இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றிய குறிப்புகள்
இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றிய குறிப்புகள்
♦️இயற் பெயர் :- (ஷப்பீர்) ஹுசைன்”
♦️புனைப் பெயர் :- அபூ அப்தில்லாஹ்”
♦️சிறப்பு பெயர்கள் :- அர்ரஸீது” அத்தையிப்” அஸ்ஸகிய்யு” அல்வபிய்யு” அஸ்செய்யித்” அல் முபாரக்” அஸ்ஸிப்து” போன்ற பல பெயர்கள் உள்ளன.
♦️தந்தையின் பெயர் :- அலி” தாயின்
♦️பெயர் :- பாத்திமா ஷஹ்ரா”
♦️பிறப்பு :- ஹிஜ்ரி 4ம் வருடம், ஷஃபான் மாதம், பிறை 5ல் மதீனா நகரில் பிறந்தார்கள்.
♦️சகோதரர்கள் :- ஹஸன்” முஹ்ஸின்” அப்பாஸ்” அப்துல்லாஹ்” ஜஃபர்” உஸ்மான்” உபைதுல்லாஹ்” அபூ பக்கர்” இன்னும் சிலர்”
♦️சகோதரிகள் :- ருகைய்யா” உம்மு குல்சூம்” ஜைனப் இன்னும் சிலர்”
♦️மனைவியர் :- ஸஹ்ரா பானு” லைலா” (இம்ரவுல் கைஸின் மகள்) ருபாப்” உம்மு இஸ்ஹா”
♦️ஆண் பிள்ளைகள் :- அலி அக்பர்” அலி அஸ்கர்” அலி இப்னு ஹுசைன் “ஜெய்னுல் ஆபிதீன்”
♦️பெண் பிள்ளைகள் :- பாத்திமா” சுகைனா” ருக்கைய்யா” ஹவ்ளா” ஸபிய்யா”
♦️ஹஜ் பயணம் :- சுமார் 25 முறை
♦️சிறப்பு :- இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை போன்று அழகானவர்களாகவும், மனிதநேயம் கொண்டவர்களாகவும், பெரியார்களை மதிக்கக்கூடியவர்களாகவும், மார்க்கப்பற்று நிறைந்தவர்களாகவும், மக்கள் மத்தியில் மதிப்புமிக்க தலைசிறந்த இமாமாகவும். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் உத்தம தலைவராகவும் இருந்தார்கள்”
♦️குடும்பம் :- அஹ்லு பைத்” இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததி வம்சத்தைச் சார்ந்தவர்கள்”
♦️துஆ பரகத் :- நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆ பரக்கத்தையும், குறிப்பாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தையும் பெற்றுக் கொண்டவர்கள்”
♦️குறிப்பு :- மக்காவிலிருந்து ஹிஜரி 60 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் பிறை 08ல் செவ்வாய்கிழமை அன்று கூபா நகரை நோக்கி ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புறப்பட்டார்கள் அவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் முரீதீன்கள் உட்பட மொத்தம் 82 பேர் சென்றதாக அவர்களின் வரலாற்றில் கூறப்படுகின்றது. இறுதியில் ஈராக் நாட்டின் கர்பலா என்ற இடம் வரைக்கும் சென்றார்கள்”
♦️கர்பலா வரை :- அடக்குமுறை” நம்பிக்கை துரோகம்” ஏமாற்றம்” ஆட்சி வெறி” தம் குடும்பத்திற்காக வேண்டி தொலைநோக்குப் பயணம்” மனவேதனை உடல் ரீதியான பல வேதனைகளை சந்தித்தது மட்டுமின்றி அங்கேயே இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹீதானார்கள்”
♦️மரணம் :- ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 61ம் வருடம்” முஹர்ரம் மாதம்” 10ம் நாள்” வெள்ளிக்கிழமை அன்று எதிரிகளினால் கொலை செய்யப்பட்டார்கள். அப்போது அவர்களின் உடல் ஒரு பக்கமும் அவர்களின் தலை மற்றொரு பக்கமும் இருந்தது. அவர்களிடம் உடலை விட்டு விட்டு தலையை எதிரிகள் எடுத்துச் சென்றனர்”
♦️கப்ருஸ்தானம் :- ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் அவர்கள் மரணித்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது நாடு ஈராக்” இடம் கர்பலா” எதிரிகளால் சுமந்து செல்லப்பட்ட அவர்களின் தலை அடக்கம் செய்யப்பட்ட இடம் எதுவென்று உதவியாக குறிப்பிட்டு கூறவில்லை.
இருப்பினும் கீழ் சொல் :- பலஸ்தீன் நாட்டில் உள்ள அஸ்கலான் என்ற இடமாகும். இன்னும் ஓர் சொல் :- மதீனா ஜன்னத்துல் பக்கி என்ற இடமாகும்”
♦️ஆச்சரியக்குறி :- யஸீத் என்பவனின் தலைமையில் தான் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கயவர்கள் கொலை செய்தார்கள், அதன் பின்னர் இஸ்லாமிய வரலாற்றில் இன்று வரை பெரும்பாலும் யஸீத் என்ற பெயரை யாரும் வைப்பதும் கிடையாது”
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்