ஒன்றை ஆரம்பிக்கும் போது பாத்திஹா ஓதுவது நபிவழியே!

ஒன்றை ஆரம்பிக்கும் போது பாத்திஹா ஓதுவது நபிவழியே!

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : ما أنزلت في التوراة، ولا في الإنجيل، ولا في الزبور، ولا في الفرقان مثلها

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தவ்ராத்திலோ, இஞ்சீலிலோ, ஸபூரிலோ குர்ஆனிலோ “பாத்திஹாவைப் போன்ற” ஒரு ஸூரா இல்லை.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 8682, திர்மிதி 2875

 

பாத்திஹா சூரா குர்ஆனின் தாய் என்று வர்ணிக்கப்படுகிறது. மேலும் திருக்குர்ஆனை பாத்திஹா சூராவை கொண்டே ஆரம்பம் செய்யப்படுகிறது. இவ்வாறு பல சிறப்புக்களை உள்ளடக்கிய அதிகமான ஹதீஸ்கள் உள்ளது. புத்தியுள்ளவர்களுக்கு மேற்கூறிய ஓர் ஹதீஸ் போதுமானதாகும்….

 

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : انطلق نفر من أصحاب النبي صلى الله عليه وسلم في سفره سافروها حتى نزلوا على حي من أحياء العرب فاستضافوهم فأبوا أن يضيفوهم فلدغ سيد ذلك الحي فسعوا له بكل شيء لا ينفعه شيء، فقال بعضهم: لو أتيتم هؤلاء الرهط الذين نزلوا لعله أن يكون عند بعضهم شيء فأتوهم فقالوا: سيدنا لدغ وسعينا له بكل شيء لا ينفعه، فهل عند أحد منكم من شيء؟ فقال بعضهم: نعم، والله إني لأرقي، ولكن والله لقد استضفناكم فلم تضيفونا، فما أنا براق لكم حتى تجعلوا لنا جعلا، فصالحوهم على قطيع من الغنم، فانطلق يتفل عليه ويقرأ : ﴿ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴾ [الفاتحة: 22] فكأنما نُشط من عقال، فانطلق يمشي وما به قلبة. قال: فأوفوهم جعلهم الذي صالحوهم عليه. فقال بعضهم: اقسموا، فقال الذي رقى: لا تفعلوا حتى نأتي النبي صلى الله عليه وسلم فنذكر له الذي كان فننظر ما يأمرنا، فقدموا على رسول الله صلى الله عليه وسلم فذكروا له فقال: ((وما يدريك أنها رقية؟)) ثم قال: ((قد أصبتم، اقسموا واضربوا لي معكم سهما)) ضحك النبي صلى الله عليه وسلم.

 

மேற்கூறிய ஹதீஸை விரிவாக கூறினால் பதிவு நீண்டு விடும் என்ற நோக்கில் சுருக்கமாக விஷயத்தை மட்டும் கூறுகிறேன். ஸஹாபாக்கள் பிரயாணம் சென்ற போது ஓர் ஊரிலுள்ள தலைவருக்கு தேள் குத்தி விட்டது. அதன் பின்னர் ஸஹாபி ஒருவர் பாத்திஹா சூராவை ஓதி தேள் தீண்டி இடத்தில் துப்பினார்கள். விஷம் நீங்கியது அதன் மூலம் ஆட்டுப் பட்டி வெகுமதிகளும் அவர்களுக்கு கிடைத்தது. அதன் பின்னர் இறைதூதர் ﷺ அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தை கூறிய போது.

 

فقال : ((وما يدريك أنها رقية؟)) ثم قال : ((قد أصبتم، اقسموا واضربوا لي معكم سهما)) ضحك النبي صلى الله عليه وسلم

 

இறைதூதர் ﷺ அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டு விட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் மகிழ்ந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2242 முஸ்லிம் 2201 அபூதாவூத் 3418 திர்மிதி 2064 இப்னு மாஜா 2156

 

இங்கு கவணிக்க வேண்டிய விடயம் என்னவெனில் :- இறைதூதர் ﷺ அவர்கள் (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்ற கேள்வியை வைத்து பார்க்கும் போது. ஸஹாபி செய்த செயல் பித்அத்தாகும். காரணம் இறைதூதர் ﷺ அவர்கள் பாத்திஹா சூராவை கொண்டு ஓதிப் பார்க்கவும் இல்லை. ஓதிப் பார்க்கும் படி கூறவும் இல்லை. ஆக ஸஹாபி செய்த செயல் பித்அத்துல் ஹஸனிய்யா நல்ல பித்அத் என்று தெரிந்ததும் அதை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிகாரம் கொடுத்தது மட்டுமின்றி அதன் மூலம் கிடைத்த வெகுமதிகளையும் மகிழ்ச்சியோடு கேட்டு பெற்றுக் கொண்டார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது. குறிப்பாக ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.

 

ஆக பாத்திஹா சூரா நோய் நிவாரணியாக அமைந்துள்ளது என்பதை ஸஹாபாக்கள் அதன் சிறப்புக்களை கொண்டு அறிந்த காரணத்தால் தான் பாத்திஹா சூராவை கொண்டு ஓதிப் பார்த்தார்கள். இன்னுமும் ஓதிப் பார்க்கப்படுகிறது. அது போன்றுதான் பல சிறப்புக்கள் உள்ளடங்கிய பாத்திஹா சூராவை போன்ற ஓர் மகத்துவம் மிக்க ஓர் சூரா எந்த வேதங்களிலும் கிடையாது என்ற மேற்கூறிய ஹதீஸ் கூறும் கருத்து பிரகாரம் அதில் அதிக பரகத் உள்ளதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதன் காரணத்தால் தான் குர்ஆனை ஆரம்பிக்கும் போது அல்லாஹ் பாத்திஹா சூராவை கொண்டு ஆரம்பிக்கும் படி திருக்குர்ஆனை அமைத்துள்ளான். இவைகளை காரணமாக வைத்து தான் ஒன்றை ஆரம்பிக்கும் போது பரகத்திற்காக வேண்டி பாத்திஹா சூரா ஓதப்படுகிறது. இதில் எவ்வித குற்றமும் இல்லை. இருப்பினும் இவ்வாறு இறைதூதர் ﷺ அவர்கள் ஓதிய நிகழ்வுகளும் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

 

في اليوم الثالث من موت إبراهيم ابن النبي صلى الله عليه وسلم قدم أبو ذر إلى النبي صلى الله عليه وسلم بتمر ولبن وبعض الخبز ، فوضعها النبي صلى الله عليه وسلم بين يديه ، وتلا سورة الفاتحة ، والإخلاص ثلاث مرات ، ثم رفع يديه فدعا ومسح بهما على وجهه ، ثم أمر أبا ذر بتوزيع الطعام بين الناس

 

இறைதூதர் ﷺ அவர்களின் அருமை மகனார் இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகி மூன்றாம் நாள் அன்று அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழம், பால், தொலிக் கோதுமையால் ஆன ரொட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து இறைதூதர் ﷺ அவர்களின் சமூகத்தில் வைத்தார்கள். உடனே இறைதூதர் ﷺ அவர்கள் பாத்திஹா சூராவை ஒருவிடுத்தம் குல்ஹுவல்லாஹு அஹது சூரா 3 விடுத்தம் ஓதி கையை உயர்த்தி பிரார்த்தித்து விட்டு கையை முகத்தில் தடவினார்கள். பிறகு அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இதை மக்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொடுங்கள் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தஸ்ஹீஹுல் அகாயித் 128

 

இவைகளை கூர்ந்து கவனியுங்கள். இறைதூதர் ﷺ அவர்கள் பரகத்திற்காக வேண்டி உணவு பதார்த்தங்களில் பாத்திஹா சூராவை ஓதி, துஆ கேட்ட பின்னர் அவைகளை பங்கீடு செய்துள்ளார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸிலிருந்து நம்மால் காண முடிகிறது. இது போன்று தான் ஒன்றை ஆரம்பிக்கும் போது நாமும் பரக்கத்திற்காக வேண்டி பாத்திஹா சூரா துஆக்கள் நல்ல மனதோடு ஓதப்படுகிறது. இவைகளை வழிகெட்ட பித்அத் என்று கூறுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடையர்களாகும்.

 

குறிப்பு :- பாத்திஹா சூராவின் மகிமை தெரிந்த ஸஹாபாக்கள் ஆழமான நம்பிக்கையுடன் ஓதிப் பார்த்து தீராத நோய்களை விஷங்களை அகற்றியுள்ளார்கள். அதே போன்று தான் பாத்திஹா சூராவின் மகிமை தெரிந்த அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்களும் ஆழமான நம்பிக்கையுடன் ஒன்றை ஆரம்பிக்கும் போது பரகத்திற்காக பாத்திஹா சூராவை ஓதுகிறார்கள்.

 

ஆக பாத்திஹா சூராவின் மகிமை தெரியாத அவநம்பிக்கையுடைய வஹாபிஷ அமைப்புக்கள் இவைகளை வழிகெட்ட பித்அத் ஷிர்க் என்று கூறுவதால் நாம் குற்றவாளிகளாக ஆகிவிட மாட்டோம். இதற்கு மறுப்பு ஓதிப் பார்ப்பது பற்றிய ஹதீஸில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. கஷ்டம் வரும் போது மட்டுமே இறைவனிடம் கை ஏந்தும் நீங்கள் மகிழ்ச்சி வரும் போது அவனை மறந்து விடக்கூடாது என்ற நோக்கில் தான் ஒன்றை ஆரம்பிக்கும் போது பாத்திஹா சூரா ஓதப்படுகிறது. மேலும் பாத்திஹா சூரா இறைவனின் மகத்துவத்தை உணர்த்தும் முக்கியமான துஆக்களை உள்ளடக்கிய பரகத்து நிறைந்த சூராவாகும். ஆக இஸ்லாத்தின் பார்வையில் ஒன்றை ஆரம்பிக்கும் போது பிஸ்மி ஹம்து ஸலவாத்து பாத்திஹா சூராவை கொண்டு ஆரம்பிப்பதை இஸ்லாம் வரவேற்கின்றது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்