அனைத்து தொழுகைகளின் ரக்அத்துகள்

66

அனைத்து தொழுகைகளின் ரக்அத்துகள் 

 

பர்ளு தொழுகையின் ரக்அத்துக்கள் 

 

சுபஹ் தொழுகை :- 2 ரகஅத்துகள். 

ளுஹர் தொழுகை :- 4 ரகஅத்துகள். 

அஸர் தொழுகை :- 4 ரகஅத்துகள்.  

மஃரிப் தொழுகை :- 3 ரகஅத்துகள்.   

இஷா தொழுகை :- 4 ரகஅத்துகள்.   

 

ராத்திபத்தான ஸுன்னத்து தொழுகையின் ரக்அத்துகள் 

 

சுபஹ் தொழ முன்னர் :- 2 ரக்அத்துகள்.

ளுஹர் தொழ முன்னர் :- 4 அல்லது 2 ரக்அத்துகள். ளுஹர் தொழுத பின்னர் :- 4 அல்லது 2 ரக்அத்துகள். 

அஸர் தொழ முன்னர் :- 4 அல்லது 2 ரக்அத்துகள். 

மஃரிப் தொழ முன்னர் :- 2 ரக்அத்துகள். மஃரிப் தொழுத பின்னர் :- 2 ரக்அத்துகள். 

இஷா தொழ முன்னர் :- 4 அல்லது 2 ரக்அத்துகள். இஷா தொழுத பின்னர் :- 4 அல்லது 2 ரக்அத்துகள். 

 

குறிப்பு :- பர்ளுத் தொழுகைக்கு முன்னால் உள்ள ஸுன்னத்துத் தொழுகைகளுக்கு கப்லிய்யதன் (முன்னால் உள்ளவை) என்றும், பர்ளுத் தொழுகைக்குப் பின்னால் தொழப்படும் ஸுன்னத்துத் தொழுகைகளுக்கு பஃதிய்யதன் (பின்னால் உள்ளவை) என்றும் கூற வேண்டும். 

 

மேலதிகமாக ஸுன்னத்து தொழுகைகளின் ரக்அத்துகள்

 

தஹஜ்ஜத் தொழுகை :- குறைந்தது 2 ரக்அத்துகள் கூடுதலானது 8 ரக்அத்கள்.  

 

♦️குறிப்பு :- தஹஜ்ஜத் தொழுகையாகிறது விழித்தெழுந்து சுபஹ் வரை தொழும் ஓர் இரவுத் தொழுகையாகும். இத்தொழுகையை 1 ஸலாம் என்ற அடிப்படையில் 2 ரக்அத்களாகவும் அல்லது 4 ரகத்துகளாகவும் தொழுது கொள்ளளாம். 

 

வித்ரு தொழுகை :- குறைந்தது 1 ரக்அத்து, 3 ரகாஅத்து, இதில் அதிகமானது 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 11 ரக்அத்துகள். 

 

♦️குறிப்பு :- வித்ரு தொழுகை ஒற்றைப்படையாக தொழும் இரவுத் தொழுகையாகும். வித்ரு தொழுகையை 2 ரக்அத்துக்கு 1 ஸலாமாகவும், 1 ரக்அத் மற்றொரு ஸலாமாகவும் தொழுது கொள்ள வேண்டும். 

 

தராவீஹ் தொழுகை :- 20 ரக்அத்துகள். 

 

♦️குறிப்பு :- தராவீஹ் தொழுகை இரவு காலங்களில் ஓய்வுவெடுத்து ராகத்து பெற்று ரமழான் மாதத்தில் மாத்திரம் தொழக்கூடிய முக்கியமான ஓர் ஸுன்னத்து தொழுகையாகும். இத்தொழுகையை 2,2 ரக்அத்துகளாக 10 ஸலாத்துடன். சுமார் 20 ரக்அத்துகள் தொழுது வர வேண்டும். 

 

பெருநாள் தொழுகை :- 2 ரக்அத்துகள். 

 

♦️குறிப்பு :- பெருநாள் தினங்களில் தொழும் தொழுகையாகும். இத்தொழுகை 2 ரக்அத்துகள் தொழும் போது. முதல் ரக்அத்தில் 7 முறை தக்பீர் கூற வேண்டும். 2 ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு 5 முறை தக்பீர் கூற வேண்டும். ஒவ்வொரு தக்பீர் சொல்லும் போதும் 2 கைகளை உயர்த்தி கட்டிக் கொள்ள வேண்டும். 

 

ளுஹா தொழுகை :- குறைந்தது 2 ரக்அத்துகள். அதிகமானது 8 அல்லது 11 ரக்அத்துகள். 

 

♦️குறிப்பு :- சூரியன் உதித்த பின்னர் தொழும் தொழுகைக்கு ளுஹா தொழுகை எனப்படும். 

 

தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை :- 2 ரக்அத்துகள்.

 

♦️குறிப்பு :- மஸ்ஜிதுகளின் காணிக்கைத் தொழுகை. மஸ்ஜிதுகளில் நுழைந்தவர்கள் அமருவதற்கு முன் 2 ரக்அத் தொழுவதற்கு தஹிய்யத்துல் மஸ்ஜித் எனப்படும்.

 

 இஸதிகாராத் தொழுகை :- 2 ரக்அத்துகள். 

 

♦️குறிப்பு :-  இஸ்திகாரா என்பது நலவைத் தேடுதல் என்பதாகும். வியாபாரம், விவசாயம், வீடு கட்டுதல் பிரயாணம் போன்ற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நற்காரியங்களைத் தொடங்கும் போது, தொடங்கும் காரியம் நலமாக முடிய வேண்டும் என இரண்டு ரக்அத்து ஸுன்னத் தொழுவதாகும்.

 

உளூ தொழுகை :- 2 ரக்அத்துகள்.

 

♦️குறிப்பு :- தஹிய்யதுல் உலூ என்றால் உலூவின் காணிக்கையாகும். இத்தொழுகை உலூ செய்து நீர் உலரமுன் 2 ரக்அத்துக்கள் ஸுன்னத் தொழுவதாகும்.

 

ஸலாத்துல் அவ்வாபீன் :- 2 ரக்அத்துகள் 

 

♦️குறிப்பு :- மதி மறக்கும் நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூறி தொழப்படும் இத்தொழுகைக்கு ஸலாத்துல் அவ்வாபீன் எனப்படும். மஃரிப் இஷா இடைப்பட்ட நேரத்தில் தொழப்படும். 

 

தஸ்பீஹ் தொழுகை :- 4 ரக்அத்துகள். 

 

♦️குறிப்பு :- தஸ்பீஹ் தொழுகையை 2,2 ரக்அத்துகளாக 4 ரக்அத்துகள் தொழு வேண்டும். இத்தொழுகை வாரத்தில் அல்லது மாதத்தில் அல்லது வருடத்தில் 1 முறையாவது தொழுது கொள்ள வேண்டும். 

 

இஸ்திஸ்கா தொழுகை :- 2 ரக்அத்துகள். 

 

♦️குறிப்பு :- இத்தொழுகை 2 ரக்அத்துகள் தொழும் போது. முதல் ரக்அத்தில் 7 முறை தக்பீர் கூற வேண்டும். 2வது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு 5 முறை தக்பீர் கூற வேண்டும். ஒவ்வொரு தக்பீர் சொல்லும் போதும் 2 கைகளை உயர்த்தி கட்டிக் கொள்ள வேண்டும். இத்தொழுகைக்கு ஸலாத்துல் இஸ்திஸ்கா மழை வேண்டித் தொழும் தொழுகை எனப்படும். 

 

இஷ்ராக் தொழுகை :- 2 ரக்அத்துக்கள்.

 

♦️️குறிப்பு :- இஷ்ராக் தொழுகை சூரியன் உதித்தபிறகு தொழும் தொழுகையாகும். சூரியன் உதித்து சுமார் 7 முழு அளவுக்கு யர்ந்த பிறகு 2 ரக்அத் ஸுன்னத்து தொழ வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம் 

Leave A Reply

Your email address will not be published.