இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றிய குறிப்புக்கள்

83

இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றிய குறிப்புக்கள்

 

♦️இயற் பெயர் :- (ஷீர்) ஹஸன்”

 

♦️சிறப்பு பெயர் :- அபூ முஹம்மது”

 

♦️தந்தை வைத்த பெயர் :- ஹர்ப்”

 

♦️தந்தையின் பெயர் :- அலி”

 

♦️தாயின் பெயர் :- பாத்திமா ஷஹ்ரா”

 

♦️பிறப்பு :- ஹிஜ்ரி 3ம் வருடம்” ரமலான் மாதம்” 15ம் நாள்” பிறந்தார்கள்.

 

♦️சகோதரர்கள் :- ஹுஸைன்” முஹ்ஸின்” அப்பாஸ்” அப்துல்லாஹ்” ஜஃபர்” உஸ்மான்” உபைதுல்லாஹ்” அபூ பக்கர்” இன்னும் சிலர்”

 

♦️சகோதரிகள் :- ருகைய்யா” உம்மு குல்சூம்” ஜைனப் இன்னும் சிலர்”

 

♦️மனைவியர் :- உம்மு குல்ஷூம்” (ஜுஃதா) அஸ்மா” இன்னும் சிலர்”

 

♦️பிள்ளைகள் :- 15 ஆண் பிள்ளைகளும், 8 பெண் பிள்ளைகளும் இருந்தனர்”

 

♦️பிள்ளைகள் பெயர்கள் :- ஹஸன்” ஹுஸைன்” ஜய்த்” காஸிம்” அப்துல்லாஹ்” அப்துர்ரஹ்மான்” தல்ஹா” அபூ பக்கர்” பாத்திமா” உம்மு ஸலமா” இன்னும் பலர்”

 

♦️அந்தஸ்து :- இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முகஜாடையிலும் உருவ அமைப்பிலும், அழகிலும், ஒழுக்கத்திலும், நடை, உடை பாவனைகளிலும் தங்களுடைய பாட்டனார் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே ஒத்தியிருந்தார்கள்.

 

♦️குடும்பம் :- அஹ்லு பைத்” இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததி வம்சத்தைச் சார்ந்தவர்கள்”

 

♦️துஆ பரகத் :- நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆ பரக்கத்தையும், குறிப்பாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தையும் பெற்றுக் கொண்டவர்கள்”

 

♦️சிறப்பு பட்டம் :- ஞானங்கள் அவர்களுக்கு இயற்கையாகவே கிடைத்தன. அவர்கள் மாபெரும் அறிவாளியாகவும், ஞான ஆசிரியராகவும் இருந்தார்கள். அன்றைய மதினாவில் கல்விக் களஞ்சியங்களாக விளங்கிய பெரியார்களுள் இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராகத் தலைசிறந்து விளங்கினார்கள். மக்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் பேச்சு திறமை, கவிதை எழுதுதல் போன்ற கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள்.

 

♦️ஆட்சி :- ஹிஜ்ரி 40 ரமலான் மாதம் ஆட்சி ஆரம்பமானது. சுமார் 6 மாதங்கள் ஆட்சி நீடித்தது. பின்னர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒப்பந்த முறைப்படி ஆட்சியை கொடுத்தார்கள். இச்சம்பவம் ஹிஜ்ரி 41 ரபியுல் அவ்வல் மாதம், பிறை 25ல் நடைபெற்றது”

 

♦️மரணம் :- இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 50ம் ஆண்டு ஸபர் மாதம், 20ம் நாள் நஞ்சூட்டப்பட்ட நிலையில் மரணம் அடைந்துள்ளார்கள். அப்போது அவர்களின் வயது 40 ஆகும்”

 

♦️கப்ருஷ்தானம் :- இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை மதினா நகர்” மஸ்ஜிதுன் நபவி பள்ளியில் அமைந்துள்ள இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபிற்கு அருகில் அடக்கம் செய்ய முடியாத காரணத்தால். அதற்கு அருகில் உள்ள ஜன்னத்துல் பக்கியில். அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது”

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.