இஷா தொழுகைக்கு பின் ஓதும் துஆ
இஷா தொழுகைக்கு பின் ஓதும் துஆ
اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ احْفَظْنَا فِي ظُلْمَةِ اللَّيْلِ كَمَا حَفِظْتَنَا يَارَبَّنَا فِي ضَوْءِالنَّهَارِهِ وَاصْرِفْ عَنَّا بَلاَءَ اللَّيْلِ كَمَاصَرَفْتَ عَنَّا بَلآءَالنَّهَارِ, وَاحْشُرْنَا مَعَ الْاَبْرَارِ. وَاجْعَلْ مُنْقَلَبَنَا اِلي دَارِالْقَرَارِ, وَنَجِّنَامِنَ النَّارِ وَاعْفُ عَنَّاالْاَوْزَارَ يَاغَفَّارُ, اَللّهُمَّ احْفَظْنَا يَافَيَّاضُ مِنْ جَمِيْعِ الْبَلَايَا وَالْاَعْدَاءِ وَالْاَمْرَاضِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ
இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் பரக்கத்தும் ஸலாமும் அருள் புரிவாயாக! இறைவனே! எங்கள் இரட்சகனே! எங்களை நீ பகல் நேரப் பிரகாசத்தில் காப்பாற்றியருளியதைப் போலவே (இந்த) இரவின் இருட்டிலிருந்தும் எங்களை காப்பாற்றி அருள்வாயாக! இன்னும் நீ எங்களை பகல் நேரத்து சங்கடங்கலை விட்டும் தடுத்துக் கொண்டது போலவே இரவ நேரத்தின் சங்கடங்களை விட்டும் தடுத்துக் கொள்வாயாக! இன்னும் எங்களை நல்லோர்களுடன் (சேர்த்து) எழுப்புவாயாக! நிரந்தரமான (சுவர்க்க) விடுதியிலே எங்கள் உறைவிடத்தை ஆக்கி வைப்பாயாக. நரகத் தீயை விட்டும் எங்களை காப்பாயாக! கஷ்டங்களை எங்களை விட்டும் போக்குவாயாக! எங்கள் பாவங்களை மன்னிப்பவனே! மாபெரும் கொடையாளியே! என் இறைவனே, எங்களை சகல விதமான சங்கடங்களை விட்டும் விரோதிகளை விட்டும் நொய் நொடிகளை விட்டும் காப்பாற்றி அருள்வாயாக! அருள் புரிபவர்களிலெல்லாம் மகா அருள் புரிபவனே! எங்களுக்கு அருள்வாயாக! அல்லாஹ்வுடைய ஸலவாத்து எங்கள் தலைவரும் சிருஷ்டிகளில் சிரேஷ்டமானவருமான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும், அவரது தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாகுக! புகழுரை அனதை;தும் சர்வலோக இரட்கனான அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்