ஐவேளை பர்ளு தொழுகையின் சிறப்புக்கள்
ஐவேளை பர்ளு தொழுகையின் பொதுவான சிறப்புக்கள்
இஸ்லாத்தின் இரண்டாவது கடமை தொழுகையாகும். உடம்பினால் செய்யும் வணக்கங்களில் மிகவும் மேலானது தொழுகையே. மேலும் காபிர்களையும், முஸ்லிம்களையும் பிரித்துக் காட்டும் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது. தொழுகை, ஐவேளை பர்ளு தொழுகையின் சிறப்பு முக்கியத்துவம் பற்றி குர்ஆன் மற்றும் பல ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் சிலதை அறிந்து கொள்ளுங்கள்.
தொழுகையின் நற்கூலி எக்காலமும் வீனாக்கப்பட மாட்டாது
وَالَّذِينَ يُمَسِّكُونَ بِالْكِتَابِ وَأَقَامُوا الصَّلَاةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ الْمُصْلِحِين
எவர்கள் வேதத்தை உறுதியாகப்
பற்றிப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலை நிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
சூரா அஃராப் ஆயத் 170
ஐவேளைத் தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாகும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا مَا تَقُولُ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ؟ قَالُوا لَا يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا. قَالَ فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று ஸஹாபாக்களிடம் கேட்ட போது. ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 528
தொழுகையின் சிறப்பு எண்ணிலடங்காதது
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ
நிச்சயமாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 654, 2689 முஸ்லிம் 437
தொழுகைக்காக வேண்டி பிள்ளைகளை ஆர்வம் ஊட்டுங்கள்
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்த(தும் தொழமல் இருந்தால்) அதற்காக அவர்களை
அடியுங்கள்.
அறிவிப்பவர் :- அம்ர் இப்னு சுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 495 அஹ்மது 6756
தொழுகை மறுமை நாளில் நிச்சயம் பிரயோஜனம் அளிக்கும்
عَنْ عَبدِ اللهِ بنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ الصَّلاةَ يَوْمَا فَقَالَ مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورَاً وَبُرْهَانَاً وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ
அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 6576 தாரமி 2763
சிறந்த அமல் தொழுகையாகும்
عَنْ عَمَّتِهِ أُمِّ فَرْوَةَ رَضِيَ اللهُ عَنْها قَالَتْ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ الصَّلَاةُ لِأَوَّلِ وَقْتِهَا
அமல்களில் சிறந்தது எது என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள்.
அறிவிப்பாளர் :- உம்மு பர்வா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் திர்மிதி 170 அபூதாவூத் 426
ஐவேளை பர்ளு தொழுகையின் தனித்தனி சிறப்புக்கள்
சுபஹ் தொழுகையின் சிறப்பு
عَنْ جُنْدَبًا الْقَسْرِيَّ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் சுபஹ் தொழுதாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்.
அறிவிப்பவர் :- ஜுன்துப் கஸ்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 657, அஹ்மது 18814
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… مَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ، فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் சுபஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதரோ அவர் முழு இரவும் வணங்கியவரைப் போன்றவர் ஆவார்.
அறிவிப்பவர் :- உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 656 அபூ தாவூத் 555 தாரமி 1260
லுஹர் பர்ளு தொழுகையின் சிறப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ
(التهجير )
أي التبكير إلى الصلاة، فقالوا : المراد الإتيان إلى صلاة الظهر في أول الوقت
நிச்சயமாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ளுஹர் தொழுகைக்காக வெய்யிலில் வருவதன்) சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 654, 2689 முஸ்லிம் 437
அஸர் தொழுகையின் சிறப்பு
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான்.
அறிவிப்பவர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 552
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَصَلاَةِ الْعَصْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 555
عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى رَضِيَ اللهُ عَنْهُ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்.
அறிவிப்பவர் :- அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 574
மஃரிப் தொழுகையின் சிறப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا مَا تَقُولُ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ؟ قَالُوا لَا يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا. قَالَ فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று ஸஹாபாக்களிடம் கேட்ட போது. ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 528
இஷா தொழுகையின் சிறப்பு
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ، فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதாரோ அவர் பாதி இரவு வணங்கிய வரைப் போன்றவர் ஆவார்.
அறிவிப்பவர் :- உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 656 அபூ தாவூத் 555 தாரமி 1260
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلاَةٍ عَلَي الْمُنَافِقِينَ صَلاَةُ الْعِشَاءِ وَصَلاَةُ الْفَجْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக நயவஞ்சகர்களுக்கு தொழுகைகளில் மிகப் பாரமானது இஷா மற்றும் பஜ்ருத் தொழுகையுமாகும்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 651
♦️குறிப்பு :- இறைவன் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக முக்கியமான மூல வணக்கங்களில் ஒன்றுதான் பர்ளு தொழுகையை நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். எந்த காரணமும் இன்றி அவைகளை விட்டு விடக்கூடாது. அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! பருவ வயதை எத்திய புத்தி உள்ள ஒவ்வொருவரும் பர்ளு தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு வழியுருத்தி சொல்லியுள்ளார்கள். அந்த அடிப்படையில் சத்திய ஸஹாபாக்கள் தாபீஈன்கள் அவர்களுடைய காலங்களில் அதனை ஆர்வமுடன் நடைமுறை படுத்தி பல சிறப்புக்களை அடைந்துள்ளனர். அது போண்று நாமும் இவ்வாறான ஐவேளை பர்ளு தொழுகைகளை தொழுது இறைவனுக்கு விருப்பத்துக்குரிய ஓர் அடியானாகவும் நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாகும் அவைகளை ஆக்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்