ஐந்து கலிமாக்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் ஆதாரங்களுடன்

634

ஐந்து கலிமாக்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் ஆதாரங்களுடன்

 

முதலாம் கலிமா தைய்யிபு

 

اول كلمه طيب

لَا إلَهَ إلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ

 

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி

 

♦️அர்த்தம் :- அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுத் தஆலாவுடைய இறைத்தூதர் ஆவார்கள்.

 

மேற்கூறிய முதலாம் கலிமாவின் வாசகம் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

 

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا إلَهَ إلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ

 

ஆதாரம் :- புஹாரி 53, முஸ்லிம் 234

 

இரண்டாம் கலிமா ஷஹாதத்து

 

يرندام كلمه شهاده

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

 

அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹுவ் அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வற்சூலுஹு

 

♦️அர்த்தம் :- உண்மையாக அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. மேலும் உண்மையாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய அடியாரும் இறைத்தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

 

மேற்கூறிய இரண்டாம் கலிமாவின் வாசகம் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

 

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

 

ஆதாரம் :- முஸ்லிம் 28

 

மூன்றாம் கலிமா தம்ஜீத்

 

مونرام كلمه تمجيد

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

 

ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி. வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வலாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்.

 

♦️அர்த்தம் :- அல்லாஹுத் தஆலா தூயவன், மேலும் புகழ்யாவும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும். மேலும் அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை. மேலும் அல்லாஹ் மிகப் பெரியவன். மேலும் பாவத்தை விட்டும் விலகியிருக்கவும், நன்மையான காரியத்தைச் செய்யவும். உயர்ந்தவனும், மகத்துவமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் உதவியின்றி எந்த மனிதனுக்கும் எவ்வித சக்தியும் அடியோடு கிடையவே கிடையாது.

 

மேற்கூறிய மூன்றாம் கலிமாவின் வாசகம் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

 

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

 

ஆதாரம் :- இப்னு மாஜா 832 நஸாயி 924

 

நான்காம் கலிமா தவ்ஹீத்

 

نالام كلمة توحيد

لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

 

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல்ஹம்து யுஹ்யீ வயுமீது பியதிஹில் கைறு வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்”

 

♦️அர்த்தம் :- அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அரசுரிமை அவனுக்கே சொந்தம். புகழ்யாவும் அவனுக்கே உரித்து. இறந்தவர்கள் உயிர்ப்பிப்பவனும் உயிருடனி ருப்பவர்களை மரணிக்கச் செய்கிறவனும் அவனே. எல்லா நன்மைகளும் அவனது கைவசமே இருக்கின்றன. சகலவற்றின் மீதும் சக்தியுடையவன்.

 

மேற்கூறிய நான்காம் கலிமாவின் வாசகம் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

 

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

 

ஆதாரம் :- அஹ்மது 26551

 

ஐந்தாம் கலிமா ரத்துல்குப்ர்

 

اینتام كلمة رد الكفر

الـلـهـم إنـي أعـوذ بك مـن أن أشـرك بك شيئا وأنـا أعلم واستـغـفـرك لـما لا أعلم إنك أنت علام الغيوب تبت عنه وتبـرأت عـن كل دين سوى دين الإسلام وأسلمت وامنت وأقول لا إله إلا الله محمد رسول الله

 

அல்லாஹும்ம இன்னீ. அஊதுபிக்க மின்அன் உஷ்ரிக்க பிகக்ஷைஅன் வஅன. அஃலமு வஅஸ்தஃபிறுக்க லிமாலா அஃ லமு இன்னக்க அன்த அல்லாமுல் உயூப் துப்து அன்ஹு வதவர்றஃது, அன்குல்லி தீனிஸ் சிவாதீனில் இஸ்லாம் வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்.

 

♦️அர்த்தம் :- யா அல்லாஹ்! நான் அறிந்தவனாக, உனக்கு எப்பொருளையும் இணையாக்குவதை விட்டும் உண்மையாக உன்னிடத்தில் பாதுகாப்பைத் தேடுகிறேன். மேலும் நான் அறியாமல் செய்த பாவத்திற்கு உன்னிடத்தில் பாவமன்னிப்பைத் தேடுகிறேன் நிச்சயமாக. நீ மறைவானவற்றை நன்கறிந்தவனாயிருக்கிறாய். எனவே உனக்கு இணை கற்பித்தல் என்னும் “ஷிர்க்கை” விட்டும் நான் தௌபாச் செய்து மீண்டேன். இஸ்லாம் மார்க்கத்தை தவிர மற்ற எல்லா மார்க்கங்களை விட்டும் நான் நீங்கி விட்டேன். மேலும் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்ற கலிமாவைச் சொல்லி நான் ஈமான் கொண்டு இஸ்லாமாகி விட்டேன்.

 

மேற்கூறிய ஐந்தாம் கலிமாவின் வாசகங்கள் பல கோணங்களில் துஆக்கலாக ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.