இரு சாட்சிகள் இன்றி திருமணம் நிறைவேறாது

276

இரு சாட்சிகள் இன்றி திருமணம் நிறைவேறாது

 

பெண் மாப்பிள்ளை இருவரும் திருமணத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் திருமணம் செய்து வைப்பதற்கு நிதானமாக இரு சாட்சிகள் முன் வருவது மிக முக்கியமாம். இரு சாட்சிகள் இல்லை என்றால் திருமணம் நிறைவேறாது.

 

عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ‏ أَعْلِنُوا النِّكَاحَ‏ :- مَعْنَاهُ‏ أَعْلِنُوا بِشَاهِدَيْنِ عِدْلَيْنِ‏

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். திருமணத்தை அறிவிப்பு செய்யுங்கள். :- இதன் அர்த்தம் நீதமான இரு காட்சிகளைக் கொண்டு அறிவிப்பு செய்வதாகும்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு ஹி‌ப்பான் 4066

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ‏ لاَ نِكَاحَ إِلاَّ بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு வலிகாரர் மற்றும் நீதமான இரு சாட்சிகள் இல்லை என்றால் திருமணம் இல்லை.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு ஹி‌ப்பான் 4075 பைஹகி 3245 இப்னு அபீ ஷைபா 16182

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَكُونُ نِكَاحٌ إِلَّا بِوَلِيٍّ وشاهدينِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு வலிகாரர் மற்றும் இரு சாட்சிகள் இல்லை என்றால் திருமணம் இல்லை.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ரானி” முஃஜமுல் கபீர் 299

 

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு வலிகாரர் மற்றும் நீதமான இரு சாட்சிகள் இல்லை என்றால் திருமணம் இல்லை.

 

அறிவிப்பவர் :- இம்ரான் இப்னு ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ரானி” முஃஜமுல் கபீர் 291

 

عَنِ جَابِرَ بْنَ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَقُولُ‏‏ لاَ نِكَاحَ إلاَّ بِوَلِيٍّ وَشَاهِدَيْنِ‏

 

ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஒரு வலிகாரர் மற்றும் இரு சாட்சிகள் இல்லை என்றால் திருமணம் இல்லை.

 

ஆதாரம் :- இப்னு அபீ ஷைபா 16172

 

வலிகாரர் மற்றும் இரு சாட்சிகள் இல்லை என்றால் திருமணம் இல்லை என்ற கருத்தை கூர்ந்து கவனிக்கும் போது. பெண் மாப்பிள்ளை இருவரும் திருமணத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்று வலிகாரும் இரு சாட்சியாளர்களும் மிக முக்கியம் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- நீதமுள்ள இரண்டு சாட்சிகள் திருமண நிகழ்விற்கு சமுகம் அழிப்பது மட்டுமின்றி திருமணத்திற்கு வருகை தந்திருக்கும் ஜமாஅத்தை சாட்சியாக முன் நிறுத்துவது ஏற்றமாயிருக்கும். இரு சாட்சிகளும் ஈஜாப் கபூல் வாசகத்தை விளங்குகிறவர்களாக இருப்பது மட்டுமின்றி நீதியாகவும் நேர்மையானவர்களாகவும் நடந்து கொள்வது அவசியமாகும். மேலும் வலிகாரர் பெண்ணிடம் திருமண சம்மதம் கேட்கும் போது, இரு சாட்சிகளும் பெண்ணின் சம்மதத்தை காதால் கேட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு கேட்டிருந்தால் திருமணச் சபையில் அவ்விரு சாட்சிகளும் மாப்பிள்ளையின் சம்மதத்தையும் கேட்பது அவசியமாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.