உலகம் உருண்டையானது அது நகர்கிறது

57

உலகம் உருண்டையானது அது நகர்கிறது

 

وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் (நகர்ந்து) செல்கிறது.

சூரா அன்பியா ஆயத் 33

 

اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ

 

குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்.

சூரா பகரா ஆயத் 164

 

♦️இரவும் பகலும் மாறி மாறி வருகிறது அதாவது பூமி சுழன்று கொண்டிருக்கிறது. பூமி தட்டையாக இருந்தால் எந்த விதத்திலும் சுழற முடியாது. மேற்கூறிய பாடத்திலுள்ள ஆயத்துக்களில் பூமியை வரித்துள்ளான் என்று கூறியதன் அர்த்தம் தட்டையாக பூமி உள்ளது என்ற அர்தத்தில் அல்ல.

 

وَهُوَ الَّذِىْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ وَاَنْهٰرًا وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

சூரா ரஃது ஆயத் 3

 

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ يُكَوِّرُ الَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى الَّيْلِ

 

குர்ஆன் கூறுகிறது அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கின்றான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை (விரிக்கிறான்.) அவனே பகலைச் சுருட்டி இரவை (விரிக்கிறான்).

சூரா ஜுமர் ஆயத் 5

 

♦️மனிதர்களுக்காக வேண்டி இறைவன் இந்த பூமியை விரிப்பாக அதாவது மலைகளையும் ஆறுகளையும் பாதைகளையும் அதில் ஏற்படுத்தி கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரித்து விசாலமாக ஆக்கியுள்ளான். ஆக இங்கு பூமி குறித்த வசனங்கள் யாவும் அதன் வடிவம் குறித்து முன்னிருத்தி பேசபடவில்லை. மாறாக அப்பூமியின் மூலம் மனிதர்களும் ஏனைய உயிரனங்களும் அடையும் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறது. மேலும் இரவைச் சுருட்டிப் பகலை (விரிக்கிறான்.) அவனே பகலைச் சுருட்டி இரவை (விரிக்கிறான்) என்பதாக மேற்கூறப்பட்ட ஆயத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள். விரிப்பாக அதாவது விசாலமாக இருக்கக்கூடிய பூமியை இறைவன் இரவைப் பகலாலும் பகலை இரவாலும் சுருட்டுகிறான் அதாவது மாறி மாறி சுழற்றிக் கொண்டு இருக்கிறான் என்பதே இதன் அர்த்தமாகும். மேலும்

 

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ‏

 

குர்ஆன் கூறுகிறது இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே.

சூரா ரஹ்மான் ஆயத் 17

 

فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَۙ‏

 

குர்ஆன் கூறுகிறது எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

சூரா மஆரிஜ் ஆயத் 40

 

♦️ஆரம்ப ஆயத்தில் இரு கிழக்குத்திசை இரு மேற்குத் திசைகள் என்பதாகவும் மற்ற ஆயத்தில் கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் என்று பொதுவாக குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இவைகளை நன்றாக சிந்தித்து பாருங்கள். உலகம் தட்டையாக இருந்திருந்தால் ஒரு கிழக்குத்திசை ஒரு மேற்குத்திசை மட்டுமே காணப்படும். ஆனால் உலகம் உருண்டைகளாக இருந்தால் மாத்திரமே இரு திசைகள் பல திசைகள் என்று வெவ்வேறு கோணங்களில் காணப்படும். எனவே இது இறைவனின் மாபெரும் அத்தாட்சியாகும். இந்த உலகம் அதாவது பூமி உருண்டை வடிவமே அன்றி தட்டை அல்ல என்பதை திருக்குர்ஆனை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.