இஸ்லாத்தின் இணையற்ற வீரர்களே!
பாடல் :- இஸ்லாத்தின் இணையற்ற வீரர்களே!
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்
بسم الله الرحمن الرحيم،
الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين
இறைவனின்
திருப்பொருத்தத்தை கொண்டும், நபிமார்கள் நல்லடியார்கள் குறிப்பாக இறைதூதர் ஸல்லல்லாஸு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரகத்தைக் கொண்டும், எங்களுடைய ஆசான் நஜ்முல் உலமா முஹாஜிரீன் நத்வி காதிரி ஹழரத் அவர்களின் துஆ பரகத்தைக் கொண்டும், அவர்களின் ஆசானும் என்னுடைய தந்தை அப்துல்லாஹ் ரஹ்மானி ஹழரத் அவர்களின் தந்தையுமான மூதூர் நத்வதுல் உலமா (நத்வி) மத்ரஸாவின் இஸ்தாபகருமான மர்ஹூம் சாகுல் ஹமீது பஹ்ஜி காதிரி ஹழரத் அவர்களின் துஆ பரகத்தைக் கொண்டும் இந்த இணையதளத்தை ஆரம்பம் செய்கிறேன்.
சகோதர
சகோதரிகளே! வஹாபிஷ அமைப்புக்களிலுள்ள மார்க்க தெளிவற்ற ஒரு சில ஆலிம் என்ற பெயரில் உள்ளோர் தனது வசீகரமான பேச்சாலும், இஸ்லாத்திற்கு முரணான கொள்கையாலும், இஸ்லாத்தில் இருக்கும் ஒன்றை இல்லாமல் ஆக்கிக்கொண்டும், அவை ஆதாரம் அற்றது வீணானது என்றெல்லாம் கூறி கூச்சலிடுவது மட்டுமன்றி அவர்களின் கசப்பான உரைகளை கேட்டு உள்ளம் உடைந்து நிற்கும் அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்களுக்கும் அது அல்லாதோர்களுக்கும் நல்லதொரு அருள் மருந்தாகவும், குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவான ஆதாரங்களை அள்ளிக் கொள்ளும் ஓர் நூலகமாகவும், வழிகேடர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஓர் இணையதளமாகவும் WORLD ISLAM YSYR என்ற இணையதளத்தை பல தலைப்புகளை கொண்டு நாம் வடிவமைத்து வருகிறோம். நல்ல முறையில் இயங்குவதற்கு உங்களது ஒத்துழைப்பையும் தாருங்கள். சத்தியம் வெல்லும் அசத்தியம் அழிந்தே தீரும். அல்லாஹ் யாருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
எனக்கும் வஹாபிஷ ஷீஆ அமைப்புக்களுக்கு மத்தியிலுள்ள வித்தியாசம் என்னவெனில்
வஹாபிஷ ஷீஆ அமைப்புக்கள் அஹ்லுஸ் ஸுன்னா அகீதா மற்றும் மத்ஹபுகளுக்கு மாற்றமாக குர்ஆன் ஹதீஸை தவறாக சித்தரித்து மக்களுக்கு அறிவிப்பு செய்கிறார்கள். நாம் வஹாபிஷ யூத அமைப்புக்களுக்கு மாற்றமாகும் அஹ்லுஸ் ஸுன்னா அகீதா மற்றும் மத்ஹபுகளுக்கு சார்பாகவும் அதே குர்ஆன் ஹதீஸ்களை அடிப்படை ஆதாரங்களாக முன் வைத்து, அதனை தெளிவாக விளக்கி மக்களுக்கு அறிவிப்பு செய்துள்ளோம். காலத்தின் தேவையை கருத்தில் கொண்டே இவ்வாறு நாம் செயல் பட்டுள்ளேன் என்பதை மீண்டும் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறேன்.
குறிப்பு :- தகுதியற்ற எம்மை போன்றவர்களை கொண்டு தகுயுள்ள இஸ்லாமிய மார்க்க ஞானத்தை தந்தருளி இம்முகநூலை எழுதுகோல் வழியாக உருவாக்கச் செய்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும் அல்லஹம்துலில்லாஹ்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்