அஸர் தொழுகைக்கு பின் ஓதும் துஆ
அஸர் தொழுகைக்கு பின் ஓதும் துஆ
اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ انَّا نَسْئَلُكَ سَلاَمَةً فِي الدِّيْنِ وَالدُّنْيَا وَعَافِيَةٍ فِي الْجَسَدِ وَزِيَادَةً فِي الْعِلْمِ وَالْهُدي وَبَرَكَةً فِي الّرِزْقِ وَصِحَّةً فِي الْعَقْلِ وَتَوْبَةً قَبْلَ الْمَوْتِ وَرَاحَةً عِنْدَالْمَوْتِ وَمَغْفِرَةً بَعْدَالْمَوْتِ يَاسَامِعَ كُلِّ صَوْتٍ هَوِّنْ عَلَيْنَا سَكْرَاتِ الْمَوْتِ. رَبَّنَا لاَتُزِغْ قُلُوْبَنَا بَعْدَاِذْهَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً اٍنَّكَ اَنْتَ الْوَهَّابُ, وَصَلَّي اللّهُ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّ االِه وَصَحْبِه اَجْمَعِيْنَ وَالْحَمْدُللّهِ رَبِّ الْعلَمِيْنَ
இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் பரக்கத்தும் ஸலாமும் அருள் புரிவாயாக! இறைவனே! நிச்சயமதாக நாங்கள் உன்னிடம் சன்மார்க்கத்திலும் உலக விசயத்திலும் சேமமானதையே கேட்டுக் கொள்கிறோம். இன்னும் சரீரத்தின் சௌக்கியத்தையும் கல்வியில் அபிவிருத்தியையும் புத்தியில் இணக்கமானதையும் மரணத்திற்கு முன் மன்னிப்பையும் மரணத்தின்போது சுக சௌக்கியத்தையும் மரணித்த பிறகு பாப மன்னிப்பையும் அருள்புரிவாயாக! சகலவித சப்தங்களையும் கேட்பவனே! மரணத்துடைய கஷ்டங்களை விட்டும் நிவர்த்திச் செய்வாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு (இஸ்லாம்) சன்மார்க்கம் அளித்தருளிய பின், எங்கள் ஹிருதயங்களைப் பேதகபடுத்தி விடாதே! உன்னிடமிருந்து எங்களுக்குப் பேரருளைத் தந்தருள்வாயாக! நிச்சயமாக நீயே பேரருள் புரிபவனாக இருக்கின்றாய். மேலும் அல்லாஹ் உடைய ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும், அவருடைய தோழர்கள் மீதும் உண்டாவதாக! சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்