ஆரம்ப படைப்பு நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் பேரொளி பற்றிய ஆய்வுத் தொகுப்பு

505

ஆரம்ப படைப்பு நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் பேரொளி பற்றிய ஆய்வுத் தொகுப்பு

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

இஸ்லாத்தின் பார்வையில் ஆரம்ப படைப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் ஒளியாகும். இருப்பினும் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்ட சிலர்கள் ஆரம்ப படைப்பு அர்ஷ்” சிம்மாசனம் என்றும், தண்ணீர் என்றும், எழுதுகோல் என்றும், காற்று என்றும் மடையர்கள் போன்று வாதிடுகின்றனர். அவர்களுக்கு திர்குர்ஆன் முற்றுப் புள்ளி வைக்கிறது.

 

اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

 

குர்ஆன் கூறுகிறது அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை “ஆகுக!” எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகின்றது.

சூரா யாஸீன் ஆயத் 82

 

இறைவன் ஓர் பொருளை படைக்க நாடினால் (كن) நீ ஆகுக! என்று முன்னிலையில் இருப்பதை பார்த்து கூறுவான் (فيكون) உடனே அது ஆகிவிடும். இறைவன் ஆரம்ப படைப்பை படைக்க முன்னர் எந்த ஒரு பொருளும் அதாவது எந்த ஒரு வஸ்துக்களும் இருக்கவில்லை அவனைத் தவிர. அவன் ஆரம்ப படைப்பை படைக்க நாடிய போது (كن) நீ ஆகுக! என்று எதனை பார்த்துக் கூறினான் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

இறைவன் ஆரம்ப படைப்பை படைக்க நாடிய போது (كن) நீ ஆகுக! என்று தன்னை தானே பார்த்துக் கூறிக் கொண்டான். அச்சமயம் அவனிளிருந்து வெளிப்பட்டது தான் நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் பேரொளியே தவிர அர்ஷ்” சிம்மாசனம் அல்ல, தண்ணீர் அல்ல, எழுதுகோல் அல்ல, காற்று அல்ல என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

لَا شَرِيْكَ لَهٗ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அவனுக்கு யாதொரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்” (என்றும் கூறுங்கள்.)

சூரா அன்ஆம் ஆயத் 163

 

وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அன்றி, அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மையான வனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் கூறுங்கள்).

சூரா ஜுமர் ஆயத் 12

 

قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது “ரஹ்மானுக்கு சந்ததி இருக்கும்பட்சத்தில் (அதனை) வணங்குபவர்களில் நானே முதன்மையானவனாக இருப்பேன் என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

சூரா ஜுஃரூப் ஆயத் 81

 

வணங்குவோரில் முதன்மையானவர்களாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்குகிறார்கள். இவைகளை தெளிவான முறையில் கூறப்போனால் ஒவ்வொரு படைப்புக்களையும் வெவ்வேறு விதமாக இறைவன் படைத்துள்ளான். அந்த படைப்பினங்களில் ஆரம்பமாக அவனை வணங்கியது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு வஸ்துக்கள்” படைப்புக்களும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பது மட்டுமின்றி அவனை வணங்கி வழிபடுகிறது

 

اَوَلَمْ يَرَوْا اِلٰى مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَىْءٍ يَّتَفَيَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْيَمِيْنِ وَالشَّمَآٮِٕلِ سُجَّدًا لِّلَّهِ وَهُمْ دٰخِرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான்.

சூரா நஹ்ல் ஆயத் 48

 

وَلِلّٰهِ يَسْجُدُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰۤٮِٕكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் (இப்லீஸைப்போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.

சூரா நஹ்ல் ஆயத் 49

 

வானம் பூமியிலுள்ள மற்ற ஒவ்வொரு வஸ்துக்கள்” படைப்புக்களும் இறைவனை வணங்குகின்றன. உதாரணமாக அர்ஷ் என்னும் சிம்மாசனம்” தண்ணீர்” எழுதுகோல்” காற்று” இவையெல்லாம் படைக்கப்பட்ட மறுகணமே படைத்த இறைவனை வணங்குகின்றன. இருப்பினும் வணக்கம் செய்யக்கூடிய ஒவ்வொரு படைப்புகளுக்கும் முன்னால் ஆரம்பமாக வணக்கத்தில் ஈடுபட்டவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பதாக இறைவன் திர்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

குறிப்பு :- இறைவனால் படைக்கப்பட்ட அர்ஷ் என்னும் சிம்மாசனம்” தண்ணீர்” எழுதுகோல்” காற்று” இவைகளில் எதுவும் ஆரம்ப படைப்பு கிடையாது. காரணம் இவைகளில் ஏதாவது ஒன்றை இறைவன் ஆரம்ப படைப்பாக படைத்திருந்தால் அவைகளை படைத்த மறுகணமே அவனை அவைகள் வணங்கி இருக்கும். ஆனால் இறைவன் கூறுகிறான் ஆரம்பமாக என்னை வணங்கியவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்று மேற்கூறிய இறைவசனத்தில் கூறியுள்ளேன்.

 

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வணங்குவோரில் முதன்மையானவர்களாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதாக இறைவன் கூறியதன் அர்த்தம் :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி நூரே முஹம்மதிய்யா எனும் ஆரம்ப படைப்பை குறிக்கும். காரணம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளியை ஆரம்பமாக இறைவன் அவனிலிருந்தும் வெளிப்படுத்தினான். அவை வெளிப்பட்ட மறுகணமே அவனை வணங்கி வழிபட்டது என்பதே எதார்த்தமான உன்மையாகும்.

 

ஆரம்ப படைப்பு நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் பேரொளியாகும்

 

عَن جَابر بن عبد الله الْأنْصَارِيّ رَضِي الله عَنْهُمَا قَالَ قلت يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي أَخْبرنِي عَن أوّل شَيْء خلقه الله قبل الْأَشْيَاء؟ قَالَ يَا جَابر إِن الله خلق قبل الْأَشْيَاء نور نبيك مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم من نوره فَجعل ذَلِك النُّور يَدُور بِالْقُدْرَةِ حَيْثُ شَاءَ الله، وَلم يكن فِي ذَلِك الْوَقْت لوح وَلَا قلم وَلَا جنَّة وَلَا نَار وَلَا ملك وَلَا سَمَاء وَلَا أَرض وَلَا شمس وَلَا قمر وَلَا إنس وَلَا جن، فَلَمَّا أَرَادَ الله تَعَالَى أَن يخلق الْخلق قسم ذَلِك النُّور أَرْبَعَة أَجزَاء: فخلق من الْجُزْء الأوّل الْقَلَم، وَمن الثَّانِي اللَّوْح، وَمن الثَّالِث الْعَرْش، ثمَّ قسم الْجُزْء الرَّابِع أَرْبَعَة أَجزَاء: فخلق من الأول حَملَة الْعَرْش، وَمن الثَّانِي الْكُرْسِيّ، وَمن الثَّالِث بَاقِي الْمَلَائِكَة ثمَّ قسم الرَّابِع أَرْبَعَة أَجزَاء فخلق من الأول نور أبصار الْمُؤمنِينَ، وَمن الثَّانِي نور قُلُوبهم وَهِي الْمعرفَة بِاللَّه وَمن الثَّالِث نور أنسهم وَهُوَ التَّوْحِيد لَا إِلَه إِلَّا الله مُحَمَّد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم

 

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் என் தாயும் என் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான். இந்த ஒளியானது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி பயணித்தது, அந்நேரத்தில் சொர்க்கம், நரகம், எழுதுகோள், லவ்ஹு, வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனித இனம் என எதுவும் படைக்கப்படவில்லை. அல்லாஹ் படைப்பினங்களை படைக்க நாடிய போது, அந்த ஒளியை நான்கு பாகங்களாக பிரித்து, முதல் பாகத்திலிருந்து எழுதுகோலையும், இரண்டாவதிலிருந்து லவ்ஹையும், மூன்றாவதிலிருந்து அர்ஷையும் படைத்தான். நான்காவது பாகத்தை மீண்டும் நான்கு பாகங்களாக ஆக்கி, முதலாவதிலிருந்து அர்ஷை சுமக்கும் மலக்குமார்களையும், இரண்டாவதிலிருந்து குர்ஸியையும், மூன்றாவதிலிருந்து மலக்குமார்களையும் படைத்தான். மீதமுள்ள ஒரு பாகத்தை மீண்டும் நான்காக பிரித்து, முதலாவதிலிருந்து வானங்களையும், இரண்டாவதிலிருந்து கோளங்களையும், மூன்றாவதிலிருந்து சுவனத்தையும், பூமியையும் படைத்தான். ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மீண்டும் நான்காவதை நான்கு பாகங்களாக பிரித்து, அவற்றில் முதலாவதிலிருந்து மூஃமின்கள் காணக்கூடிய ஒளியையும், இரண்டாவதிலிருந்து மூஃமின்களின் ஒளி பொருந்திய இதயங்களையும், மூன்றாவதிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹ் எனும் ஏகத்துவ கலிமாவை மொழியக்கூடிய மூஃமின்களின் நாவுகளையும் படைத்தான்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ரஸ்ஸாக் 99 பதாவா ஹதீஸிய்யா 44 மாவாகிபுல் லதுனியா 1/71

 

ஆரம்ப படைப்பு நூரே முஹம்மதிய்யா என்றழைக்கப்படும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாபெரும் பேரொளி என்பதை திர்குர்ஆன் ஹதீஸை மூலாதாரமாக வைத்து பல அறிஞர்கள் உருதி செய்துள்ளார்கள்.

 

ஆதாரம் :- மவாஹிபுல்ல
துன்னியா 1/55 ஷரஹு ஷர்க்கானி 1/27 மதாரிஜுன் நுபுவ்வத் 2/609 மதாலிஉல் மஸர்ராத் 1/265 ஷறஹுஷ் ஷிபா 1/509

 

ﻗَﺎﻝَ ﺁﺩﻡ ﻳَﺎ ﺭﺏ ﺃَﺳﺄَﻟﻚ ﺑِﺤَﻖ ﻣُﺤَﻤَّﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳﻠﻢ ﻟﻤﺎ ﻏﻔﺮﺕ ﻟﻲ؟ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻠﻪ ﺗَﻌَﺎﻟَﻰ : ﻳَﺎ ﺁﺩﻡ ﻭَﻛَﻴﻒ ﻋﺮﻓﺖ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻭَﻟﻢ ﺃﺧﻠﻘﻪ؟ ﻗَﺎﻝَ ﻳَﺎ ﺭﺏ ﻟﻤﺎ ﺧﻠﻘﺘﻨﻲ ﺑِﻴَﺪِﻙ ﻭﻧﻔﺨْﺖَ ﻓﻲَّ ﻣﻦ ﺭﻭﺣﻚ ﺭﻓﻌﺖُ ﺭَﺃْﺳِﻲ ﻓَﺮَﺃَﻳْﺖ ﻋﻠﻰ ﻗَﻮَﺍﺋِﻢ ﺍﻟْﻌَﺮْﺵ ﻣَﻜْﺘُﻮﺑًﺎ ﻟَﺎ ﺇِﻟَﻪ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠﻪ ﻣُﺤَﻤَّﺪ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠﻪ، ﻓَﻌﻠﻤﺖ ﺃَﻧَّﻚ ﻟﻢ ﺗﻀﻒ ﺇِﻟَﻰ ﺍﺳْﻤﻚ ﺇِﻟَّﺎ ﺃﺣﺐَّ ﺍﻟْﺨﻠﻖ ﺇِﻟَﻴْﻚ ﻗَﺎﻝَ ﺍﻟﻠﻪ : ﻳَﺎ ﺁﺩﻡ ﺇِﻧَّﻪ ﻷﺣﺐُّ ﺍﻟْﺨﻠﻖ ﺇﻟﻲّ، ﻭﺇﺫْ ﺳَﺄَﻟﺘﻨِﻲ ﺑِﺤَﻖ ﻣُﺤَﻤَّﺪ ﻓﻘﺪ ﻏَﻔﺮْﺕُ ﻟَﻚ ﻭَﻟَﻮْﻟَﺎ ﻣُﺤَﻤَّﺪ ﻣَﺎ ﻏﻔﺮﺕ ﻟَﻚ ‏

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (எனது பொருட்டால்) முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டதும் அவரை எப்படி அறிந்தீர் என்று இறைவன் கேட்டான். அதற்கு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம், உன் திருக்கரத்தால் என்னைப் படைத்து உன் றூஹை என்னுள் ஊதினாய். அப்போது தலையுயர்த்தி அர்ஷின் தூண்களில் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்ல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். படைப்பில் உனக்கு விரும்பானவரைத்தான் உன் பெயரோடு சேர்த்திருப்பாய் என்று அறிந்து கொண்டேன். அச்சமயம் இறைவன் கூறினான். ஆதமே!, அவர் எனக்கு படைப்பினங்களிலே மிகவும் பிரியமானவர். முஹம்மதை கொண்டு என்னிடம் கேட்டதால் உன்னுடைய பாவத்தை மன்னித்து விட்டேன், முஹம்மது இல்லையென்றால், நான் உன்னை மன்னித்திருக்க மாட்டேன்.

 

ஆதாரம் :- ஹாகிம்” முஸ்தத்ரக் 2/615 இப்னு அஸாகிர் 2/323 பைஹகி” தலாயிலுன் நுப்வா 5/488

 

ﻓﻠﻮﻻ ﻣُﺤَﻤَّﺪ ﻣَﺎ ﺧﻠﻘﺖ ﺁﺩﻡ، ﻭَﻟَﻮْﻟَﺎ ﻣُﺤَﻤَّﺪ ﻣَﺎ ﺧﻠﻘْﺖُ ﺍﻟْﺠﻨَّﺔ ﻭَﺍﻟﻨَّﺎﺭ، ﻭَﻟَﻘَﺪ ﺧﻠﻘﺖ ﺍﻟْﻌَﺮْﺵ ﻋﻠﻰ ﺍﻟﻤَﺎﺀ ﻓﺎﺿﻄﺮﺏ ﻓَﻜﺘﺒﺖ ﻋَﻠَﻴْﻪِ ﻟَﺎ ﺇِﻟَﻪ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠﻪ ﻣُﺤَﻤَّﺪ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠﻪ ﻓﺴﻜﻦ ‏

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். முஹம்மதை படைத்திருக்காவிட்டால் ஆதத்தைப் படைத்திருக்கமாட்டேன். சொர்க்கம் நரகம் எதனையும் படைத்திருக்க மாட்டேன். அர்ஷை நீரில் படைத்தேன். அது துழும்பியது அதில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று அதில் எழுதினேன் அது அடங்கி விட்டது.

 

அறிவிப்பவர் :- அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்” முஸ்தத்ரக் 2/671

 

ان الملائكة امروا بالسجود لآدم عليه السلام لاجل أن نور سيدنا محمد صلي الله عليه واله وسلم كان في جبهته

 

நிச்சயமாக மலக்குமார்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஜூது செய்ய பணிக்கப்பட்டதன் நோக்கம், அவர்களின் நெற்றியில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (நூரே முஹம்மதிய்யா) எனும் பேரொளி இலங்கிக் கொண்டிருந்ததனால் தான்.

 

நூல் ஆதாரம் :- அன்வாருல் முஹம்மதிய்யா 255

 

 

كُنْتُ نَبِيًّا وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் உடலுக்கும், ருஹூக்கும் இடையில் இருந்தபோதே நான் நபியாக இருந்தேன்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3609 அஹ்மது 16623, 20596, 23212 ஹாகிம்” முஸ்தத்ரக் 4209

 

كُنْتُ نَبِيًّا وَآدَمُ بَيْنَ الْمَاءِ وَالطِّينِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்குமிடையில் இருக்கும் போது நான் நபியாக இருந்தேன்

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸிஹ்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மிஷ்காத் 513 துர்ருல் மன்சூர் 126

 

كُنْتُ أَوَّلَ النَّبِيِّينَ فِي الْخَلْقِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். படைப்புகளின் ஆரம்பத்தில் நபியாக இருந்தவன் நானே.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்” தப்ரானி” முஸ்னத் 4/35 இப்னு அதீ” காமில் 3/1209

 

كُنْتُ أَوَّلَ النَّاسِ فِي الْخَلْقِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மனித படைப்புக்களின் ஆரம்பமானவன் நானே.

 

அறிவிப்பவர் :- கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அபீஷைபா 33924 தப்ரானி” முஸ்னத் 4/34 ஸயித்” தபகாத் 1/124 துர்ருல் மன்சூர் 6/568

 

يَا مُحَمَّدُ لَوْلَاكَ مَا خَلَقْتُ الْجَنَّةَ، وَلَوْلَاكَ مَا خَلَقْتُ النَّارَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். நபியே நாயகமே உங்களை படைக்கவில்லை என்றால் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்திருக்க மாட்டான்.

 

அறிவிப்பவர் :- அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்” முஸ்தத்ரக் 2/615

 

يَا مُحَمَّدُ لَوْلَاكَ مَا خَلَقْتُ الدُّنْيَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். நபியே நாயகமே உங்களை படைக்கவில்லை என்றால் இவ்வுலகையும் (இறைவன்) படைத்திருக்க மாட்டான்.

 

அறிவிப்பவர் :- அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இப்னு அஸாகிர் 2/310

 

இடை குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படைப்புகளில் ஆரம்பமானவர்கள். அவர்கள் ஆரம்ப நபியாக இருந்தார்கள். மேலும் ஆரம்ப மனிதராக இருந்தார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் கூறப்படுவதன் அர்த்தம் :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாபெரும் பேரொளி நூரே முஹம்மதிய்யாவை குறிக்கும்.

 

குறிப்பு :- ஆரம்ப மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இங்கு நாம் கூறுவது ஆரம்ப மனிதர் அல்ல ஆரம்ப படைப்பு இறைவனின் வெளிப்பாடு நூரே முஹம்மதிய்யா என்னும் மாபெரும் ஒளியை பற்றியதாகும். எனவே ஏக இறைவன் அனைத்து படைப்பினங்களையும் படைக்க முன்னர் முதல் முதலில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூரே முஹம்மதிய்யா எனும் பேரொளியை அவனிலிருந்தும் வெளிப்படுத்தினான். அதை கொண்டு மேல் உலகம் கீழ் உலகம் அதிலுள்ள அனைத்து வஸ்துக்களையும் அவனே படைத்தான் என்ற கருத்துக்களை மேற்கூறிய திர்குர்ஆன் மற்றும் பல ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.