எங்கும் அவனே என்று கூறலாமா?

314

எங்கும் அவனே என்று கூறலாமா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
எழுத்தாசிரியர் :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

வஹ்ததுல் வுஜூத் ஏகத்துவ ஞானம் அதாவது எதார்த்தத்தில் எங்கும் அல்லாஹ்வே இருக்கின்றான் என்று உள்ளமையைக் கொண்டு ஓர்மை படுத்தக்கூடிய ஓர் அறிவாகும். இந்த அறிவு ஞானத்தை பற்றி அதிகமான இமாம்கள் அறிஞர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். இவைகளை பற்றி இங்கு நாம் சுருக்கமாக திருக்குர்ஆன் ஹதீஸ்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கலாம்.

 

عَن جَابر بن عبد الله الْأنْصَارِيّ رَضِي الله عَنْهُمَا قَالَ: قلت: يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي أَخْبرنِي عَن أوّل شَيْء خلقه الله قبل الْأَشْيَاء؟ قَالَ: يَا جَابر إِن الله خلق قبل الْأَشْيَاء نور نبيك مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم من نوره فَجعل ذَلِك النُّور يَدُور بِالْقُدْرَةِ حَيْثُ شَاءَ الله، وَلم يكن فِي ذَلِك الْوَقْت لوح وَلَا قلم وَلَا جنَّة وَلَا نَار وَلَا ملك وَلَا سَمَاء وَلَا أَرض وَلَا شمس وَلَا قمر وَلَا إنس وَلَا جن، فَلَمَّا أَرَادَ الله تَعَالَى أَن يخلق الْخلق قسم ذَلِك النُّور أَرْبَعَة أَجزَاء: فخلق من الْجُزْء الأوّل الْقَلَم، وَمن الثَّانِي اللَّوْح، وَمن الثَّالِث الْعَرْش، ثمَّ قسم الْجُزْء الرَّابِع أَرْبَعَة أَجزَاء: فخلق من الأول حَملَة الْعَرْش، وَمن الثَّانِي الْكُرْسِيّ، وَمن الثَّالِث بَاقِي الْمَلَائِكَة ثمَّ قسم الرَّابِع أَرْبَعَة أَجزَاء: فخلق من الأول نور أبصار الْمُؤمنِينَ، وَمن الثَّانِي نور قُلُوبهم وَهِي الْمعرفَة بِاللَّه وَمن الثَّالِث نور أنسهم وَهُوَ التَّوْحِيد لَا إِلَه إِلَّا الله مُحَمَّد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم

 

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் என் தாயும் என் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான். இந்த ஒளியானது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி பயணித்தது, அந்நேரத்தில் சொர்க்கம், நரகம், எழுதுகோள், லவ்ஹு, வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனித இனம் என எதுவும் படைக்கப்படவில்லை. அல்லாஹ் படைப்பினங்களை படைக்க நாடிய போது, அந்த ஒளியை நான்கு பாகங்களாக பிரித்து, முதல் பாகத்திலிருந்து எழுதுகோலையும், இரண்டாவதிலிருந்து லவ்ஹையும், மூன்றாவதிலிருந்து அர்ஷையும் படைத்தான். நான்காவது பாகத்தை மீண்டும் நான்கு பாகங்களாக ஆக்கி, முதலாவதிலிருந்து அர்ஷை சுமக்கும் மலக்குமார்களையும், இரண்டாவதிலிருந்து குர்ஸியையும், மூன்றாவதிலிருந்து மலக்குமார்களையும் படைத்தான். மீதமுள்ள ஒரு பாகத்தை மீண்டும் நான்காக பிரித்து, முதலாவதிலிருந்து வானங்களையும், இரண்டாவதிலிருந்து கோளங்களையும், மூன்றாவதிலிருந்து சுவனத்தையும், பூமியையும் படைத்தான். ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மீண்டும் நான்காவதை நான்கு பாகங்களாக பிரித்து, அவற்றில் முதலாவதிலிருந்து மூஃமின்கள் காணக்கூடிய ஒளியையும், இரண்டாவதிலிருந்து மூஃமின்களின் ஒளி பொருந்திய இதயங்களையும், மூன்றாவதிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹ் எனும் ஏகத்துவ கலிமாவை மொழியக்கூடிய மூஃமின்களின் நாவுகளையும் படைத்தான்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ரஸ்ஸாக் 99 பதாவா ஹதீஸிய்யா 44 மாவாகிபுல் லதுனியா 1/71 மேலும்

 

يَا مُحَمَّدُ لَوْلَاكَ مَا خَلَقْتُ الْجَنَّةَ ، وَلَوْلَاكَ مَا خَلَقْتُ النَّارَ ” وَفِي رِوَايَةِ ابْنِ عَسَاكِرَ : ” لَوْلَاكَ مَا خَلَقْتُ الدُّنْيَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். நபியே நாயகமே உங்களை படைக்கவில்லை என்றால் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்திருக்க மாட்டான். இன்னும் ஓர் அறிவிப்பில் இவ்வுலகையும் (இறைவன்) படைத்திருக்க மாட்டான்.

 

அறிவிப்பவர் :- அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்”
முஸ்தத்ரக் 2/615 இப்னு அஸாகிர் 2/310

 

♦️ஏக இறைவன் அல்லாஹ்” அனைத்து படைப்பினங்களையும் படைக்க முன்னர் முதல் முதலில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் ஒளியை அவனிலிருந்தும் வெளிப்படுத்தினான். அதை கொண்டு மேல் உலகம் கீழ் உலகம் அதிலுள்ள அனைத்து வஸ்துக்களையும் அவனே படைத்தான் என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

🔶உதாரணமாக :- ஒரு நபரை அழைத்து இன்னாரின் பிள்ளை என்று தந்தை பெயரைச் சொல்லி அழைப்பார்கள். ஆனால் சகல மனிதர்களும் ஒன்றுபட்டு இருக்கும் போது இவர் இன்னாரின் பிள்ளை, இன்னாரின் பிள்ளை என்று கூறாமல் நாம் அனைவரும் ஆதமின் பிள்ளைகள் என்று கூறினால் அதில் குற்றமில்லை. அதுபோன்று தான் அல்லாஹ்வின் ஒளியிலிருந்து நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் ஒளியை அல்லாஹ் வெளிப்படுத்தி அதிலிருந்து சகல வஸ்துக்களையும் அவனே படைத்துள்ளான். எனவே சகல படைப்பு வஸ்துக்களுக்கும் அடிப்படை அவனே என்று கூறுவதில் எவ்வித குற்றமும் இல்லை உண்மையும் எதார்ததமும் அதுதான் என்பதை கீழ் கானும் ஆயத்தை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 

هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

 

குர்ஆன் கூறுகிறது (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; வெளிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்தையும் நன்கறிந்தவன். சூரா ஹதீத் ஆயத் 3

 

♦️ஒவ்வொரு படைப்பு வஸ்துக்களுக்கும் ஆரம்பம் முடிவு உள்ளது. அதுபோன்று வெளிரங்கம்” வெளிப்படையாக இருக்கக்கூடியவைகளும் அந்தரங்கம்” மறைமுகமாக இருக்கக்கூடியவைகளும் உண்டு. எதார்த்தத்தில் ஆரம்பம்” முடிவு” வெளிரங்கம்” அந்தரங்கம்” இவையெல்லாம் அல்லாஹ் அவனே என்று கூறுவதை நம்மால் காண முடிகிறது. எனவே சகல படைப்பு வஸ்துக்களையும் அதன் செயல் பாடுகளையும் அல்லாஹ் அவனே என்கிறான் இவைகளை பற்றி சுருக்கமாக திருக்குர்ஆன் ஹதீஸ்கள் வெளிச்சத்தில் பார்க்கலாம்.

 

மனிதனை படைத்தவனும் அல்லாஹ் அவனே

 

خَلَقَ الْاِنْسَانَۙ

 

மனிதனைப் படைத்தானும் அவனே. குர்ஆன் :- சூரா ரஹ்மான் ஆயத் 3

 

♦️நேர்வழி காட்டுபவனும் அல்லாஹ் அவனே

 

الَّذِىْ خَلَقَنِىْ فَهُوَ يَهْدِيْنِۙ‏

 

என்னைப் படைத்தவனும் அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறவனும் அவனே. குர்ஆன் :- சூரா ஷுஃரா ஆயத் 78

 

வழிதவறச் செய்பவனும் அல்லாஹ் அவனே

 

يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا

 

(இவ்வேதத்தை) கொண்டு பலரை வழிகெடும்படி செய்கிறவன் “அவனே” இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படி செய்கிறவன் “அவனே” குர்ஆன் :- சூரா பகரா ஆயத் 26

 

நம்முடன் இருப்பவனும் அல்லாஹ் அவனே

 

لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا

 

கவலைப்படாதீர்கள் நிச்சயமாக நம்முடன் இருப்பவன் அல்லாஹ் அவனே. குர்ஆன் :- சூரா தவ்பா ஆயத் 40

 

கற்றுக் கொடுப்பவனும் அல்லாஹ் அவனே

 

اَلرَّحْمٰنُۙ‏ :- عَلَّمَ الْقُرْاٰنَ‏

 

இந்தக் குர்ஆனை கற்றுக் கொடுத்தவன் அர்ரஹ்மான் அவனே. குர்ஆன் :- சூரா ரஹ்மான் ஆயத் 1,2

 

பேசக்கற்றுக் கொடுப்பவனும் அல்லாஹ் அவனே

 

عَلَّمَهُ الْبَيَانَ‏

 

மனிதனுக்கு பேசக் கற்றுக் கொடுத்தவனும் அவனே. குர்ஆன் :- சூரா ரஹ்மான் ஆயத் 4

 

இறைஞானம் நுண்ணறிவை கொடுப்பவனும் அல்லாஹ் அவனே

 

يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ

 

குர்ஆன் கூறுகிறது (அல்லாஹ்) தான் நாடியவர்களுக்கு “ஹிக்மா” (இறைஞானம், நுண்ணறி)வை கொடுக்கின்றான். சூரா பகரா ஆயத் 269

 

மார்க்க அறிவை கொடுப்பவனும் அல்லாஹ் அவனே

مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக (கல்விமானாக) ஆக்கி விடுகிறான்.

 

அறிவிப்பவர் :- முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 70

 

மரணிக்க செய்பவனும் உயிர்பிக்க செய்பவனும் அல்லாஹ் அவனே

 

وَالَّذِىْ يُمِيْتُنِىْ ثُمَّ يُحْيِيْنِۙ‏

 

என்னை மரணிக்கச் செய்கிறவனும் அவனே; பிறகு என்னை உயிர்ப்பிப்பவனும் அவனே. குர்ஆன் :- சூரா ஷுஃரா ஆயத் 81

 

நோயை குணப்படுத்துபவன் அல்லாஹ் அவனே

 

وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ‏

 

நான் நோயுற்ற தருனத்தில், என்னைக் குணப்படுத்துபவன் அவனே. குர்ஆன் :- சூரா ஷுஃரா ஆயத் 80

 

நோயாளியாக இருப்பவனும் அல்லாஹ் அவனே

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்த போது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4789

 

முஃமீன்களின் உதவியாளன் அல்லாஹ் அவனே

 

اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا

 

நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவியாளன் அல்லாஹ் அவனே. குர்ஆன் :- சூரா பகரா 257

 

♦️பாதுகப்பவனும் உதவி செய்பவனும் அல்லாஹ் அவனே

وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏

 

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை. (பாதுகப்பவனும் உதவி செய்பவனும் அவனே) குர்ஆன் :- சூரா பகரா ஆயத் 107

 

♦️யுத்த களத்தில் எதிரிகளை வெட்டியவனும் அல்லாஹ் அவனே

 

فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ

 

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல, அவர்களை வெட்டியவன் அல்லாஹ் அவன் தான். குர்ஆன் :- சூரா அன்பால் ஆயத் 17

 

எதிரிகள் மீது மண்ணை எரிந்தவனும் அல்லாஹ் அவனே

 

وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى

 

(எதிரிகள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அவர்களுக்கு எறிந்தான் அல்லாஹ் அவன் தான். குர்ஆன் :- சூரா அன்பால் ஆயத் 17

 

வானம் பூமியை ஆட்சி செய்பவன் அல்லாஹ் அவனே

 

لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ

 

வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது. குர்ஆன் :- ஹதீத் ஆயத் 2

 

இரவு பகலாக மாறச் செய்பவன் அல்லாஹ் அவனே

 

يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَهُوَ عَلِيْمٌ بِذَاتِ الصُّدُوْرِ‏

 

இரவைப் பகலில் புகுத்துபவனும் “அவனே” இன்னும் பகலை இரவில் புகுத்துபவனும் “அவனே”. சூரா ஹதீத் ஆயத் 6

 

பூமியிலுள்ள அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் அவனே

 

هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا

 

(பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தவனும் அவனே. சூரா பகரா ஆயத் 29

 

உணவளிப்பவனும் பருகத்தருபவனும் அல்லாஹ் அவனே

 

وَ الَّذِىْ هُوَ يُطْعِمُنِىْ وَيَسْقِيْنِۙ‏

 

எனக்கு உணவளிப்பவனும் அவனே எனக்கு பருகத்தருபவனும் அவனே. குர்ஆன் :- சூரா ஷுஃரா ஆயத் 79

 

உணவு கேற்பவனும் அல்லாஹ் அவனே

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4710

 

தண்ணீர் பருக கேற்பவனும் அல்லாஹ் அவனே

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ” ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் பருகுவதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் பருகுவதற்கு தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு பருகுவதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4710

 

மழையை பொழியச் செய்பவனும் அல்லாஹ் அவனே

 

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ

 

நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. மழையை இறக்கி வைப்பவன் அவனே. குர்ஆன் :- சூரா லுக்மான் ஆயத் 34

 

சிரிக்க வைப்பவனும் அவனே அழச் செய்பவனும் அல்லாஹ் அவனே

 

وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ‏

 

நிச்சயமாக சிரிக்க வைப்பவனும் அவனே அழச் செய்பவனும் அவனே. குர்ஆன் :- சூரா நஜ்ம் ஆயத் 43

 

ஆண்கள் பெண்களை ஜோடியாக படைத்தவனும் அல்லாஹ் அவனே

 

وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ‏

 

நிச்சயமாக ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தவனும் அவனே. குர்ஆன் :- சூரா நஜ்ம் ஆயத் 45

 

செல்வந்தராக்குபவன் அல்லாஹ் அவனே

 

وَاَنَّهٗ هُوَ اَغْنٰى وَ اَقْنٰىۙ‏

 

நிச்சயமாக தேவையறச் செய்து சீமான் செல்வந்தராக்குபவனும் சொத்துக்களை வழங்குபவனும் அவனே. சூரா நஜ்ம் ஆயத் 48

 

அரச அதிகாரத்தை வழங்குபவன் அல்லாஹ் அவனே

 

وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ

 

நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குபவன் அல்லாஹ் அவனே. குர்ஆன் :- சூரா பகரா ஆயத் 247

 

கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உருவாக்குபவன் அல்லாஹ் அவனே

 

هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ

 

கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குபவன் அவனே. குர்ஆன் :- ஆல இம்ரான் ஆயத் 6

 

காலங்களாக இருப்பவன் அல்லாஹ் அவனே

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதமுடைய மக்கள் காலத்தை ஏசுகிறார்கள் நானே காலங்களாக இருக்கிறேன்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4283

 

எங்கும் அல்லாஹ் அவனே

 

فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ

 

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ் அவனே. குர்ஆன் :- சூரா பகரா ஆயத் 115

 

வானம் பூமி ஆகியவையிலும் அல்லாஹ் அவனே

 

وَهُوَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَفِى الْاَرْضِ

 

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அவனே. குர்ஆன் :- சூரா அன்ஆம் ஆயத் 3

 

தர்மங்களை எடுத்துக் கொள்பவனும் அவனே

 

وَيَاْخُذُ الصَّدَقٰتِ

 

தானங்கள் (தர்மங்களை) அவனே எடுத்துக் கொள்கிறான். குர்ஆன் :- சூரா பகரா ஆயத் 104

 

உங்களை சகல இடங்களிலுக்கும் அழைத்துச் செல்பவனும் அல்லாஹ் அவனே

 

هُوَ الَّذِىْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ

 

நீரிலும் நிலத்திலும் உங்களை அழைத்துச் செல்பவனும் (அல்லாஹ்) அவன. குர்ஆன் :- சூரா யூனுஸ் ஆயத் 22

 

சூரிய சந்திரனை வெளிச்சமாக மாற்றக்கூடியவனும் அல்லாஹ் அவனே

 

هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا

 

சூரியனை ஒளி (பிரகாசமாகவும்) சந்திரனை (அழகிய) வெளிச்சமாக மாற்றக்கூடியவனும் அவனே. குர்ஆன் :- சூரா யூனுஸ் ஆயத் 5

 

வானங்களை தூணின்றியே உயர்த்தியவனும் அல்லாஹ் அவனே

 

اَللّٰهُ الَّذِىْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ

 

வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- அர்ரஃது ஆயத் 2

 

மின்னலை பிரகாசிக்க செய்பவனும் அல்லாஹ் அவனே

 

هُوَ الَّذِىْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا

 

மின்னலை பிரகாசிக்க செய்பவனும் அவனே. (உங்களுக்கு) பயத்தையும் ஆதரவையும் தரக்கூடிய மின்னலை பிரகாசிக்க செய்பவனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- அர்ரஃது ஆயத 12

 

மேகங்களையும் கிளப்புகிறவனும் அல்லாஹ் அவனே

 

وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ‏

 

(மழையைச் சுமந்த) பளுவான மேகங்களையும் கிளப்புகிறவனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- அர்ரஃது ஆயத 12

 

நாடியவர்களைத் தாக்குகிறவனும் அல்லாஹ்  அவனே

 

وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيْبُ بِهَا مَنْ يَّشَآءُ

 

இடிகளை விழச் செய்து, அதைக்கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகிறவனும் (அல்லாஹ்) அவனே குர்ஆன் :- அர்ரஃது ஆயத் 13

 

மனிதனைப் படைக்கின்றவனும் அல்லாஹ் அவனே

 

خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّـطْفَةٍ

 

ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைக்கின்றவனும் (அல்லாஹ்) அவனே. சூரா நஹ்ல் ஆயத் 4

 

உங்களுக்கு உதவி செய்தவனும் அல்லாஹ் அவனே

 

اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَ ۙ

 

சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) உங்களுக்கு உதவி செய்திருக்கிறவனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- ஷுஃரா ஆயத் 133

 

தோட்டந்துரவுகளை உங்களுக்கு அளித்துவனும் அல்லாஹ் அவனே

 

وَجَنّٰتٍ وَّعُيُوْنٍ‏

 

தோட்டந்துரவுகளையும் (உங்களுக்கு அளித்திருக்கிறவனும் அல்லாஹ் அவனே) குர்ஆன் :- ஷுஃரா ஆயத் 134

 

உங்களை படைத்தவனும். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அல்லாஹ் அவனே

 

اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ

 

உங்களை படைத்தவனும். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அல்லாஹ் அவனே. குர்ஆன் :- அர்ரூம் ஆயத் 40

 

மனிதர்களை நாடியபடி நடத்தாட்டுபவனும் அல்லாஹ் அவனே

اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً

 

அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். குர்ஆன் :- அர்ரூம் ஆயத் 54

 

மழையை இறக்கி வைக்கின்றவனும் அல்லாஹ் அவனே

 

وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ

 

மழையை இறக்கி வைக்கின்றவனும் அவனே. கர்ப்பங்களில் தரிப்பதை அறிபவனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- சூரா லுக்மான் ஆயத் 34

 

இல்லத்தில் எங்களை அமர்த்தியவனும் அல்லாஹ் அவனே.

 

اۨلَّذِىْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖ

 

அவனுடைய அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தியவனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- சூரா பாதிர் ஆயத் 35

 

எல்லா பொருள்களின் பொறுப்பாளனும் அல்லாஹ் அவனே

 

وَّهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏

 

எல்லா பொருள்களின் பொறுப்பாளனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- சூரா ஜுமர் ஆயத் 62

 

எனக்கும் உங்களுக்கும் மத்தியில் போதுமான சாட்சியாளனும் அல்லாஹ் அவனே

 

كَفٰى بِهٖ شَهِيْدًا بَيْنِىْ وَبَيْنَكُمْ

 

எனக்கும் உங்களுக்கும் மத்தியில் போதுமான சாட்சியாக அவனே இருக்கின்றான். குர்ஆன் :- சூரா அஹ்காப் ஆயத் 8

 

வானத்தை உயர்த்தியவனும் தராசை அமைத்தவனும் அல்லாஹ் அவனே

 

وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ‏

 

அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். குர்ஆன் :- சூரா ரஹ்மான் ஆயத் 7

 

இரு கடல்களையும் சந்திக்கச் செய்தவனும் அல்லாஹ் அவனே

 

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ‏

 

இரு கடல்களையும் சந்திக்கச் செய்தவனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- ரஹ்மான் ஆயத் 19

 

மலைகளை நட்டியவனும் அல்லாஹ் அவனே

 

وَالْجِبَالَ اَرْسٰٮهَا ۙ‏

 

மலைகளையும் அதில் நட்டியவனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- சூரா நாஜியாத் ஆயத் 32

 

நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகின்றவனும் அல்லாஹ் அவனே

 

اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰٮهَا‏

 

நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகின்றவனும் (அல்லாஹ்) அவனே. குர்ஆன் :- நாஜியாத் ஆயத் 31

 

காரியங்களை திட்டமிடுகிறவனும் அல்லாஹ் அவனே

 

اكُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى‌ يُدَبِّرُ الْاَمْرَ

 

ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். இவ்வனைத்துக் காரியங்களையும் அவனே திட்டமிடுகிறான். குர்ஆன் :- சூரா ரஃது ஆயத் 2

 

ஆரம்பமும் முடிவும் அல்லாஹ் அவனே வெளிரங்கமும் அந்தரங்கமும் அல்லாஹ் அவனே யாவற்றையும் நன்கறிந்தவனும் அல்லாஹ் அவனே

هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

 

(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; வெளிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும் அனைத்தையும் நன்கறிந்தவனும் அவனே. குர்ஆன் :- சூரா ஹதீத் ஆயத் 3

 

செயல்களை படைத்தவனும் அல்லாஹ் அவனே

 

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ‏

 

உங்களையும், உங்கள் செயல்கள் அவைகளையும் அல்லாஹ் (அவனே) படைத்தான். குர்ஆன் :- சூரா ஸஃப்பாத் ஆயத் 96

 

♦️மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்துப் பார்க்கும் போது மனிதர்களை படைத்தவனும் அவனே, பூமியில் உள்ளவைகளை படைத்தவனும் அவனே, பேசக் கற்க்கொடுப்பவனும் அவனே, இறைஞானம் நுண்ணறிவை கொடுப்பவனும் அல்லாஹ் அவனே, மார்க்க அறிவை கொடுப்பவனும் அல்லாஹ் அவனே, கல்வி கற்றுக்கொடுப்பவனும் அவனே, உணவளிப்பவனும அவனே, உணவு கேற்பவனும் அவனே, பருகக்கொடுப்பவனும் அவனே, பருக கேற்பவனும் அவனே, உதவி செய்பவனும் அவனே, பாதுகாப்பவனும் அவனே, சிரிக்க வைப்பவனும் அவனே, அழச் செய்பவனும் அவனே, அசர ஆட்சியை கொடுப்பவனும் அவனே, ஆண்கள் பெண்களை ஜோடி ஜோடியாக இணைத்தவனும் அவனே, செல்வந்தராக மாற்றுபவனும் அவனே, நோயாளியை சுகப்படுத்துவனும் அவனே, நோயாளிகளாக இருப்பவனும் அவனே, நேர்வழி காட்டுபவனும் அவனே, வழிதவறச் செய்பவனும் அவனே, உயிரை கொடுப்பவனும் அவனே, உயிரை எடுப்பவனும் அவனே, யுத்தத்தில் எதிரிகளை கொண்டவனும் அவனே, எதிர்கள் மீது மண்ணை எறிந்தவனும் அவனே, கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உருவாக்குபவனும் அவனே, இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றுபவன் அவனே, மழையை பொழியச் செய்பவனும் அல்லாஹ் அவனே, ஆட்சி செய்பவனும் அவனே, நம்முடன் இருப்பவனும் அவனே, காலங்களாக இருப்பவனும் அவனே, வானம் பூமியிலும் அவனே, எங்கும் அவனே, ஆரம்பமும் முடிவும் அவனே, வெளிரங்கமும் அந்தரங்கமும் அவனே, நன்கறிந்தவனும் அல்லாஹ் அவனே, ஆக ஒவ்வொரு வஸ்துக்களிலும் சூழ்ந்த நிலையில் அல்லாஹ் இருக்கிறான் என்ற கருத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

♦️உதாரணமாக :- ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது ஒரு நபர் உதவி செய்தார். இப்போது உனக்கு எப்படி இந்த உதவி கிடைத்தது என்று கேட்கப்பட்ட போது அவருடைய பதில் :- இந்த நபர் உதவி செய்தார். அல்லது இந்த நபர் மூலம் அல்லாஹ் உதவி செய்தான். அல்லது அல்லாஹ் உதவி செய்தான். என்று மூன்று விதமாக கூறுவார். இது போன்று தான் மக்களும் கூறுகின்றனர். இதில் எதுவும் ஷிர்க் இணைவைப்பு கிடையாது. அது போன்று தான் அல்லாஹ் அவனுடைய ஒளியான நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் ஒளியை கொண்டு ஒவ்வொரு வஸ்துக்களையும் படைத்து அவைகளில் சூழ்ந்தவனாக அவனே இருக்கின்றான். இதனால் தான் மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்களில் எல்லாம் அல்லாஹ் அவன் செயல், எதார்த்தத்தில் எங்கும் அவனே என்று பொதுவாக குறிப்பிட்டு கூறியுள்ளான் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

♦️குறிப்பு :- எதார்த்தத்தில் எல்லாம் அவன் செயல் என்று கூறுவது போல. ஒவ்வொரு வஸ்துக்களிலும் சூழ்ந்தவனாக, நன்கறிந்தவனாக, எங்கும் நிறைந்தோனாக, அல்லாஹ் அவனே இருக்கின்றான். இவைகளை காரணமாக வைத்து எங்கும் அவனே என்று பொதுவாக கூறலாம். இருப்பினும் குறிப்பிட்ட வஸ்துக்களை பிடித்து கொண்டு இது கடவுள், அல்லாஹ் என்றோ, இதற்கு சுய ஆற்றல் உண்டு என்றோ, இதில் அல்லாஹ் இறங்குகிறான் என்றோ கூற முற்படுவது ஷிர்க் இணைவைப்பாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.