உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்

73

உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتُطْعِمُهُ وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ قَالَتْ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ مُلُوكًا عَلَى الأَسِرَّةِ أَوْ مِثْلَ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ شَكَّ إِسْحَاقُ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهمْ فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ وَضَعَ رَأْسَهُ ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ كَمَا قَالَ فِي الأَوَّلِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ أَنْتِ مِنْ الأَوَّلِينَ فَرَكِبَتْ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنْ الْبَحْرِ فَهَلَكَتْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குச்செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையை கோதி விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்படியே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்,இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்.. ஏறிச் செல்கிறார்கள்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், யா ரஸுலல்லாஹ்! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அன்னை) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்து உறங்க ஆரம்பித்தார்கள் பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்.!என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2789, 2789, 7001 முஸ்லிம் 1912 திர்மிதி 1645 நஸாயி 3171

 

♦️உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும், உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் மில்ஹானின் பிள்ளைகள். இருவரும் சகோதரிகள் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள். இவர்களது வீட்டை அப்போது “மில்ஹானின் வீடு” என்று தான் மக்கள் அழைத்தார்கள். மதீனாவில் இருக்கும் வீடுகளிலேயே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் விருப்பமான வீடுகளுளில் மில்ஹானின் வீடும் ஒன்றாகும்.

 

♦️போலி தவ்ஹீத் வாதிகள் அண்ணிய பெண் வீட்டுக்கு சென்றார்கள் என்று கூறுகின்றனர். ஆனால் ஹதீஸ் கூறுகிறது அவர்கள் சிரிய தாயார் வீட்டுக்கு தான் சென்றார்கள் காரணம் உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வசித்த வீட்டில் தான் உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் வாசித்தார்கள் இருவரும் சகோதரிகள். யார் இந்த உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா என்று ஹதீஸ் கூறுகிறது

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عِنْدَنَا فَعَرِقَ وَجَاءَتْ أُمِّي بِقَارُورَةٍ فَجَعَلَتْ تَسْلِتُ الْعَرَقَ فِيهَا فَاسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا أُمَّ سُلَيْمٍ مَا هَذَا الَّذِي تَصْنَعِينَ؟ قَالَتْ هَذَا عَرَقُكَ نَجْعَلُهُ فِي طِيبِنَا وَهُوَ مِنْ أَطْيَبِ الطِّيبِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எங்களது வீட்டுக்கு வந்து மதிய ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்களது உடலில் வியர்வை ஏற்பட்டது. என் தாயார் உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வந்து வியர்வைத் துளிகளை அந்தக் குடுவையில் சேகரிக்கலானார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, “உம்மு சுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்கள். என் தாயார், “இது தங்களது வியர்வை. இதை எங்கள் நறுமணப் பொருளில் சேர்க்கிறோம். இது நல்ல வாசனைப் பொருட்களில் ஒன்றாகும் என்று சொன்னார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2331 அஹ்மது 11426

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ بَيْتَ أُمِّ سُلَيْمٍ فَيَنَامُ عَلَى فِرَاشِهَا وَلَيْسَتْ فِيهِ قَالَ فَجَاءَ ذَاتَ يَوْمٍ فَنَامَ عَلَى فِرَاشِهَا فَأُتِيَتْ فَقِيلَ لَهَا هَذَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَامَ فِي بَيْتِكِ عَلَى فِرَاشِكِ قَالَ فَجَاءَتْ وَقَدْ عَرِقَ وَاسْتَنْقَعَ عَرَقُهُ عَلَى قِطْعَةِ أَدِيمٍ عَلَى الْفِرَاشِ فَفَتَحَتْ عَتِيدَتَهَا فَجَعَلَتْ تُنَشِّفُ ذَلِكَ الْعَرَقَ فَتَعْصِرُهُ فِي قَوَارِيرِهَا، فَفَزِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا تَصْنَعِينَ؟ يَا أُمَّ سُلَيْمٍ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ نَرْجُو بَرَكَتَهُ لِصِبْيَانِنَا قَالَ أَصَبْتِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு வந்து, அங்கு உம்மு சுலைம் (படுத்து) இராதபோது அவர்களது விரிப்பில் படுத்து உறங்குவார்கள். ஒரு நாள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து உம்மு சுலைமின் விரிப்பில் படுத்துறங்கினார்கள். அப்போது அங்கு வந்த உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம், “இதோ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் வீட்டில் உங்கள் விரிப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. உடனே உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வந்(து பார்த்)தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வியர்த்திருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திடுக்கிட்டு விழித்து, “உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் யா ரஸுலல்லாஹ்! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்) என்று கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீ செய்தது சரிதான்” என்று சொன்னார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2331 அஹ்மது 13310, 13366

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَدْخُلُ عَلَى أَحَدٍ مِنَ النِّسَاءِ إِلاَّ عَلَى أَزْوَاجِهِ إِلاَّ أُمِّ سُلَيْمٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என் தாயார்) உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களைத் தவிர, தம் துணைவியரல்லாத வேறெந்த (அந்நியப்) பெண்களிடமும் (அவர்களது இல்லங்களுக்குச்) செல்லமாட்டார்கள். என் தாயாரின் இல்லத்திற்கு மட்டுமே செல்வார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2455

 

♦️உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகம் அதிகமாக வருபவர்களாகவும் அங்கு உறங்குபவர்களாகவும் இருந்து வந்தார்கள் என்று அதிகமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

قال النووي رحمه الله : أم حرام أخت أم سليم رضي الله عنهما ” أم سليم رضي الله عنها كانت إحدى خالاته من الرضاعة

 

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரி ஆவார்கள். மேலும் உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பால்குடிச் சிற்றன்னைகளில் ஒருவர்.

 

நூல் ஆதாரம் ஷர்ஹ் முஸ்லிம் 16/10

 

♦️உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பால் குடி உறவு” அன்னை ஆவார்கள். அவர்களின் வீடு அன்னிய பெண்ணின் வீடு கிடையாது. அதே உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் தான் அவர்களின் சகோதரி உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வசித்து வந்தார்கள். மேலும் உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதே வீட்டுக்கு தான் சென்றார்கள். இவ்வாறு வரலாறுகள் இருக்க போலி தவ்ஹீத் பீஜே முட்டிகள் அன்னிய பெண்ணின் வீட்டுக்கு சென்றார்கள் என்று ஹதீஸ்களை சித்தரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பால் குடி உறவு முறையில் தாய்” அவர்களின் சகோதரி உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் யார்?

 

قال بن وهب رحمه الله : أم حرام رضي الله عنها إحدى حالات النبي صلى الله عليه وسلم من الرضاعة فلذلك كان يقيل عندها

 

இமாம் இப்னு வஹப் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பால்குடிச்
சிற்றன்னைகளில் ஒருவர். எனவே தான், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.

 

قال ابن عبد البر رحمه الله وغيره : أم حرام رضي الله عنها كانت إحدى خالاته من الرضاعة

 

இமாம் இப்னு அப்துல் பர்ரு ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் அது அல்லாதவர்களும் கூறினார்கள். உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பால் குடி உறவு முறையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தாயார் சிற்றன்னைகளில் ஒருவராவார்கள்.

 

قال النووي رحمه الله : أم حرام أخت أم سليم أنهما كانتا خالتين لرسول الله صلى الله عليه وسلم محرمين إما من الرضاع

 

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரி ஆவார்கள். மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருவரும் பால் குடி உறவு முறையில் சிற்றன்னை ஆவார்கள். (தெளிவான முறையில் கூறப்போனால்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருவரும் மஹ்ரமானவர்கள்.

 

قال النووي رحمه الله : اتفق العلماء على أن أم حرام رضي الله عنها كانت محرما له صلى الله عليه وسلم

 

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவாகள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஹ்ரமான உறவுகளில் ஒருவராக இருந்தார்கள் என்பதை அனைத்து அறிஞர்களும் ஒட்டு மொத்தமாக ஒப்பு கொண்டுள்ளனர்கள்.

 

புஹாரி ஷரீப் விரிவுரையாளர் இமாம் இப்னு ஹஜர் அஸ்கானி ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் முஸ்லிம் ஷரீப் விரிவுரையாளர் இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் பல அறிஞர்களின் கூற்றை முன் வைத்து உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பால் குடி உறவு முறையில் சிற்றன்னை என்று உறுதி செய்துள்ளார்கள்.

 

நூல் ஆதாரம் புஹாரி ஷரீப் விளக்கவுரை பத்ஹுல் பாரி 11/ 79″ முஸ்லிம் ஷரீப் விரிவுரை ஷரஹ் முஸ்லிம் 16/10

 

குறிப்பு :- மேற்கூறிய ஹதீஸை அறிவித்தார்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரி மகன் ஆவார்கள். மேலும் உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் அவர்களின் சகோதரி உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மேற்கூறப்பட்ட இருவரும் பால் குடி உறவு முறையில் சிற்றன்னை ஆவார்கள். சிற்றன்னை தாய் வீட்டுக்கு தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள் அங்கு உறங்கினார்களே தவிர அண்ணிய பெண் வீட்டுக்கு செல்லவில்லை. சென்றதாக கூறுபவர்கள் இஸ்லாத்தை பார்வையில் மடையர்களும். மேலும் இவைகளை தவறாக சித்தரித்து ஹதீஸ்களை மறுப்பவர்கள் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறிய முர்த்தத் ஆவார்கள். அவர்களை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.