அல்லாஹ் மனிதனை ஜோடியாகவும் சந்ததியினர்களாகவும் படைத்துள்ளான்

73

அல்லாஹ் மனிதனை ஜோடியாகவும் சந்ததியினர்களாகவும் படைத்துள்ளான்

 

يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْــٴًـــا وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْبَـتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيْجٍ‏

 

குர்ஆன் கூறுகிறது மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால் (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்தே (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதனை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதனை) குறைவடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம்முடைய வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்து விடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

சூரா ஹஜ் ஆயத் 5

 

خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْ بَعْدِ خَلْقٍ فِىْ ظُلُمٰتٍ ثَلٰثٍ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاَ نّٰى تُصْرَفُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கின்றான்.) அன்றி, (உங்களுடைய நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கின்றான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கின்றான். இந்த அல்லாஹ்வே உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?

சூரா ஜுமர் ஆயத் 6

 

وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّجَعَلَ لَـكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ‏

 

குர்ஆன் கூறுகிறது உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். அன்றி, உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் உற்பத்தி செய்து உங்களுக்கு நல்ல உணவுகளையும் புகட்டுகிறான். (இவ்வாறிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவைகளை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நிராகரிக்கின்றனரா?

சூரா நஹ்ல் ஆயத் 72

 

اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ

 

குர்ஆன் கூறுகிறது அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கின்றோம்.

சூரா ஷுஃரா ஆயத் 7

 

وَمِنْ كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

சூரா தாரியாத் ஆயத் 49

 

♦️ஆரம்ப மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து அவர்களுக்கு ஜோடியான துனைவியர் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்து. அவர்களிலிருந்து அவர்களுடைய சந்ததியினர்களை ஜோடியாக அழிகிய ஓர் அமைப்பாக படைத்து மட்டுமின்றி பூமியிலுள்ள புற்பூண்டுகள் ஏனைய படைப்புகளையும் இறைவன் ஜோடியாகவே படைத்து பரிபாலனம் செய்கிறான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே இது இறைவனின் மாபெரும் அத்தாட்சி என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.