எல்லாம் அவன் செயல் என்று கூறலாமா?

282

எல்லாம் அவன் செயல் என்று கூறலாமா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

ﻭَﻗُﻠْﻨَﺎ ﻳٰٓـﺎٰﺩَﻡُ ﺍﺳْﻜُﻦْ ﺍَﻧْﺖَ ﻭَﺯَﻭْﺟُﻚَ ﺍﻟْﺠَـﻨَّﺔَ ﻭَﻛُﻠَﺎ ﻣِﻨْﻬَﺎ ﺭَﻏَﺪًﺍ ﺣَﻴْﺚُ ﺷِﺌْﺘُﻤَﺎ ﻭَﻟَﺎ ﺗَﻘْﺮَﺑَﺎ ﻫٰﺬِﻩِ ﺍﻟﺸَّﺠَﺮَﺓَ ﻓَﺘَﻜُﻮْﻧَﺎ ﻣِﻦَ ﺍﻟﻈّٰﻠِﻤِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது இறைவன் கூருகிறான் மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.

சூரா பகரா ஆயத் 35

 

ﻓَﻮَﺳْﻮَﺱَ ﺍِﻟَﻴْﻪِ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﻗَﺎﻝَ ﻳٰۤﺎٰﺩَﻡُ ﻫَﻞْ ﺍَﺩُﻟُّﻚَ ﻋَﻠٰﻰ ﺷَﺠَﺮَﺓِ ﺍﻟْﺨُﻠْﺪِ ﻭَﻣُﻠْﻚٍ ﻟَّﺎ ﻳَﺒْﻠٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது இறைவன் கூருகிறான் ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி:“ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.

சூரா தாஹா ஆயத் 120

 

ﻓَﺎَﺯَﻟَّﻬُﻤَﺎ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﻋَﻨْﻬَﺎ ﻓَﺎَﺧْﺮَﺟَﻬُﻤَﺎ ﻣِﻤَّﺎ ﻛَﺎﻧَﺎ ﻓِﻴْﻪِ ﻭَﻗُﻠْﻨَﺎ ﺍﻫْﺒِﻄُﻮْﺍ ﺑَﻌْﻀُﻜُﻢْ ﻟِﺒَﻌْﺾٍ ﻋَﺪُﻭٌّۚ  ﻭَﻟَـﻜُﻢْ ﻓِﻰ ﺍﻟْﺎَﺭْﺽِ ﻣُﺴْﺘَﻘَﺮٌّ ﻭَّﻣَﺘَﺎﻉٌ ﺍِﻟٰﻰ ﺣِﻴْﻦٍ

 

குர்ஆன் கூறுகிறது இறைவன் கூருகிறான் இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த (சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.

சூரா பகரா ஆயத் 36

 

♦️நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு குறிப்பிட்ட மரத்தின் பக்கம் நெருங்க வேண்டாம் என்று அல்லாஹ் கூறினான். பின்னர் இப்லீஸ் (ஷைத்தான்) நபி ஆதாம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்த மரத்தின் பக்கம் நெருங்கிச் செய்து வழிதவறச் செய்து விட்டான். பின்னர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குற்றவாளியாக பார்க்கப்பட்டார்கள்.

 

கேள்வி :- ஷைத்தான் நபி ஆதாம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வழிதவற செய்யும் போது. அல்லாஹ் எங்கிருந்தான் யாருக்காவது தெரியுமா?

 

وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்” என்று கூறுவீராக.

சூரா பகரா ஆயத் 168

 

وَاللّٰهُ مَعَكُمْ

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான்.

சூரா முஹம்மது ஆயத் 35

 

நபி ஆதாம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஷைத்தான் வழிதவறச் செய்யும் போது அங்கும் அல்லாஹ் இருந்திருக்கிறான் என்ற செய்தி மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் தெளிவாகிறது.

 

கேள்வி :- இது போன்ற செயல்கள் நடை பெறப்போகிறது என்ற செய்தியை அறிந்த அல்லாஹ் அதை ஏன் தடுக்கவில்லை?

 

♦️பதில் :- இந்த செயலை நடத்தியவனே அல்லாஹ் தான் என்று நான் கூறினால்! நீங்கள் ஏற்பீர்களா? மேலும் நபி ஆதாம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்ட முன்னரே அல்லாஹ் இது போன்ற செயல்கள் நடைபெறும் என்பதை அல்லாஹ் தீர்மானித்து விட்டான் என்று நான் கூறினால்! நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? கீழ் கானும் குர்ஆன் ஹதீஸை கூர்ந்து கவனியுங்கள்.

 

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ

 

குர்ஆன் கூறுகிறது உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; உங்கள் செயல்களையும் படைத்தான்.

சூரா ஸாஃபாத் 96

 

படைப்புகளை படைத்த அல்லாஹ் தான் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்ற தீர்க்கமான செயல்களையும் படைத்துள்ளான் என்று மேற்கூறிய வசனம் தெளிவு படுத்துகிறது.

 

♦️இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்! அல்லாஹ் படைப்புகளை படைக்க முன்னரே! அவைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்ற தீர்க்கமான செயல்களை அவன் முன்பே படைத்து விட்டான். ஆச்சரியமாக இருக்கிறதா! ஓர் நபிமொழியை பின்வருமாறு கூறுகிறேன் கூர்ந்து கவனியுங்கள்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَاجَّ مُوسَى آدَمَ، فَقَالَ لَهُ أَنْتَ الَّذِي أَخْرَجْتَ النَّاسَ مِنَ الْجَنَّةِ بِذَنْبِكَ، وَأَشْقَيْتَهُمْ. قَالَ قَالَ آدَمُ يَا مُوسَى أَنْتَ الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالَتِهِ، وَبِكَلَامِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ كَتَبَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي، أَوْ قَدَّرَهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَجَّ آدَمُ مُوسَى

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள் தாமே!’ என்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘மூஸாவே! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் ‘எழுதிவிட்ட’ அல்லது ‘விதித்துவிட்ட ‘ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறிர்கள்’ என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ‘ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தம் இந்த பதிலால்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள்

 

மற்ற ஹதீஸில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.

 

قَالَ لَهُ آدَمُ يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلاَمِهِ، وَخَطَّ لَكَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَ اللَّهُ عَلَىَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً. فَحَجَّ آدَمُ مُوسَى، فَحَجَّ آدَمُ مُوسَى “” ثَلاَثًا

 

நபி ஆதாம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 4738, 3409, 6614, 7515 முஸ்லிம் 2652, 2652, 2652, 2652 அபூதாவூத் 4701 திர்மிதி 2134, இப்னு மாஜா 80

 

♦️பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள் தாமே! என்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்ன கூறினார்கள்? ஷைத்தான் என்னை வழிதவறச் செய்து விடுவான் என்கிற இது போன்ற செயல்கள் நடைபெறும் என்று என்னைப் படைப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அந்த செயல்களை படைத்து விட்டான். இது உங்கள் தவ்றாத் வேதத்திலும் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது என்று மேற்கூறிய ஹதீஸ்கள் தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்தவனும் அவனே, சுவர்க்கத்தில் அவர்களை நுழைவித்தவனும் அவனே, குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாம் என்று கூறியவனும் அவனே, பின்னர் அந்த சுவர்க்கத்தில் இருந்து அவர்களை வெழியேற்றியவனும் அவன் தான், இடையில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இப்லீஸ், ஷைத்தான் வழிதவறச் செய்தான் என்றால்! இதற்கு யார் காரணம் என்று மேற்கூறிய ஹதீஸ் கூறுகையில் அதற்கும் அல்லாஹ் தான் காரணம். அவன் இது போன்ற செயல்கள் நடைபெற வேண்டும் என்று 40 வருடங்களுக்கு முன்னரே தீர்மானித்து விட்டான்.

 

♦️இது போன்று தான் ஒவ்வொரு மனிதர்களின் நிலைமையும். உங்களை படைக்க முன்னரே! உங்கள் செயல்களை அல்லாஹ் தீர்மானத்து விட்டான், படைத்து விட்டான். இதை காரணமாக வைத்து வெளிப்படையில் எல்லாம் அவன் செயல் என்று நம் இஷ்டப்படி இருக்க முடியாது. அவனை வணங்க வேண்டும் என்பது அவனின் கட்டளை, ஷரியத் என்னும் சட்டம் உள்ளது. ஹராம், ஹலால் உள்ளது, இதனை புரிந்து கொள்ளும் புத்தியும் அல்லாஹ் ஒவ்வொரு மனிதர்களுக்கும் தந்துள்ளான். இதை சரியாக பயன் படுத்த வேண்டும் என்று அல்லாஹ் மக்களுக்கு கட்டளை இட்டுள்ளான். இதை சரியாக பயன் படுத்தவில்லை என்றால்! நாம் தான் குற்றவாளி. எதார்த்தத்தில் எல்லாம் அவன் செயலே அன்றி வேறில்லை.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.