இமாம் சத்தமிட்டு பகிரங்கமாக துஆ ஓதுவது ஸுன்னத்தாகும். இதனை மறுப்பது பித்அத்தாகும்
இமாம் சத்தமிட்டு பகிரங்கமாக துஆ ஓதுவது ஸுன்னத்தாகும். இதனை மறுப்பது பித்அத்தாகும்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ
குர்ஆன் கூறுகிறது (முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
சூரா அஹ்ராப் ஆயத் 55
عن أبو الشيخ ابن عباس رضي الله عنه قال التضرع علانية والخفية سر
மேற்கூறிய ஆயத்திற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் கூறுகையில். (தலர்ருஅன்) என்பதற்கு “அலானிய்யதன்” பகிரங்கமாகவும் சத்தமிட்டும் துஆ செய்யுங்கள் என்றும். (ஹுப்யதன்) என்பதற்கு “ஸிர்ரன்” இரகசியமாகவும் மெதுவாகவும் துஆ செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டு கூறினார்கள்.
ஆதாரம் :- தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் அத்துர்ருல் மன்சூர் 3/96
இரகசியமாக மெதுவாக துஆ செய்வது போன்று பகிரங்கமாகவும் சத்தமிட்டும் துஆ செய்யலாம் என்ற கருத்தை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கூறிய வசனத்திற்கு விளக்கமாக கூறிய காரணம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகிரங்கமாக சத்தமிட்டும் துஆ செய்துள்ளதை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூர்ந்து கவனித்துள்ளார்கள். அவை பின்வருமாறு
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ضَمَّنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ اللَّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அணைத்து ‘இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு’ என்று துஆ செய்தார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 75
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْخَلَاءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا قَالَ مَنْ وَضَعَ هَذَا فَأُخْبِرَ فَقَالَ اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் ‘இந்தத் தண்ணீரை யார் வைத்தது?’ என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே ‘இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக’ என்று துஆ செய்தார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 143
மேற்கூறிய இரு ஹதீஸ்களையும் கூர்ந்து கவனியுங்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கல்வி விஷயத்தில் இறைவனிடம் துஆ செய்துள்ளார்கள். அவர்கள் செய்த துஆவை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செவிமடுத்தது மட்டுமின்றி இன்னென்ன துஆக்களை தான் செய்தார்கள் என்று குறிப்பிட்டும் கூறியுள்ளார்கள்.
தவ்ஹீத் சகோதர சகோதரிகளே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகிரங்கமாக சத்தமிட்டு துஆ செய்ததால் தான் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த துஆக்களை செவிமடுப்பவர்கள். ஆனால் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌனமாக துஆ செய்திருந்தால் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த துஆக்களை செவிமடுத்திருக்க மாட்டார்கள், அந்த துஆக்களை குறிப்பிட்டு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு :- மேற்கூறிய திருக்குர்ஆன் ஆயத்திற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஏற்க மறுத்தால் குர்ஆனில் உள்ள 50 ற்கும் அதிகமான துஆக்கள் இடம் பெற்ற இறை வசனங்களையும் பல ஸஹீஹான ஹதீஸ்களையும் மறுக்க வேண்டி வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவை பின்வருமாறு
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
சூரா ஃபாத்திஹா ஆயத் 5,7
சூரத்துல் ஃபாத்திஹாவில் இடம் பெறக்கூடிய துஆக்களை சுபஹ், மஃரிப், இஷா போன்ற தொழுகைகளில் இமாம் சத்தமிட்டு ஓதுகிறார்கள். ஆக துஆகளை சத்தமிட்டு பகிரங்கமாக ஓதுவது பித்அத்து வழிகேடு என்றிருந்தால் தொழுகையில் நிலை என்னவாகும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மேலும் குர்ஆனில் இடம்பெறும் வேரு சில துஆக்கள் :- 2:127-128″ 2:201″ 2:250″ 2:285″ 2:286″ 3:8″ 3:16″ 3:26″ 3:38″ 3:53″ 3:147″ 3:191-194″ 5:83″ 7:23″ 7:89″ 7:126″ 7:149″ 7:156″ 11:47″ 12:101″ 14:41″ 17:24″ 18:10″ 19:4-5″ இது போன்று இன்னும் பல இடங்களில் அதிகமான துஆக்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
இவைகளை கூர்ந்து கவனியுங்கள். திருக்குர்ஆன் அல்லாஹ்வின் இறைவேதமாகும். அதனை மௌனமாகவும் ஓத முடியும். அது போல சத்தமிட்டு பகிரங்கமாகவும் ஓத முடியும் என்பதை அனைவரும் அறிவீர்கள். இப்போது குர்ஆனை சத்தமிட்டு ஓதும் போது அதில் இடம் பெறும் துஆக்களை என்ன செய்வது? முஸ்லிம்கள் வழமைபோல் மௌனமாக ஓதாமல் அதனையும் சத்தமிட்டு தான் ஓதுவார்கள் இதனை அனைவரும் அறிவீர்கள். ஆக துஆக்களை மௌனமாக மட்டுமே ஓத வேண்டும் சத்தமிட்டு ஓதக் கூடாது என்று கூறுவது முற்றிலும் தவறு, அது திருக்குர்ஆன் மற்றும் ஸஹீனான ஹதீஸ்களுக்கு முற்றிலும் முறனாகும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தமிட்டு ஓதிய துஆக்களை ஸஹாபாக்கள் செவிமடுத்துள்ளார்கள்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَعِيذُ فِي صَلَاتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாப்புத் தேடி (துஆ செய்ததை) நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 833
عَن عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ
ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘அபூ ஹுரைராவே! அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் உம்மிடம் கேட்கிறேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஹஸ்ஸானே! இறைத்தூதர் சார்பாக நீர் அவர்களுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக!’ என்றும் (இறைவா! ஹஸ்ஸானை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் வலுப்படுத்துவாயாக!’ என்று துஆ செய்ததை நீர் செவியுற்றீர் அல்லவா?’ என்று கேட்டபோது அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ‘ஆம்’ என்றார்கள்.
அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 453
عَن ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَفِي نَجْدِنَا فَأَظُنُّهُ قَالَ فِي الثَّالِثَةِ هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!’ துஆ கேட்டார்கள். ஸஹாபக்களில் (சிலர்) எங்கள் ‘நஜ்த்’ (ரியாத்) பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்கள்)’ என்று கேட்க, (மீண்டும்) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக! எங்கள் யமன் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக!’ என்றே துஆ கேட்டார்கள். மக்கள், ‘யா ரஸூலல்லாஹ்! எங்கள் ‘நஜ்த்’ (ரியாத்) பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்களேன்)’ என்று (மீண்டும்) கேட்டனர். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மூன்றாவது முறையில் என்று நினைக்கிறேன் அங்கு தான் நில நடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 7094
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, ‘இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற (துஆக்களை) ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 142
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்ற (துஆக்களை) ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 832
عَنْ مُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது’ என்ற (துஆக்களை) ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 844
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الْآخِرَةِ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஸுபஹ் தொழுகை) கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று; இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்று. இறைவா! நம்பிக்கையாளர்களில் பலவீனர்களைக் காப்பாற்று. இறைவா! முழர் கூட்டத்தினர் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இவர்களுக்கு யூஸுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போல் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!’ என்ற (துஆக்களை) ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1006
عَنْ أُمَّ خَالِدٍ بِنْتَ خَالِدٍ رَضِيَ اللَّهُ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்பு (துஆ) ஓதுவதை செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர் :- உம்மு காலித் பின்த் காலித் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 6364
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவா! நான் எந்த இறைநம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றிவிடுவாயாக!’ என்று கூறியதை செவியுற்றேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6361
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَنَّ رَجُلًا دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ بَابٍ كَانَ وِجَاهَ الْمِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ اللَّهَ يُغِيثُنَا قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ فَقَالَ اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا
ஜும்ஆ நாளில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி ‘ யா ரஸூலல்லாஹ்! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்’ என்று கேட்டார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி ‘இறைவா! எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! என்று துஆ கேட்டார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1013
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالْجِبَالِ وَالْآجَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அடுத்த ஜும்ஆவில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி ‘யா ரஸூலல்லாஹ்! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்’ என்றார். உடனே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கையை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’ என்று துஆ கேட்டார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1014
عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعَهُ يَقُولُ سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ يَقُولُ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، أَوْ مِنْ عَذَابِ النَّارِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்ரை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டையும் இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தையும் இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக; மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக என்று (துஆ) கேட்டதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் :- அவ்ப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 963, திர்மிதி 1025 இப்னு மாஜா 1500
عَنْ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ
நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து என்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்ற (துஆக்களை) ஓதி வந்தார்கள்.
அறிவிப்பவர் :- ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 5479, 5380
மேற்கூறிய ஹதீஸ்களை கூர்ந்து கவனித்துப் பாருங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களை ஸஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டு இடம் பெறவில்லை. அதற்கு மாற்றமாக இறைவனிடம் தன் தேவைகளை சத்தமிட்டு பகிரங்கமாக கேட்டுள்ளார்கள். அவர்கள் கேட்ட துஆக்களை தெளிவான முறையில் ஸஹாபாக்கள் செவிமடுத்துள்ளார்கள் என்று மேற்கூறிய ஸஹீஹான ஹதீஸ்களில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
குறிப்பு :- அன்பிற்குறிய தவ்ஹீத் உலமாக்களே! இஸ்லாம் தெளிவான மார்க்கம், அற்ப பணத்திற்காகவும், தன்னுடைய வரட்டு கௌரவத்திற்காகவும், தன்னுடைய மனோ இச்சை பிரகாரம் அது பித்அத்து ஷிர்கு என்று இஸ்லாமிய சட்டங்களை சொல்ல முற்படாதீர்கள். தவ்ஹீத் சகோதர சகோதரிகளே! துஆக்களை எந்த நிலையிலும் சத்தமிட்டு ஓதக்கூடாது என்று கூறுவது திருக்குர்ஆன் ஸஹீஹான ஹதுஸ்களுக்கு முற்றிலும் முறனாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களை கற்றுக் கொடுக்கும் நோக்கிலும் அது அல்லாத நோக்கிலும் சத்தமிட்டு பகிரங்கமாக ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்று ஸஹீஹான ஹதீஸ்கள் பறைசாற்றுவதை நம்மால் காண முடிகிறது. ஆக சத்தமிட்டு பகிரங்கமாக துஆ ஓதுவது நபிவழி ஸுன்னத்தாகும். இதனை மறுப்பது வழிகெட்ட பித்அத்தாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்