இஸ்லாத்தின் பார்வையில் உருவங்கள் மற்றும் உருவப்படங்கள் பற்றிய ஆய்வுத் தொகுப்பு
இஸ்லாத்தின் பார்வையில் உருவங்கள் மற்றும் உருவப்படங்கள் பற்றிய ஆய்வுத் தொகுப்பு
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்.
A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
♦️ உருவம் என்று வரும் போது உருவச் சிலைகள், விக்ரகங்கள், உருவப்படங்கள், புகைப்படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இருப்பினும் ஹதீஸ்களின் வெளிச்சத்தில் பார்க்கும் போது (تِمْثَالًا) திம்ஷாலன் (صُورَةً) சூறதன் என்ற இரு வார்த்தைகளுமே அதிகளவில் பயன் படுத்தப்பட்டுள்ளது.
هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ
குர்ஆன் கூறுகிறது அவன்தான் கர்ப்பப் பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ, பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான்.
(அல்குர்ஆன் 📚 : 3:6)
لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَقَالَ :- وَلَا صُورَةً إِلَّا طَمَسْتَهَا
(இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.) விக்கிரகங்களை (உருவங்களை) அழிக்காமல் விட்டு விடாதே!
ஆதாரம் 📚 :- முஸ்லிம் 968, நஸாயி 2031
🔸மேற்கூறிய குர்ஆன் ஹதீஸ்களில் இடம் பெறுவது போன்று தான் பல ஹதீஸ் கிரந்தங்களிலும் விக்ரகங்கள் உருவச் சிலைகள் அது அல்லாத உருவங்களை பற்றி பேசும் போது (تِمْثَالًا) திம்ஷாலன் (صُورَةً) சூறதன் என்ற இரு அரபு வார்த்தைகளும் அதிகளவில் ஒருமையாகவும் பன்மையாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
1) உருவச் சிலைகள், விக்ரகங்கள் போன்ற உருவங்களை வைத்திருக்கலாமா?
عَنْ أَبِي طَلْحَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எந்த வீட்டினுள் நாய் உள்ளதோ இன்னும் உருவம் உள்ளதோ அந்த வீட்டினுள் (ரஹ்மத்துடைய) மலக்குமார்கள் உள்நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் :- அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 முஸ்லிம் 2106, 2106 மற்ற ஹதீஸில்
لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ :- يُرِيدُ التَّمَاثِيلَ الَّتِي فِيهَا الْأَرْوَاحُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எந்த வீட்டினுள் நாய் உள்ளதோ இன்னும் உருவம் உள்ளதோ அந்த வீட்டினுள் (ரஹ்மத்துடைய) மலக்குமார்கள் உள்நுழைய மாட்டார்கள்.
🔸உயிரினங்களின் உருவச் சிலைகளை கருத்திற் கொண்டே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 4002 மற்ற ஹதீஸில்
لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةُ تَمَاثِيلَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எந்த வீட்டினுள் நாயும் இன்னும் (உயிரினங்களின்) உருவச் சிலைகளும் உள்ளதோ அந்த வீட்டினுள் (ரஹ்மத்துடைய) மலக்குமார்கள் உள்நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் :- அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 3225, திர்மிதி 2804
🔸மேற்கூறிய ஹதீஸ்களை கூர்ந்து கவனிக்கும் போது நாய் மற்றும் உருவங்கள் இருக்கும் வீடுகளுக்கு மலக்குமார்கள் வரமாட்டார்கள் என்பதாக இடம் பெற்றுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள உருவங்கள் யாவும், வணங்கி வழிபடக்கூடிய உயிரினங்களின் உருவச் சிலைகள், விக்ரகங்களையும் அது அல்லாத உருவச் சிலைகளையும் குறிக்கும். மேலும் வணங்கி வழிபடும் நோக்கில் வைக்கப்படும் உருவ சிலை படங்களைகளையும் பொதுவாகக் குறிக்கக்கூடும்.
2) உயிரினங்களின் உருவச் சிலைகள் போன்ற விளையாட்டு பொம்மைகளை பயன் படுத்தலாமா?
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سَبْعِ سِنِينَ وَزُفَّتْ إِلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعِ سِنِينَ وَلُعَبُهَا مَعَهَا
நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்த போது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 முஸ்லிம் 1422
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي
நான் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழிகள் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழிகள் திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். பின்னர் தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 6130 முஸ்லிம் 2440
🔸ஆரம்ப ஹதீஸில் பருவ வயதை எத்திய அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் விளையாட்டு உருவ சிலைகள் போன்ற அமைப்பிலுள்ள பொம்மைகள் இருந்ததாகவும், அதற்கடுத்த ஹதீஸில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொம்மைகளை வைத்து விளையாட்டுவதற்கு பூரண அனுமதி வழங்கியுள்ளார்கள் என்ற கருத்தையும் நம்மால் காண முடிகிறது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக், அல்லது ஹைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி எனது விளையாட்டுப் பொம்மையை போடப்பட்டிருந்த திரை விலகியது. அதனைக் கண்ட இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! என்ன இது? என்றார்கள். என் பொம்மைகள்” என்று கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். குதிரை” என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். இறக்கைகள்” என்று பதில் கூறினேன். குதிரைக்கு இரண்டு இறக்கைகளா? என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ? என்று நான் கேட்டேன். இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்குச் சிரித்தார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 அபூதாவூத் 4932
🔸உயிருள்ள குதிரையின் உருவச்சிலை போன்ற விளையாட்டு பொம்மையை கண்ட பின்னரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை கண்டிக்காமல் தன்னுடைய சிரிப்பின் மூலம் அதற்கு பூரண அனுமதி அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.
♦️குறிப்பு :- உயிரினங்களின் உருவச் சிலை பொம்மைகள், அது அல்லாத அமைப்பிலுள்ள ஏனைய விளையாட்டு பொம்மைகள், அது மட்டுமின்றி உயிரற்ற விளையாட்டு உருவப் பொருட்களாக இருந்தாலும் சரி தாராளமாக அவைகளை சிறுவர்கள் பயன் படுத்தலாம். மேலும் அதனை வடிவமைக்கவும், அதனை வாங்கிக் கொடுக்கவும், அதனை வீடுகளில் வைத்திருக்கவும் முடியும், அது அல்லாத வணங்கி வழிபடும் நோக்கில் வடிவமைக்கப்படும் உருவச் சிலைகள் விக்ரகங்கள் முற்றாக இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
3) உயிரற்ற உருவப்படங்களை பயன் படுத்தலாமா?
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ أَوْ تَصَاوِيرُ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உருவச் சிலைகளோ உருவப்(படங்களோ) உள்ள வீட்டில் (ரஹ்மத்துடைய) மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 முஸ்லிம் 2112
عَنْ أَبِي طَلْحَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ قَالَ بُسْرٌ ثُمَّ اشْتَكَى زَيْدٌ فَعُدْنَاهُ فَإِذَا عَلَى بَابِهِ سِتْرٌ فِيهِ صُورَةٌ فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ رَبِيبِ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَمْ يُخْبِرْنَا زَيْدٌ عَنِ الصُّوَرِ يَوْمَ الْأَوَّلِ؟ فَقَالَ عُبَيْدُ اللَّهِ أَلَمْ تَسْمَعْهُ حِينَ قَالَ إِلَّا رَقْمًا فِي ثَوْبٍ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (உயிரினங்களின்) உருவம் உள்ள வீட்டில் (ரஹ்மத்துடைய) மலக்குமார்கள் நுழையமாட்டார்கள். இதை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் இப்னு ஸயீத் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார். (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் இப்னு காலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்னர் நோய்வாய்ப்பட்ட போது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களின் வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான மைமூனா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் இப்னு அஸ்வத் அல்கவ்லானீ ரஹ்மத்துல்லாஹ் அவர்களிடம், ‘உருவப்படங்களைப் பற்றி முன்பு ஒரு நாள் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், ‘துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் உருவத்)தைத் தவிர’ என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் :- அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 5958 மற்ற ஹதீஸில்
قَالَ إِلَّا رَقْمٌ فِي ثَوْبٍ أَلَا سَمِعْتَهُ؟ قُلْتُ لَا. قَالَ بَلَى قَدْ ذَكَرَهُ
துணியில் பொறிக்கப்பட்ட (உயிரினமல்லாதவற்றின் உருவத்)தைத் தவிர’ என்று (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘கேட்கவில்லை’ என்றேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 3226
🔸ஆரம்ப ஹதீஸில் வணங்கி வழிபடும் உருவச் சிலைகள் விக்ரகங்கள், உருவப்படங்கள் இருக்கும் வீட்டிலுள் மலக்குமார்கள் உள்நுழைய மாட்டார்கள் என்றும் அதற்கடுத்த இரு ஹதீஸ்களிலும் வணங்கி வழிபடும் நோக்கில் வைக்கப்படும் உருவப்படங்கள் இருக்கும் வீட்டிலுள் மலக்குமார்கள் உள்நுழைய மாட்டார்கள். அது அல்லாத உயிரற்ற உருவப்படங்கள் மதிப்பற்ற உருவப்படங்கள் இருக்கும் வீட்டிலுள் அது அல்லாத இடங்களில் ரஹ்மத்துடைய மலக்குமார்கள் உள்நுழைவார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبَّاسٍ إِنِّي إِنْسَانٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَا أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعْتُهُ يَقُولُ مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ فَقَالَ وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ كُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ
நான் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு உடன் இருந்த போது ஒருவர் வந்து, ‘அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்’ எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்து தான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக! என்றார்கள்.
அறிவிப்பவர் :- ஸயீத் இப்னு அபில் ஹஸன் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 2225 அஹ்மது 3394
🔸உருவங்களை வரைந்தால் மறுமையில் அதற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் வணங்கி வழிபடும் நோக்கில் உயிரினங்களின் உருவச் சிலைகளை செதுக்குவது வரைவதைக் குறிக்கும். அது அல்லாத உயிரற்ற உருவங்கள் வீடு, மரம், வாகனம் போன்ற உருவங்களை செதுக்குவது வரைவதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
4) உயிரினங்களின் உருவப்படங்களை பயன் படுத்தலாமா?
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي الْبَيْتِ قِرَامٌ فِيهِ صُوَرٌ فَتَلَوَّنَ وَجْهُهُ ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ وَقَالَتْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَشَدِّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُصَوِّرُونَ هَذِهِ الصُّوَرَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். என் வீட்டில் உருவங்கள் உள்ள திரைச் சீலை ஒன்றிருந்தது. (அதைக் கண்ட) போது அவர்களின் முகம் (கோபத்தினால்) நிறமாறிவிட்டது. பிறகு அவர்கள் அந்தத் திரையை எடுத்துக் கிழித்து விட்டார்கள். மேலும் அவர்கள், ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்த உருவங்களை வரைகிறவர்களும் அடங்குவர்’ என்றார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 6109
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ سَتَرْتُ سَهْوَةً لِي بِقِرَامٍ فِيهِ تَمَاثِيلُ، فَلَمَّا رَآهُ هَتَكَهُ وَتَلَوَّنَ وَجْهُهُ وَقَالَ يَا عَائِشَةُ أَشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللَّهِ قَالَتْ عَائِشَةُ فَقَطَعْنَاهُ فَجَعَلْنَا مِنْهُ وِسَادَةً أَوْ وِسَادَتَيْنِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு பயணத்திலிருந்து திரும்பி) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது அலமாரியை, உருவம் பொறித்த திரைச் சீலையொன்றால் மறைத்திருந்தேன். அதை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தபோது, அதைக் கிழித்து விட்டார்கள். அவர்களது முகம் நிறம் மாறியிருந்தது. மேலும், “ஆயிஷா! மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள் தாம்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையைக் கிழித்து ஓரிரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக்கொண்டோம்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 முஸ்லிம் 2107
🔸ஆரம்ப ஹதீஸில் உருவங்களை கிழித்து விட்டு, அதனை வரைபவர் அதற்கு மறுமையில் உயிர் கொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்த கருத்தையும், மற்ற ஹதீஸில் உருவங்கள் வரைபவர் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் என்ற கருத்தைக் கூறிய மறுகணம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த உருவங்களை கிழித்து ஓரிரு தலையணை இருக்கைகளாக பயன் படுத்தினார்கள் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.
🔸இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் திரை சீலையில் நெய்யப்பட்ட உருவப்படம், உயிரற்ற உருவப்படமா? அல்லது உயிரினங்களின் உருவப்படமா? மேலும் கிழித்து எறிந்து விடாமல் அதை ஓரிரு தலையணை இருக்கைகளாக ஏன் பயன் படுத்தினார்கள்? மேலும் திரை சீலையில் நெய்யப்பட்ட உருவப்படம் அனைத்து தடை செய்யப்பட்டதா? அல்லது அதில் ஏதேனும் விதிவிலக்கு உண்டா? என்பதை கீழ் கானும் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ وَقَدْ سَتَرْتُ نَمَطًا فِيهِ تَصَاوِيرُ فَنَحَّاهُ فَاتَّخَذْتُ مِنْهُ وِسَادَتَيْنِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் (எனது வீட்டில்) உருவப்படங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்கவிட்டிருந்தேன். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை அப்புறப்படுத்தினார்கள். ஆகவே, அதை நான் இரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக் கொண்டேன்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 முஸ்லிம் 4285 மற்ற ஹதீஸில்
كَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ…… وَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ وَيُجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ مُنْتَبَذَتَيْنِ يُوطَآنِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உருவப்படங்களால் நெய்யப்பட்ட திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும் உங்கள் (குடும்பத்திற்கு) கட்டளையிடுங்கள்” என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 திர்மிதி 2806 அபூதாவூத், 4158 மற்ற ஹதீஸில்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتِ اتَّخَذَتْ عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ فَهَتَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَتْ مِنْهُ نُمْرُقَتَيْنِ فَكَانَتَا فِي الْبَيْتِ يَجْلِسُ عَلَيْهِمَا
நான் என்னுடைய அலமாரி ஒன்றின் மீது (உயிரினங்களின்) உருவங்கள் இருந்த ஒரு தீரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிழித்து விட்டார்கள். எனவே அதிலிருந்து நான் இரண்டு மெத்தை (இருக்கை)களைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின் மீது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்வார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 2479 மற்ற ஹதீஸில்
فَقَطَعْتُهُ مِرْفَقَتَيْنِ فَقَدْ رَأَيْتُهُ مُتَّكِئًا عَلَى إِحْدَاهُمَا وَفِيهَا صُورَةٌ
உருவப்படங்களால் நெய்யப்பட்ட திரைச்சீலையைக் கிழித்து அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படங்கள் இருக்கும் நிலையிலேயே (இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதில் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 அஹ்மது 26103
🔸ஆரம்ப இரு ஹதீஸ்களிலும் உயிரினங்களின உருவங்கள் அது அல்லாத வேறு சில உருவப்படங்களை மதிப்பற்றதாக தலையாணையாக அதனை பயன்படுத்துவதை அதனை வைத்திருப்பதை இஸ்லாம் அனுமதித்துள்ளது என்ற கருத்தையும். அதற்கடுத்த இரு ஹதீஸ்களிலும் மதிப்பற்ற நிலையிலுள்ள உருவப்படங்கள் பொதிந்த இரு தலையணை இருக்கைகளிலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாயிந்தவண்ணம் அமர்ந்திருந்தார்கள் என்ற கருத்தையும் மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ يَعُودُهُ قَالَ فَوَجَدْتُ عِنْدَهُ سَهْلَ بْنَ حُنَيْفٍ قَالَ فَدَعَا أَبُو طَلْحَةَ إِنْسَانًا يَنْزِعُ نَمَطًا تَحْتَهُ فَقَالَ لَهُ سَهْلٌ لِمَ تَنْزِعُهُ فَقَالَ لِأَنَّ فِيهِ تَصَاوِيرَ وَقَدْ قَالَ فِيهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ عَلِمْتَ قَالَ سَهْلٌ أَوَلَمْ يَقُلْ إِلَّا مَا كَانَ رَقْمًا فِي ثَوْبٍ فَقَالَ بَلَى وَلَكِنَّهُ أَطْيَبُ لِنَفْسِي
அபூ தல்ஹா ரலி அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவரை நான் நோய் விசரிக்கச் சென்றேன். அவருடன் ஸஹ்ல் பின் ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். அபூதல்ஹா அவர்கள் ஒரு மனிதரை அழைத்து தனக்குக் கீழே உள்ள விரிப்பை நீக்குமாறு கூறினார்கள். இதைக் கண்ட ஸஹ்ல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏன் இதை நீக்குகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதில் உருவப்படங்கள் உள்ளன; உருவப்படங்கள் குறித்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது தான் உமக்குத் தெரியுமே என்று கூறினார்கள். அத்ற்கு ஸஹ்ல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்பட்ட உருவங்களைத் தவிர என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லையா என்று அபூதல்ஹாவிடம் கேட்டார்கள். அதற்கு அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆம் ஆனாலும் என் மன திருப்திக்காக சொன்னேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 திர்மிதி 1750 நஸாயி 5349
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ لَنَا سِتْرٌ فِيهِ تِمْثَالُ طَائِرٍ وَكَانَ الدَّاخِلُ إِذَا دَخَلَ اسْتَقْبَلَهُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَوِّلِي هَذَا فَإِنِّي كُلَّمَا دَخَلْتُ فَرَأَيْتُهُ ذَكَرْتُ الدُّنْيَا
எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் (நெய்யப்பட்ட) பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும் போது அந்தத் திரையே அவரை வரவேற்பது (போன்று இருக்கும்) என்னிடம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் சிந்தனை)தான் என் நினைவுக்கு வருகிறது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 முஸ்லிம் 2107 நஸாயி 5353 அஹ்மது 24218
🔸ஆரம்ப ஹதீஸில் ஆடையில் வேலைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இருக்கும் மதிப்பற்ற உருவங்கள் பொதிந்த ஆடைகளை அது அல்லாத திரைச் சீலைகளை பயன் படுத்த முடியும் என்ற கருத்தையும். அதற்கடுத்த ஹதீஸில் திரைச் சிலையில் நெய்யப்பட்டிருந்த வரவேற்பு போன்ற அமைப்பிலுள்ள பறவையின் உருவப்படங்கள் எனக்கு உலக சிந்தனையை ஏற்படுத்துகிறது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
🔸இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பறவையின் வரவேற்பு உருவப்படங்கள் உலக சிந்தனையை ஏற்படுத்துகிறது என்பதாகக்கூறி அதனை வெறுத்தார்களே தவிர. இது இஸ்லாத்தில் முற்றாக தடை செய்யப்பட்டது என்பதாகக்கூறி அதனை அவர்கள் மறுக்கவில்லை. தெளிவான முறையில் கூறப்போனால் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக சிந்தனையை ஏற்படுத்தும் விஷயங்களை பொதுவாகவே வெறுத்துள்ளார்கள், இதைக் காரணமாக வைத்து உலக சிந்தனையை ஏற்படுத்தும் அணைத்து விடயங்களும் இஸ்லாத்தில் தடை என்று கூறலாமா? நடுநிலையாக யோசியுங்கள்.
🔸இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பறவைகளின் வரவேற்பு உருவ படங்களைகள் உலக சிந்தனையை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை வெறுத்தார்கள், இதனைக் காரணமாக வைத்து இன்றைய காலகட்டத்தில் உலக சிந்தனைகளை ஏற்படுத்தும் உருவப்படங்கள் அது அல்லாதவைகள் அனைத்தும் இஸ்லாத்தில் தடை என்று கூற முடியுமா? உதாரணத்திற்கு உருவப்படங்கள் இடம் பெறும் பணம், நவீன பாடநூல்கள், பத்திரிகைகள், ஃபோன், கண்ணாடியில் இடம் பெறும் நிழல் படங்கள், அது போன்று உலக சிந்தனையை ஏற்படுத்தும் இன்றைய நவீன தொழில் கருவிகள், தொலைபேசி ஃபோன், சுற்றுலா தலங்கள், நவீன வாகனங்கள், சொத்து செல்வங்கள் யாவும் அதிகளவில் மக்களுக்கு உலக சிந்தனையை ஏற்படுத்தும் காரணத்தால் இவைகள் அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறமுடியுமா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். புத்தியுள்ளோர்களுக்கு இதில் அதிக படிப்பினைகள் உள்ளது.
♦️குறிப்புச் சட்டம் :- வணங்கி வழிபடும் உருவப்படங்களையும், தவறான சிந்தனைகளை ஏற்பத்தும் உருவப்படங்களையும் இஸ்லாம் முற்றாக தடை செய்துள்ளது, மேலும் மதிப்பு வழங்கப்படும் சாதாரணமான உருவப்படங்களை இஸ்லாம் முற்றாக தடை செய்யவில்லை இருப்பினும் உலக சிந்தனையை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் அதனை இஸ்லாம் வெறுக்கிறது, அது அல்லாத உயிரினங்களின் உருவப்படங்கள், உயிரற்ற உருவப்படங்கள் மதிப்பில்லாமல் இருந்தால் தாராளமாக அவைகளை தங்களுடைய வீடுகளில் வைத்திருக்க முடியும், அதனை பயன் படுத்த முடியும் அதில் எவ்வித குற்றமும் இல்லை. தன்னுடைய நிழல் படங்கள், புகைப்படங்கள் ஃபோனில் அல்லது மதிப்பற்ற ஓர் இடத்தில் இருந்தால்! அதில் குற்றமில்லை, இருப்பினும் அதனை மதிப்புள்ளதாகக் கறுதி அதனை வீட்டுச் சுவர்களில் தொங்கவிடுவது முற்றிலும் தவறாகும், மேலும் உலக சிந்தனையை ஏற்படுத்தாத உருவப்படங்கள் அதாவது அல்லாஹ்வை ஞாபகம் ஊட்டும் மக்கா மதீனா அது அல்லாத மஸ்ஜிதுகளின் உருவப்படங்கள், நபிமார்கள் நல்லடியார்களின் ஸியாரங்கள் அது அல்லாத அடையாளச் சின்னங்கள் அடங்கிய உருவப்படங்களை வீடுகளிலோ அல்லது தனிப்பட்ட இடங்களிலோ வைத்திருப்பதில் எவ்வித குற்றமும் இல்லை. மேலும் பரக்கதை நாடி நல்லடியார்களின் உருவப்படங்களை வீட்டுச் சுவர்களில் தொங்கவிடுவதில் சமகாலத்து உலமாக்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இமாம்களின் கருத்துக்களை கூர்ந்து கவனிக்கும் போது நல்லடியார்களின் உருவப்படங்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் பரகத்தை நாடி வீட்டுச் சுவர்களில் தொங்கவிடுவது ஏற்றமானதல்ல என்ற கருத்தையும் இங்கு நாம் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்