இரவுகளின் சிறப்புக்கள்
இரவுகளின் சிறப்புக்கள்
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً لاَ يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْاَلُ اللهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَذلِكَ كُلَّ لَيْلَةٍ
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவுகளிலுமாகும்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2456
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَي كُلَّ لَيْلَةٍ إِلَي سَمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقي ثُلُثُ اللَّيْلِ اْلآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْاَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ له؟
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு இரவிலும் மூன்றிலொரு பகுதி எஞ்சியிருக்கும்போது நம்முடைய இரட்சகன் உலக வானத்திற்கு இறங்கி, என்னிடம் துஆக் கேட்பவர் யார்? அவர் துஆவை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் கேட்ப்பவர் யார்? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்பவர் யார்? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன்” என்று கூறுகிறான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2586
ஜும்ஆ இரவு பெருநாள் இரவு
عنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَمْسُ لَيَالٍ لا تُرَدُّ فِيهِنَّ الدَّعْوَةُ: أَوَلُ لَيْلَةٍ مِنْ رَجَبٍ، وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، وَلَيْلَةُ الْجُمُعَةِ، وَلَيْلَةُ الْفِطْرِ، وَلَيْلَةُ النَّحْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘ஐந்து நாட்களின் இரவுகளில் கேற்கப்படும் துஆக்கள் மறுக்கப்பட மாட்டாது (1) ரஜப் மாதத்தின் முதலிரவு (2) ஷஃபானின் 15வது (பராஅத்) இரவு, (3) ஜும்ஆ இரவு, (4) நோன்புப் பெருநாள் இரவு (5) உழ்ஹியாப் பெருநாள் இரவாகும்.
அறிவிப்பவர் :- அபூ உமாமத அல் பாஹிலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அஸாகிர்” தாரீகு 10/408
லைலதுல் கத்ருடைய இரவு
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ * وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ * لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
திண்ணமாக, நாம் இதனை (குர்ஆனை) கண்ணியமிக்க மிக்க இரவில் இறக்கி வைத்தோம். * கண்ணியம் மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன? • கண்ணியமிக்க அந்த மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்!.
(அல்குர்ஆன் : 97:1,2,3)
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخر
நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர் (இரவு) காட்டப்பட்டது; அப்போது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2015
عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். லைலதுல் கத்ர் இரவானது, இருபத்தி ஏழாம் இரவாகும்.
அறிவிப்பவர் :- முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 1178
குறிப்பு :- லைலத்துல் கத்ர் இரவு, ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்க வேண்டும். குறிப்பாக ரமளானின் கடைசி 7 நாள்கள் அதாவது 27 என்று மட்டுப்படுத்தி கூறப்படுவதை நம்மால் காண முடிகிறது.
மிஃராஜ் இரவு
عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فِي رَجَبٍ يَوْمٌ وَلَيْلَةٌ مَنْ صَامَ ذَلِكَ الْيَوْمَ ، وَقَامَ تِلْكَ اللَّيْلَةَ كَانَ كَمَنْ صَامَ مِنَ الدَّهْرِ مِائَةَ سَنَةٍ وَقَامَ مِائَةَ سَنَةٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள், நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும்.
அறிவிப்பவர் :- ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஆதாரம் பைஹகி 96
குறிப்பு :- ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவு எனக் கருதப்படுகிறது.
பராஅத் இரவு
عَنْ علي رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا، وَصُومُوا نَهَارَهَا ؛ فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ : أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ؟ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ؟ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ؟ أَلَا كَذَا؟ أَلَا كَذَا؟ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ
ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ‘என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கிறேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன்’ என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான்.
அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1388
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَل تدرين مَا هَذِه اللَّيْل؟ يَعْنِي لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ قَالَتْ مَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ فِيهَا أَنْ يُكْتَبَ كلُّ مَوْلُودٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا أَنْ يُكْتَبَ كُلُّ هَالِكٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا تُرْفَعُ أَعْمَالُهُمْ وَفِيهَا تَنْزِلُ أَرْزَاقُهُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? எனக் கேட்டு விட்டுக் கூறினார்கள். இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும் என்றார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் மிஷ்காத் 1302
قال عكرمة :- كان ابن عباس رضي الله تعالى عنهما يسمي ليلة النصف من شعبان ليلة البراءة
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஷஃபான் (பிறை 15) நடுப்பகுதி இரவிற்கு (லைலதுல் பராஅத்) விடுதலை பெரும் இரவு என்று பெயர் வைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
நூல் ஆதாரம் :- தப்ஸீருல் மாவர்தி, தப்ஸீருல் இஸ்ஸி இப்னு அப்துஸ் ஸலாம் போன்ற திருக்குர்ஆன் விளக்கவுரை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு :- ஷஃபான் மாதத்தின் 15ம் இரவில் தான் அதிகளவில் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. மேலும் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறக்கி வைக்கப்படுகிறது. இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்