அஹ்லு பைத்தை பின்பற்றவது அவசியமாகும்

61

அஹ்லு பைத்தை பின்பற்றவது அவசியமாகும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنِ زَيْدَ بْنَ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ… قَالَ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا، بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ، وَوَعَظَ وَذَكَّرَ، ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ، أَلَا أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ، وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ: أَوَّلُهُمَا كِتَابُ اللهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللهِ، وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللهِ وَرَغَّبَ فِيهِ، ثُمَّ قَالَ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللهَ فِي أَهْلِ بَيْتِي» فَقَالَ لَهُ حُصَيْنٌ: وَمَنْ أَهْلُ بَيْتِهِ؟ يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ؟ قَالَ: نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ

 

أخرجه مسلم في صحيحه وأحمد في “المسند وابن خزيمة في صحيحه

 

ஸைத் இப்னு அர்க்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஒரு நாள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள (கும்மு) எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, இறைவாழ்த்துக்குப் பின்! மக்களே! கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதுவர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள். பிறகு, (மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன் என்று (மூன்று முறை) கூறினார்கள். அப்போது ஸைத் இப்னு அர்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்மத்துல்லாஹ்) அவர்கள், ஸைதே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்பத்தார் யார்? நபியவர்களின் துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் இப்னு அர்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரும் அவர்களின் குடும்பத்தார்கள் தான் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- யஸீத் இப்னு ஹய்யான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4782, அஹ்மது 19265 இப்னு குஸைமா 2357

 

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي تَارِكٌ فِيكُمْ خَلِيفَتَيْنِ كِتَابُ اللَّهِ وَأَهْلُ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ جَمِيعًا

 

تعليق شعيب الأرنؤوط : حديث صحيح بشواهده دون قوله وإنهما لن يتفرقا حتى يردا علي الحوض جميعا ” مسند احمد

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

 

அறிவிப்பவர் :- ஸைத் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 21654

 

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي تَارِكٌ فِيكُمُ الْخَلِيفَتَيْنِ مِنْ بَعْدِي كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ

 

مصنف ابن ابي شيبة : إسناده ضعيف والحديث صحيح له شواهد والهيثمي في مجمع الزوائد : رواه أحمد وإسناده جيد ومصطفى بن العدوي في الصحيح المسند ص248 : صحيح لغيره ومحمد عباس في فضائل الصحابة : إسناده حسن لغيره

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் உங்களிடம் எனக்கு பின் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும். மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

 

அறிவிப்பவர் :- ஸைத் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 21578 இப்னு அபீஷைபா 31679

 

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي مَقْبُوضٌ وَإِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمُ الثَّقَلَيْنِ كِتَابَ اللَّهِ وَأَهْلَ بَيْتِي وإِنَّكُمْ لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا وَأَنَّهُ لَنْ تَقُومَ السَّاعَةُ حَتَّى يُبْتَغَى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا تُبْتَغَى الضَّالَّةُ فَلَا تُوجَدُ

 

رواه البزار وفيه الحرث وهو ضعيف

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் கைப்பற்றப்பட்டு (மரணித்து) விடுவேன். நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பம் ஆகும். எனவே அவ்விரண்டிற்கு பின்னால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். காணாமல் போன பொருளை தேடப்பட்டு அது கிடைக்காமல் போவதைப் போன்று நபித்தோழர்களையும் தேடப்படும் ஒரு காலம் வராமல் மறுமை நாள் ஏற்படாது.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பஸ்ஸார் 864

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّه رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ.. رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ… يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي

 

رواه الترمذي وهذا حديث حسن غريب وصححه الألباني صحيح الترمذي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஹஜ் அறபா நாளன்று கூறினார்கள். மக்களே! நான் உங்களிடம் விட்டுச் செல்லும் இரண்டை நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாமல் நீங்கள் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3786

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ   قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنِّي تَارِكٌ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا بَعْدِي أَمْرَيْنِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ: كِتَابَ اللهِ، حَبَلٌ مَمْدُودٌ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ

 

تعليق شعيب الأرنؤوط : حديث صحيح دون قوله وإنهما لن يفترقا حتى يردا علي الحوض مسند أحمد

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்களே! நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று மற்றதை விட பெரியதாகும். அது தான் அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும். மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

 

அறிவிப்பவர் :- அபூ ஸயீத் அல்குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அல்முஃஜமுல் கபீர் 2678

 

عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، قَالَ لَقِيتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، دَاخِلًا عَلَى الْمُخْتَارِ، أَوْ خَارِجًا، قَالَ قُلْتَ حَدِيثًا بَلَغَنِي عَنْكَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ كِتَابَ اللهِ وَعِتْرَتِي؟ قَالَ نَعَمْ

 

إسناده صحيح رجاله رجال الصحيح” السلسلة الصحيحة للألباني

 

நான் ஸைத் இப்னு அர்க்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம். நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவை அல்லாஹ்வின் வேதம், எனது குடும்பம்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என நீங்கள் அறிவித்ததாக எனக்கு செய்தி கிடைத்தது. அது உண்மையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அலி இப்னு ரபீஆ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் அஹ்மது 19313 அல் முஃஜமுல் கபீர் 4980

 

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي تَارِكٌ فِيكُمْ مَا إِنْ تَمَسَّكْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا بَعْدِي أَحَدُهُمَا أَعْظَمُ مِنَ الآخَرِ كِتَابُ اللَّهِ حَبْلٌ مَمْدُودٌ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ. وَعِتْرَتِي أَهْلُ بَيْتِي، وَلَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الحَوْضَ فَانْظُرُوا كَيْفَ تَخْلُفُونِي فِيهِمَا

 

رواه الترمذي وهذا حديث حسن غريب، وصححه الألباني ورواه الحاكم وصححه ” فحديث العترة بكل هذا صحيح ومشهور

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் விட்டுச் செல்லக் கூடிய இரண்டை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்வீர்களானால், எனக்குப் பின் எப்போதும் நீங்கள் வழி தவற மாட்டீர்கள். அவ்விரண்டில் முதலாவது மற்றதை விட மகத்தானது. ஒன்று அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கௌஸரிடம் என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது. எனக்குபின்னால் இவ்விரண்டின் விசயத்தில் நீங்கள் எப்படி நடக்கவேண்டும் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்.

 

அறிவிப்பவர் :- ஸைத் இப்னு அர்க்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3788

 

عَنِ زَيْدَ بْنَ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ.. أَيُّهَا النَّاسُ، إِنِّي تَارِكٌ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا إِنِ اتَّبَعْتُمُوهُمَا، وَهُمَا كِتَابُ اللَّهِ، وَأَهْلُ بَيْتِي عِتْرَتِي

 

مستدرك الحاكم : هذا حديث صحيح على شرط الشيخين و لم يخرجاه بطوله

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்களே நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பின்பற்றி நடந்தால், வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும்.

 

அறிவிப்பவர் :- ஸைத் இப்னு அர்க்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 4577

 

மேற்கூறிய ஹதீஸ்களை கூர்ந்து கவனிக்கும் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் செயல் அங்கிகாரம் என்றழைக்கப்படும் சுன்னத்தை ஏற்க்கொள்பவர்கள் இறைவேதம் திர்குர்ஆன் மற்றும் அஹ்லு பைத் எனும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தையும் பின்பற்றுவது அவசியமாகும்.

 

குறிப்பு :- அஹ்லு பைத்தினர்கள் ஸஹாபாக்களிலும் அடங்குவார்கள். ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் தாபீஈன்கள், தபஅத்தாபீன்கள் இமாம்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களை பின்பற்றுவது அவசியமாகும். இருப்பினும் சமகாலத்தில் உள்ள அஹ்லு பைத்தினர்கள் குர்ஆன் ஹதீஸிக்கு மாற்றமாக ஓர் கருத்தை கூறினால் அதனை பின்பற்றுவது அவசியம் கிடையாது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.