அல்லாஹ் சொல்ல நான் எழுதினேன் என்ற கருத்து சரியா? தவறா?

89

அல்லாஹ் சொல்ல நான் எழுதினேன் என்ற கருத்து சரியா? தவறா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

வான்மறை மறுக்கும் வஹாபிஷம் என்ற நூலில் உள்ளவைகளை அல்லாஹ் சொல்ல நான் எழுதியது என்ற அப்துர் ரவூப் மிஸ்பாஹி அவர்கள் கூறிய கருத்து பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? என்பதாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. நம்முடைய நிலைப்பாடு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருந்தால் அது சரி இல்லை என்றால் அது தவறு அவ்வளவுதான்.

 

يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌

 

குர்ஆன் கூறுகிறது (அல்லாஹ்) தான் நாடியவர்களுக்கு ஹிக்மா
(இறைஞானம், நுண்ணறி)வை கொடுக்கின்றான்.

சூரா பகரா ஆயத் 269

 

مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக (கல்விமானாக) ஆக்கி விடுகிறான்.

 

அறிவிப்பவர் :- முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 70

 

வெளிப்படையில் கல்வியை கற்றுக் கொடுத்தவர்கள் அதில் விளக்கம் பெற்றவராக கல்விமானாக உருவாக்கியவர்கள் ஆசியர்கள் உஸ்தாத்மார்கள். எதார்த்தத்தில் அவர்கள் உருவாக்கவில்லை அல்லாஹ் தான் உருவாக்கினான் என்ற ஆழமான நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் இருத்தல் வேண்டும் என்ற கருத்தையே மேற்கூறிய குர்ஆன் ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

அல்லாஹ் கல்வி அறிவை தருகிறான் என்று கூறுவது பிரச்சினை இல்லை. அல்லாஹ் கல்வியை கற்றுத் தந்தான் என்று பொதுவாக கூறலாமா?

 

اللَّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அணைத்து அல்லாஹ்வே! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு’ என்று பிராத்தனை செய்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 74

 

ஆக வேத ஞானத்தை அல்லாஹ்வே நீயே கற்றுக் கொடு என்றால்! எப்படி அது சாத்தியம் ஆகும்? அல்லாஹ் எப்படி கற்றுக் கொடுப்பான்? ஒரு நபியாக ரஸூலாக இருந்தால் அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுப்பான் என்று வைத்துக் கொண்டாலும். மேற்கூறிய ஹதீஸில் ஒரு ஸஹாபி இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ்வே நீ கற்றுக் கொடு என்றால்! அது எப்படி சத்தியம் ஆகும்? என்ற அவநம்பிக்கையை விட்டு விடுங்கள். எது நடந்தாலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நடக்கிறது எது நடந்தாலும் அல்லாஹ்வின் மூலம் நடக்கிறது அல்லாஹ் செய்கிறான் என்ற இறைநம்பிக்கையை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.

 

குறிப்பு :- அல்லாஹ்வே! இவருக்கு இறைஞானம் கல்வியை கற்றுக் கொடு என்ற கருத்தும், எனக்கு கல்வியை கற்று தந்தவன் அல்லாஹ் என்ற கருத்தும். என்னை கல்விமானாக ஆக்கியவன் அல்லாஹ் என்ற கருத்தும். அல்லாஹ் சொல்ல நான் எழுதினேன் என்ற கருத்தும் ஒன்றுக்கொன்று நேர்படுகிறதே தவிர எந்தவிதத்திலும் குர்ஆன் ஹதீஸிக்கு முறன் கிடையாது.

 

திருக்குர்ஆனை உற்று நோக்குங்கள்.

 

எனக்கு குர்ஆனை கற்று தந்தவர்கள் ஆலிம்கள். இருந்தாலும் எனக்கு குர்ஆனை கற்று தந்தவன் அல்லாஹ் என்று நான் கூறினால் குற்றமா? குர்ஆன் கூறுகிறது.

 

اَلرَّحْمٰنُۙ‏ :- عَلَّمَ الْقُرْاٰنَ‏

 

இந்தக் குர்ஆனை கற்றுக் கொடுத்தவன் அர்ரஹ்மானாகி (அல்லாஹ் அவனே)

சூரா ரஹ்மான் ஆயத் 1,2

 

எனக்கு பேசக்கற்று தந்தவர்கள் பெற்றோர்கள். இருப்பினும் எனக்கு பேச கற்று தந்தவன் அல்லாஹ் என்று கூறினால் குற்றமா? குர்ஆன் கூறுகிறது.

 

عَلَّمَهُ الْبَيَانَ‏

 

(மனிதர்களுக்கு) பேசக் கற்றுக் கொடுத்தவனும் (அல்லாஹ் அவனே)

சூரா ரஹ்மான் ஆயத் 4

 

எனக்கு உணவு தந்தவர்கள் என் பொற்றோர்கள். இருந்தாலும் எனக்கு உணவு தந்தவன் அல்லாஹ் என்று கூறினால் குற்றமா? குர்ஆன் கூறுகிறது.

 

وَ الَّذِىْ هُوَ يُطْعِمُنِىْ وَيَسْقِيْنِۙ‏

 

எனக்கு உணவளிப்பவனும் (அல்லாஹ்) அவனே எனக்கு பருகத்தருபவனும் (அல்லாஹ்) அவனே

சூரா ஷுஃரா ஆயத் 29

 

என்னை சிரிக்க வைத்தவர்கள் என் நண்பர்கள் என்னை அழ வைத்தவர்கள் என் எதிரிகள். இருப்பினும் என்னை சிரிக்க வைப்பதும் அல்லாஹ் அழச் செய்பவனும் அல்லாஹ் என்று கூறினால் குற்றமா? குர்ஆன் கூறுகிறது.

 

وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ‏

 

நிச்சயமாக சிரிக்க வைப்பவனும் (அல்லாஹ்) அவனே அழச் செய்பவனும் (அல்லாஹ்) அவனே

சூரா நஜ்ம் ஆயத் 43

 

கஷ்டத்தில் இருக்கும் போது எனக்கு உதவி செய்தவர்கள் என்னை பாதுகாத்தவர்கள் என்னோடு என் அருகில் இருந்த நண்பர்கள். இருப்பினும் எனக்கு உதவி செய்தான் பாதுகாத்தவன் அல்லாஹ் தான் என்று கூறினால் குற்றமா? குர்ஆன் கூறுகிறது.

 

وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏

 

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை. (பாதுகப்பவனும் உதவி செய்பவனும் அவனே)

சூரா பகரா ஆயத் 107

 

இப்படி என்னெற்ற ஆதாரங்களை குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து அதிகம் அதிகம் காண முடியும். அல்லாஹ் அஹதானவன் என்ற நூலிலும் இது பற்றி முழுமையாக எழுதப்பட்டு வருகிறது. ஆக உதவி செய்தவன் என்னை பாதுகாத்தவன் அல்லாஹ் என்று கூறினாலும் சரி, சிரிக்க வைத்தவன் அழச் செய்தவன் அல்லாஹ் என்று கூறினாலும் சரி, பேச கற்பித்தவன், கற்று தந்தவன் அல்லாஹ் என்று கூறினாலும் சரி, அல்லாஹ் சொல்ல நான் எழுதினேன் என்று கூறினாலும் சரி எதார்த்தத்தில் அது குற்றம் இல்லை என்ற கருத்தையே திருக்குர்ஆன் நமக்கு தெளிவு படுத்துகிறது. இவ்வாறு கூறுபவர்கள் நபியாக ரஸூலாகத் தான் இருக்க வேண்டும் என்ற எந்த வரையறையும் இஸ்லாத்தில் கிடையாது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

நடைமுறையில் சில உதாரணங்கள்

 

தப்லீக் ஜமாஅத் சகோதரிகளிடம் கேளுங்கள் 40 நாள் ஜமாஅத் போனால் குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வது. யார் உணவளிப்பது? எப்படி சம்பாதிப்பது என்று கேளுங்கள்? அவர்களின் பதில் :- அல்லாஹ் பார்த்து கொள்வான். அல்லாஹ் சாப்பாடு கொடுப்பான். அல்லாஹ் தருவான் என்றே கூறுவார்கள். இன்னும் சிலர்கள் எனக்கு ஜமாஅத் போக அல்லாஹ் பணம் தந்தான் உதவி செய்தான் என்றும் கூறுவது நடைமுறையில் தான் உள்ளது……… அச்சமயம் நாம் அவர்களிடம் பள்ளியில் 40 நாள் தங்கினால் அல்லாஹ் எப்படி தருவான் என்ற கேள்வியை கேட்கலாமே தவிர. அவர்கள் கூறிய அந்த வார்த்தைகள் குர்ஆன் ஹதீஸ் பார்வையில் குற்றமாக கருதப்படமாட்டாது.

 

இன்னும் ஓர் உதாரணம் :- உணவுக்கு அழைந்து‌ திருந்த ஒருவருக்கு அந்த பாதையால் சென்ற ஓர் மனிதர் உணவு வாங்கி கொடுத்தார். அச்சமயம் அவர்களிடம் சென்று உனக்கு உணவு யார் தந்தது என்று கேட்டாள்? அவர்களின் பதில் :- இந்த மனிதர் தந்தார் என்று கூறுவார்கள். இன்னும் சிலர் இந்த மனிதர் மூலம் அல்லாஹ் தந்தான் என்றும் கூறுவார்கள். இன்னும் சிலர் எனக்கு அல்லாஹ் தந்தான் உணவளிப்பவன் அவன் என்றும் கூறுவார்கள். இது போன்ற வார்த்தைகள் அதிகம் அதிகம் முஸ்லிம்களால் பயன் படுத்தப்படுகிறது. பேச்சுவழக்கு நடைமுறைகளிலும் உள்ளது. இது போன்ற வார்த்தைகளை வெவ்வேறு கோணங்களில் கூறினாலும் அதன் எதார்த்தம் அல்லாஹ்வின் மூலம் கிடைக்கப் பெறுகிறது. அல்லாஹ் தருகிறான் என்பதே இதன் நோக்கமாகும்.

 

எனவே :- இதில் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அல்லாஹ் நேரடியாக வந்து உணவளித்தான் உதவி செய்தான் என்ற வார்த்தைகள் குற்றமாகும். அல்லாஹ் உணவளித்தான் உதவி செய்தான் என்ற பொதுவான வார்த்தைகள் குற்றம் ஆகாது. இதன் அர்த்தம் :- (அல்லாஹ்வின் மூலம் ஏதோ ஓர் வகையில் உணவளிக்கபடுகிறது உதவி கிடைகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்) மேலும் அல்லாஹ் நேரடியாக வந்து ஞானத்தை கற்றுத் தந்தான் என்ற வார்த்தைகள் குற்றமாகும். அல்லாஹ் ஞானத்தை கற்றுத் தந்தான் என்ற பொதுவான வார்த்தைகள் குற்றமாகாது. இதன் அர்த்தம் :- (அல்லாஹ்வின் மூலம் எனக்கு ஞானம் கிடைக்க பெறுகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்) மேலும் அல்லாஹ் வஹீ மூலமோ நேரடியாகவோ வந்து அவன் சொல்ல நான் எழுதினேன் என்ற வார்த்தைகள் குற்றமாகும். அல்லாஹ் சொல்ல நான் எழுதினேன் என்ற பொதுவான வார்த்தைகளை அப்துர் ரவூப் மிஸ்பாஹி அவர்கள் கூறி இருந்தால் குற்றமாகாது என்ற கருத்தை நாம் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம். இதன் அர்த்தம் :- (அல்லாஹ் கொடுத்த அறிவு ஞானத்தை கொண்டு வான்மறை மறுக்கும் வஹாபிஷம் என்ற நூலை நான் எழுதுகிறேன் என்று பொருள் கொள்ள வேண்டும்) இதுவெல்லாம் பேச்சுவழக்கு மக்களின் நடைமுறையில் உள்ளதாகும். இது போன்ற கருத்துக்களை மறுக்க முற்படுவது குர்ஆன் ஹதீஸ்களை மறுக்க முற்படுவதற்கு சமம் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தவ்ஹீத் ஜமாத் ரஸ்மின் அவர்களே! குர்ஆன் ஹதீஸை நீங்கள் ஒழுங்கு முறை படி படியுங்கள். அல்லாஹ் நபியுடன் மட்டும் தான் பேசுவான். ஆக அப்துர் ரவூப் மௌலவி நபி என்று சொல்கிறார் என்று கிர்க்கு தனமாக ஏன் பேசுகிறீர்கள்?

 

وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ‏

 

குர்ஆன் கூறுகிறது உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான்.

சூரா நஹ்ல் ஆயத் 68

 

தேனீ பூச்சியிடம் அல்லாஹ் பேசினான் என்றால் தேனீ பூச்சி நபி! அல்லது தேனீ பூச்சி ரஸூல் என்று ரஸ்மின் கூறுவார் போல😃 ஆக அப்துர் ரவூப் மௌலவி அவர்கள் எனக்கு வஹி வருகிறது, நேரடியாக வந்து அல்லாஹ் பேசினான் என்று கூறவில்லையே!. தவறாக கற்பனை செய்து. குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் பேசும் ரஸ்மின் அவர்களே? நடுநிலையாக மேற்கூறிய பதிவை பார்த்து தெளிவு பெறுங்கள். அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ வட்சப் குரூப்பில் உங்களை அதிக தடைவை முன்னர் இணைக்கப்பட்டும் நீங்கள் உடனே வெளியேறி உள்ளீர்கள்? இன்ஷா அல்லாஹ் முடிந்தால் உள்நுழைந்து உங்கள் ஷிர்க் இணைவைப்பு பற்றி தொண்டை கிழியே ஒரு நிமிடமாவது பேசி பாருங்களேன்! இன்ஷா அல்லாஹ் குர்ஆன் ஹதீஸை கொண்டு தெளிவு பெறுவீர்கள் என்று நினைக்கிறேன்.

 

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது உங்களையும், உங்கள் செயல்களையும் அல்லாஹ்வே படைத்தான்.

சூரா ஸாஃப்பாத் ஆயத் 96

 

எல்லாம் அவன் செயல் என்று கூறுவது மக்களின் நடைமுறையில் உள்ளது. அதைத்தான் குர்ஆனும் கூறுகிறது. ஆக அல்லாஹ் சொல்ல நான் எழுதினேன் என்ற பொதுவான வார்த்தைகள் அந்த செயல் இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் கிடையாது. இதன் அர்த்தம் மேற்கூறப்பட்டுள்ளது என்பதை மீண்டும் ஞாபகம் ஊட்டுகிறேன்.

 

குறிப்பு :- அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! நம்முடைய எதிரிகளாக இருந்தாலும் சரி. இல்லா விட்டாலும் சரி. அவர்கள் பலஹீனமானவர்களாக கஷ்டத்தில் இருக்கும் போதும். அவர்கள் தவரை ஏற்று மண்ணிப்பு கேட்ட பின்னரும். அவர்கள் எந்த நோக்கில் இவ்வாறு கூறினார்கள் என்பதை புரிந்தும் புரியாதது போல். இதுதான் சந்தர்ப்பம் என்று, தன் எதிரியிடம் தன் பகையை தீர்த்துக் கொள்ள முற்படுவது. இதை காரணமாக வைத்து அவர்களை இழிவு படுத்த முற்படுவது முற்றிலும் தவறு. அது கோழைத்தனமாகும். ஆக குர்ஆன் ஹதீஸை மறுப்பவர்களே எங்கள் எதிரிகள். அது அல்லாத வேறு யாரும் எங்கள் எதிரிகள் கிடையாது. நாம் ஒரு ஆலிம் என்று சொல்லவோ. அல்லது அடுத்தவர்கள் எங்களை ஆலிம் என்று சொல்ல வேண்டும் என்பதையோ நாங்கள் விரும்புவதும் கிடையாது. இன்ஷா அல்லாஹ் தவறாக புரிந்திருந்தால் தெளிவு பெறுங்கள்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.