அனாதைகள் பற்றிய சிந்தனை துளிகள்
4) அனாதைகள் பற்றிய சிந்தனை துளிகள்
அனாதைகளை வெறுக்காதீர்கள் அவர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்
நெருப்பை நீரைக் கொண்டு அனைத்து விட முடியும். அதே போல் உங்கள் உள்ளம் கடினமாக இருக்கும் என்றால் அதிகளவில் மனரீதியான தாக்கம் வெறுப்பு கோபம் அதிகளவில் ஏற்படுகிறது என்றால்
பாசத்திற்காக ஏங்கும் அனாதைகளை நீங்கள் அரவணைத்துக் கொள்ளுங்கள், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தம் மனமகிழ்ச்சையை நீங்கள் உற்று நோக்கினால்
கடினமாக இருக்கும் உங்களது உள்ளங்களும், மனரீதியான தாக்கங்களும், வெறுப்பு கோபங்களும் முற்றாக அகன்று விடும் என்ற கருத்தை தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்களின் பொன்மொழிகளில இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.