இரவில் திடுக்கம், கெட்ட கனவு, விழிப்பு ஏற்பட்டால் ஓதும் துஆ
இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டிய துஆ
لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ للهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ اَللّهُمَّ اغْفِرْ لِيْ
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.
தூங்கும் போது பயந்து திடுக்கிட்டெழுந்தால் ஓதும் துஆ
اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّآمَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِباَدِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَّحْضُرُوْنِ
பரிபூரணமான அல்லாஹ்வின் திருக்கலிமாவின் பொருட்டால் அவனுடைய கோபத்தை விட்டும் தண்டனையை விட்டும், அவனுடைய அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசாட்டங்களை விட்டும், அவை என்னிடத்தில் வருவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
கெட்ட கனவு கண்டால் ஓதும் துஆ
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
எடுத்தெரியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்