இஸ்லாம் கூறும் திருமண சட்டங்கள்

514

இஸ்லாம் கூறும் திருமண சட்டங்கள்

 

ஆண் குறியில் ஆண்மை உள்ளவன், உணவு, உடை ஆகியவையும் கொடுக்க வசதி பெற்ற பருவ வயதை எத்தியவளுக்கும திருமணம் செய்து வைப்பது ஸுன்னத்தாகும். மேலும் உணர்ச்சியை அடக்க முடியாத ஆண் பெண்னுக்கு திருமணம் செய்து வைப்பது (கட்டாயம்) வாஜிபாகும். உடலுறவு கொள்ள இயலாதவனுக்கு திருமணம் செய்து வைப்பது மக்ரூஹ் ஆகும்.

 

திருமணத்தில் பர்ளு ஐந்தாகும்

 

1) திருமணப் பெண்

2) மாப்பிள்ளை

3) வலிகாரர்

4) இரண்டு சாட்சிகள்

5) பெண், மாப்பிள்ளை இருவரின் சம்மதம் ஈஜாப் கபூல் சொல்வதாகும்

 

மேற்கூறியவைகளில் ஒன்று இல்லையென்றாலும் திருமணம் நிறைவேறாது. திருமணத்தில் ஐந்து பர்ளுகளின் ஆதாரங்களை இங்கு பதியும் போது பதிவு நீண்டு கொண்டே செல்லும் நோக்கில் தனித்தனி பதிவாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதார எண்களுடன் அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிறக்கம் செய்யப்படும். அதற்கு பின்னர் மேற்கூறியவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

 

(1,2) திருமணத்திற்கு திருமண பெண் மாப்பிள்ளை இருவரும் அவசியமாகும்

 

♦️ஆண்களை படைத்து அவர்களுக்கு உற்ற துணைகளுக்காக பெண்களை அல்லாஹ் படைத்துள்ளான். ஒரு ஆண் பெண்ணை ஷரியத்து முறைப்படி திருமணம் செய்யாமல். இருப்பினும் ஒரு ஆண் மற்றொரு ஆணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ ஜோடியாக திருமணம் என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடடுவது விபச்சாரத்தை விடவும் கொடியதாகும். இதனை இஸ்லாம் முற்றாக தடை செய்துள்ளது.

 

(3) திருமணத்திற்கு வலிகாரர் அவசியமாகும்

 

♦️வலி என்பவர் :- பருவ வயதுடைய புத்தி சுவாதீனமுள்ள அஸபா என்று கூறப்படும் வாரிசுக்காரர்களாகும். இதில் மகன், மகனுடைய மகன் போன்றோர்கள் தாயின் திருமணத்திற்கு வலியாக வர முடியாது.

 

♦️அடுத்து அவர்கள் அல்லாத தன்னுடைய தந்தை பாட்டன், முப்பாட்டன் போன்ற வரிசையில் உள்ளவர்கள்தான் வலியாக வரும் முன்னுரிமையை பெறுவார்கள்.

 

♦️அடுத்து தன்னுடைய ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த தனது சகோதரன், அவன் இல்லாவிட்டால் தன் தகப்பனுக்கு மட்டும் பிறந்த சகோதரன், அவனும் இல்லாவிட்டால் முந்தியவகை சகோதரனின் ஆண்மகன், அவனும் இல்லாவிட்டால் பிந்தியவகை சகோதரனின் ஆண்மகன் போன்றோர்கள்.

 

♦️அடுத்து தகப்பனுடைய ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்த தனது தகப்பனின் உடன் பிறந்த சகோதரன். அவன் இல்லாவிட்டால் தன் தகப்பனின் தந்தைக்கு மட்டும் பிறந்த சகோதரன். அவனும் இல்லா விட்டால் பிந்திய வகை தகப்பனுடைய சகோதரனின் ஆண்மகள் போன்றோர்கள்.

 

♦️அஸபாக்காரர்களில் ஒருவர் இருக்க அவரை விட்டு விட்டு வேறு நபரை வலிகாரராக நியமிக்க முடியாது. மேலும் பல சூழ்நிலை காரணமாக அஸபாக்காரர்களிலுள்ள வலி முன் வரவில்லை என்றால் காளியார் தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள பருவமடைந்த பெண்ணை வலியாக முன் நின்று திருமணம் செய்து கொடுக்கலாம். உரிய நிபந்தனைகளின் படி காளியார் இல்லாவிட்டால் நீதியான ஒரு ஸாலிஹான மனிதர் வலியாக முன் நின்று திருமணம் செய்து வைக்க முடியும்.

 

(4) திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியமாகும்

 

♦️நீதமுள்ள இரண்டு சாட்சிகள் திருமண நிகழ்விற்கு சமுகம் அழிப்பது மட்டுமின்றி திருமணத்திற்கு வருகை தந்திருக்கும் ஜமாஅத்தை சாட்சியாக முன் நிறுத்துவது ஏற்றமாயிருக்கும். சாட்சிகள் ஈஜாப் கபூல் வாசகத்தை விளங்குகிறவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பது அவசியமாகும்.

 

🔶குறிப்பு :- வலிகாரர் பெண்ணிடம் திருமண சம்மதம் கேட்கும் போது, இரு சாட்சிகளும் அப்பெண்ணின் சம்மதத்தை காதால் கேட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு கேட்டிருந்தால் திருமணச் சபையில் அவ்விரு சாட்சிகளும் மாப்பிள்ளையின் சம்மதத்தையும் கேட்பது அவசியமாகும்.

 

(5) பெண், மாப்பிள்ளை இருவரின் சம்மதம் (ஈஜாப் கபூல்)

 

♦️திருமணத்திற்கு திருமண பெண், மாப்பிள்ளை இருவரின் சம்மதமும் அவசியமாகும். விரும்பாத பெண்ணையோ ஆணையோ நிர்ப்பந்தித்து திருமணம் செய்வித்தல் கூடாது. ஈஜாப் கபூல் ஒழுங்கு முறைப்படி நிறைவேற்றப்பட்ட வேண்டும்.

 

ஆரம்பத்தில் மாப்பிள்ளைக்கு கலிமா ஷஹாதத் சொல்லிக் கொடுத்த பின்னர் கீழ் கானும் ஸலவாத்தை கூற வேண்டும்.

 

بسم الله على ملة رسول الله محمد بن عبد الله صلى الله عليه وسلم والـه وصحبه وسلم

 

♦️அடுத்து (ஈஜாப்) நான் வக்கீலாக இருந்து, இன்னாருடைய மகள் இன்னாளை, இத்தனை ரூபாய் மஹருக்கு, இன்னன்ன பெயர் உடையவர்களை சாட்சிகளாக வைத்து உனக்கு மனைவியாக்கி தருகிறேன் இதில் உனக்கு சம்மதமா? என்று வெளிப்படையாக கேட்க வேண்டும். அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் மாப்பிள்ளை கீழுள்ள வாசகத்தைக் கொண்டு (காபூல்) செய்ய வேண்டும்.

 

قبلت نكاحها وتزويجهابهذاالصداق المذكور ورضيت بها وبه

 

♦️நான் அவளின் திருமணத்தையும் மனைவி பாக்கியத்தையும் (இப்போது) கூறப்பட்ட இந்த மஹரையும் ஒப்புக் கொண்டேன். மேலும் அவளைக் கொண்டும் பொருந்திக் கொண்டேன் என்று கூற வேண்டும். இது போலவே பெண்ணிடத்திலும் சம்மதம் பெற வேண்டும்.

 

மேற்கூறிய வாசகங்களை மாப்பிள்ளை சொல்லக் கடினம் என்றால் வக்கீலாக முன் நிற்பவர் சம்மதம் கேட்கும் போது கீழ் கானும் வார்த்தையை மாத்திரம் சொன்னாலும் போதுமானது.

 

قبلت

 

நான் ஒப்புக் கொண்டேன் என்று (இரு சாட்சிகளும் கேட்கும் வகையில்) கூறினாலும் திருமணம் நிறைவேறி விடும்.

 

இதில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது உதாரணமாக

 

♦️ஒரு வேளை திருமண பெண், அல்லது மாப்பிள்ளை வாய் பேச முடியாமல் அல்லது அது அல்லாத சூழ்நிலையில் பேச முடியாமல் இருந்தால் அவர்களின் உரிமையாளர் கீழ் கானும் வாசகத்தை கூற வேண்டும்.

 

قبلت نكاحهاله

 

இந்த மாப்பிள்ளைக்காக அவளின் திருமணத்தை நான் ஒப்புக் கொண்டேன் என்று கூற வேண்டும். (இவ்வாறே திருமண பெண் உரிமையாளரும் கூற வேண்டும்.)

 

🔶இடை குறிப்பு :- மாப்பிள்ளை, பெண் இருவரில் யாருக்காகிலும் தந்தையின் பெயர் தெரியாதிருந்தால் அல்லது புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களாக இருந்தால் அப்துல்லாஹ்வுடைய மகன் அல்லது மகள் இன்ன பெயருடையவரை என்று சொல்லி இருவரிடமும் சம்மதம் கேட்க வேண்டும்.

 

பின்னர் திருமண துஆ ஓத வேண்டும்

 

  اَلْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. اَللّٰهُمَّ اجْعَلْ هَذَا الْعَقْدَ عَقْدًا مُبَارَكًا مَعْصُوْمًا وَأَلْقِ بَيْنَهُمَا أُلْفَةً وَقَرَارًا دَائِمًا وَلَا تَجْعَلْ بَيْنَهُمَا فِرْقَةً وَفِرَارًا وَخِصَامًا وَاكْفِهِمَا مُؤْنَةَ الدُّنْيَا وَالْاٰخِرَةِ. اَللّٰهُمَّ أَلِّفْ بَيْنَهُمَا كَمَا أَلَّفْتَ بَيْنَ آدَمَ وَحَوَّاءَ وَأَلِّفْ بَيْنَهُمَا كَمَا أَلَّفْتَ بَيْنَ إِبْرَاهِيْمَ وَسَارَةَ وَأَلِّفْ بَيْنَهُمَا كَمَا أَلَّفْتَ بَيْنَ سُلَيْمَانَ وَبُلْقِيْسَ وَأَلِّفْ بَيْنَهُمَا كَمَا أَلَّفْتَ بَيْنَ يُوْسُفَ وَزُلَيْخَا وَأَلِّفْ بَيْنَهُمَا كَمَا أَلَّفْتَ بَيْنَ سَيِّدِنَا مُحَمَّدٍ وَخَدِيْجَةَ الْكُبْرَى وَأَلِّفْ بَيْنَهُمَا كَمَا أَلَّفْتَ بَيْنَ الْمَاءِ وَالطِّيْنِ وَالصَّالِحَاتِ وَالصَّالِحِيْنَ وَارْزُقْهُمَا ذُرِّيَّةً طَيِّبَةً نَافِعَةً فِي الدِّيْنِ وَالدُّنْيَا وَالْاٰخِرَةِ مَعَ السَّلَامَةِ الدَّائِمَةِ وَالسَّعَادَةِ الْأَبْدِيَّةِ وَارْزُقْهُمَا التَّقْوَى وَحُسْنَ الْخَاتِمَةِ. اَللّٰهُمَّ اِنَّا نَسْأَلُكَ أَنْ تُلْقِيَ بَيْنَهُمَا الْمَحَبَّةَ وَالْوِدَادَ وَاَنْ تَرْزُقَهُمَا النَّسْلَ الصَّالِحَ مِنَ الْبَنَاتِ وَالْاَوْلَادِ، حَتَّى تُرِيَهُمَا الْأَسْبَاطَ وَالْاَحْفَادَ، وَاَنْ تُوَسِّعَ عَلَيْهِمَا الرِّزْقَ، وَاَنْ تَحْفَظَهُمَا مِنْ مَكَائِدِ الْخَلْقِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ. رَبَّنَا هَبْ لَنَا مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ، رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا، رَبَّنَا اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْاٰخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. وَصَلَّى اللهُ عَلَى خَيْرِ خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى اٰلِهِ وَأَصْحَابِهِ اَجْمَعِيْنَ. سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ 

 

திருமண துஆ ஓதி முடித்ததும் திருமணச் சபையில் இருப்பவர்கள் திருமண தம்பதிகளுக்காக வாழ்த்துக் கூற வேண்டும்.

 

மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டிய வாழ்த்து துஆக்கள்

 

بَارَكَ اللَّهُ لَكَ

 

அல்லாஹ் உமக்கு பரகத்து செய்வானாக.

 

بَارَكَ اللَّهُ عَلَيْكَ

 

அல்லாஹ் உங்கள் மீது பரகத்து செய்வானாக.

 

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ

 

அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!.

 

♦️மேற்கூறிய துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறி வாழ்த்துக் கூற முடியும். மேலதிக துஆக்கள் மனனம் உள்ளவர்கள் அவைகளை கொண்டு வாழ்த்துக்களை கூறிக் கொள்ளலாம்.

 

பின்னர் மணமக்கள் இருவரும் சந்திக்கும் பொழுது மாப்பிள்ளை தன் வலக்கரத்தால் பெண்ணுடைய நெற்றியைப் பிடித்துக் கொண்டு கீழ் கானும் வாசகங்களை கொண்டு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.

 

بَارَكَ اللهُ لِكُلٍّ مِّنَّا فِيْ صَاحِبِهٖ

 

நம்மிலிருந்து ஒவ்வொருவருக்கும் மற்றவருடைய விஷயத்தில் அல்லாஹ் பரக்கத்துச் செய்வானாக!’ என்று இருவரும் கூற வேண்டும்.

 

அதன் பின்னர் திருமண பெண் மாப்பிள்ளை இருவரும் இஷ்திகாரா தொழுகையை கொழுது கொள்ள வேண்டும்

 

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَالسُّورَةِ مِنَ القُرْآنِ إِذَا هَمَّ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள். உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத (இஸ்திகாரா) இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6382

 

♦️இஸ்திகாரா என்பது நலவைத் தேடுதல் என்பதாகும். வியாபாரம், திருமணம், விவசாயம், வீடு கட்டுதல், பிரயாணம் போன்ற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நற்காரியங்களைத் தொடங்கும் போது இத்தொழுகையை தொழுவது போன்று பிரச்சினை சிக்கல் தடுமாற்றம் ஏற்படும் போதும் இத்தொழுகைய தொழுது கொள்ள முடியும்.

 

திருமண பெண் மாப்பிள்ளை இருவரும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் நோக்கில் இஸ்திகாரா நிய்யத்துச் செய்து கொண்டு இரண்டு ரக்அத் உள்ள தொழுகையை தொழுது கொள்வதும் ஸுன்னத்தாகும். அல்ஹம்துலில்லாஹ் திருமணம் முழுமை பெற்று விட்டது, அதன் பின்னர் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.

 

🔶குறிப்பு :- மாப்பிள்ளை கொடுக்கும் மஹராகிறது விலை மதிப்புள்ளதாக மதிப்பு பெற்ற பிரயோஜனம் உள்ளதாக இருத்தல் வேண்டும். திருமணத்தில் மஹ்ரை குறிப்பது ஸுன்னத்தாகும். குறிக்கப்பட்ட மஹ்ரை கொடுப்பது வாஜிபாகும். மஹரைக் குறிக்காமல் நிகாஹ் முடிப்பது மக்ரூஹாகும். மேலும் திருமண நிகழ்வுகளில் ஆரம்பத்தில் ஹம்து ஸலவாத்து மற்றும் பாத்திஹா ஓதுவது, ஈஜாபு கபூலுக்கு முன் குத்பா ஓதுவது, ஈஜாபு கபூலுக்கு பின்னர் கூட்டு துஆ ஓதுவது மட்டுமின்றி ஹம்து ஸலவாத்தைக் கொண்டு நிறைவு செய்வதும் ஸுன்னத்தாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.