னத்து. பர்ளுத் தொழுகைக்கும் விடுபட்ட (கழா) தொழுகைக்கும் தனியாகவோ கூட்டாகவோ தொழும்போது பாங்கும் இகாமத்தும் சொல்வது நன்று. பாங்கு சொல்வதற்கு முன்பும் பின்பும் ஸலவாத்து ஓதுவது ஸுன்னத்தாகும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்