அன்னிய பெண்களை அத்துமீறி தொடாதீர்கள், கற்பழிக்காதீர்கள்

80

அன்னிய பெண்களை அத்துமீறி தொடாதீர்கள், கற்பழிக்காதீர்கள்

 

عَنْ مَعْقِلَ بْنَ يَسَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لا تَحِلُّ لَهُ 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இரும்பினாலான ஊசியால் உங்களின் ஒருவருடைய தலையில் குத்துவது, அவருக்கு அனுமதி இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவருக்குச் சிறந்ததாகும். 

அறிவிப்பவர் :- மஃகல் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 பைஹகி” முஸ்னத் 1283 

🔸அன்னியப் பெண்பிள்ளைகளை தொடுவது இரும்பினாலான ஊசியால் உங்களின் ஒருவருடைய தலையில் குத்துவதற்கு சமம் என்ற கருத்தை இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள் என்றால் அந்த பெண்பிள்ளைகளை மானபங்கப் படுத்துவது, கற்பழிப்பது, கொலை செய்வது என்பது மிகப்பெரும் குற்றம் என்ற கருத்தையே இஸ்லாம் பறைசாற்றுகிறது.  

♦️குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் பெண்பிள்ளை கற்பழிக்க முற்பட்டு மானபங்கப் படுத்தினால். அல்லது கற்பழித்து விட்டால். அந்த பெண்பிள்ளையின் இவ்வுலக வாழ்க்கை இருண்டு போய்விடும், கேள்விக்குறி ஆகிவிடும். அந்த பெண் பிள்ளையின் மனவேதனைக்கு இவ்வுலகில் எதுவும் ஈடாகாது. அந்த பெண் பிள்ளை தன்னை கற்பழித்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க சொன்னாலும் சரி, அந்த தன்டனையை உடனடியாக  நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் பெண்பிள்ளைகளை கற்பழித்து கொலை செய்தால்! அந்த கயவர்கள் மாமன்னரின் மகன்களாக இருந்தாலும் சரி. மக்கள் மத்தியில் வைத்து அவர்களின் தலை துண்டிக்கப்பட வேண்டும். அல்லது அது அல்லாத வேறு முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இஸ்லாம் நீதியான மார்க்கமாகும். 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.