அப்அழு ஸுன்னத்துக்கள் 12

85

அப்அழு ஸுன்னத்துக்கள் 12

 

♦️1) இரண்டு ரக்அத்துக்களுக்கு மேற்பட்ட தொழுகையில் முந்திய அத்தஹிய்யாத்தை ஓதுதல். 

 

♦️2) அதற்காக இருப்பில் இருத்தல்.

 

♦️3) அந்த அத்தஹிய்யாத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல். 

 

♦️4) அந்த ஸலவாத்துக்காக இருத்தல். 

 

♦️5) கடைசி அத்தஹிய்யாத்தில் வஅலா ஆலி முகம்மதின் என்று சேர்த்துக் கூறுதல்.  

 

♦️6) இதை ஓதுவதற்காக இருத்தல். 

 

♦️7) சுபஹுத் தொழுகையிலும், ரமலான் மாதம் பிறை 16 தொடக்கம் முடியும் வரையும். இஷாவுக்குப் பின் தொழப்படும் வித்று தொழுகையிலும் குனூத் ஓதுதல். 

 

♦️8) அந்த குனூத்திற்காக நிற்றல். 

 

♦️9) அந்த குனூத்துக்களில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்து ஓதுதல். 

 

♦️10) அந்த ஸலவாத்துக்காக நிற்றல். 

 

♦️11) அந்த ஸலவாத்தில் வஅலா ஆலிஹி என்று கூறி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரைச் சேர்த்தல்.  

 

♦️12) அதனை ஓதுவதற்காக நிற்றல்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.