ஒவ்வொரு மாதங்களின் சிறப்புக்கள்
ஒவ்வொரு மாதங்களின் சிறப்புக்கள்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ
உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்! எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள்! மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!.
(அல்குர்ஆன் : 9:36)
عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை – துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
அறிவிப்பவர் :- அபூ பக்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3197, 4406
முஹர்ரம் மாதம்
முஹர்ரம் : இம்மாதம் விலக்கப்பட்ட மாதம் என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. யுத்தம் செய்யத் தடை செய்யப்பட்ட மாதமாக இருந்ததால் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முஹர்ரம் மாததிலுள்ள) ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2006
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3397
குறிப்பு :- முஹர்ரம் மாதத்தில் தான் இஸ்லாம் கூறும் பல முக்கிய நிகழ்வுகளும் அற்புதங்களும் நடந்துள்ளன என்பதை நாம் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
ஸஃபர் மாதம்
ஸஃபர் :- இம்மாதம் பயணம் என்ற பொருளிலும் பொன்னிறம் நிறம் என்ற பொருளிலும் அழைக்கப்படுகின்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5757
عَنْ مُحَمَّدِ بْنِ قَيْس رَضِي اللَّهم عَنْه أَنَّ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلم اشْتَكَى يَوْمَ الْأَرْبِعَاءِ لِإِحْدَى عَشْرَةَ لَيْلَةً بَقِيَتْ مِنْ صَفَرٍ سَنَةَ إِحْدَى عَشْرَةَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் சஃபர் மாதம் பதினொன்றாம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்.
அறிவிப்பவர் :- முஹம்மத் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தபகாதுல் குப்ரா இப்னு ஸயீத் 2247
من بشرني بخروج صفر ابشره بالجنة
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சபர் மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச்செய்தி சொல்பவனுக்கு சுவர்கத்தைக் கொண்டு நான் சுபச்செய்தி சொல்வேன்.
ஆதாரம் :- ஹயாதுல் ஹயவான் 120
ரபீஉல் அவ்வல் மாதம்
ரபீஉல் அவ்வல் : இம்மாதம் வசந்த காலம் துவங்குவதால் முதல் வசந்தம் அல்லது வசந்தத்தின் துவக்கம் என்ற பொருளில் அழைக்கப்படுகிறது.
وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْر رَبِيعٍ الْأَوَّلِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் (எனும் வந்சந்த) மாதத்தில் பிறந்தார்கள்.
அறிவிப்பவர் :- முஹம்மது இப்னு இஸ்ஹாக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 2/603 ஸீரத் இப்னு ஹிஷாம் 1/211 ஸுபுலுல் ஹுதா 1/334
குறிப்பு :- இம்மாதத்தில் தான் மௌலிது மற்றும் மீலாது விழாக்கள் அதிகளவில் கொண்டாடப்படுகிறது.
ரபீஉல் ஆகிர் மாதம்
ரபீஉல் ஆகிர் : இம்மாதம் இறுதி வசந்தம் அல்லது வசந்தத்தின் கடைசி என்று பொருளில் அழைக்கப்படுகிறது.
توفي الإمام محيي الدين عبد القادر الجيلاني رحمه الله ليلة السبت 10 ربيع الثاني سنة 561 هـ
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சனிக்கிழமை இரவு, ரபீஉல் ஆகிர் பிறை 10, 561 ஹிஜ்ரி அன்று மரணம் அடைந்தார்கள்.
ஆதாரம் :- ஸியரு அஃலாமிந் நுபலா 286
ஜமாதில் அவ்வல் மாதம்
ஜமாதில் அவ்வல் : இம்மாதம் பனி உறையும் மாதத் துவக்கம் என்னும் பொருளில் அழைக்கப்படுகின்றது.
ولد النبي صالح عليه السلام شهر جمادى الأولى
ஜமாதில் அவ்வல் மாதத்தில் தான் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது.
ஜமாதில் ஆகிர் மாதம்
ஜமாதில் ஆகிர் : இம்மாதம் பனி உறையும் இறுதிப் பகுதி என்ற பொருளில் அழைக்கப்படுகின்றது.
توفي أبو بكر يوم الإثنين 22 جمادى الآخرة سنة 13هـ
அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரி 13 ஜமாதில் ஆகிர் 22 திங்கட்கிழமை அன்று மரணம் அடைந்தார்கள்.
ஆதாரம் :- இப்னு கஸீர் 7/18 பிதாயா வன்நிஹாயா 244
ரஜப் மாதம்
ரஜப் :- இம்மாதம் கண்ணியமிக்க அல்லது மதிப்புமிக்க என்ற பொருளில் அழைக்கப்படுகின்றது.
عن أنس بن مالك رضي الله عنه قال النبي صلي الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதமாகும்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் :- இப்னு அஸாகிர் 1/186
عن أنَسِ بْنِ مالِكٍ رضي الله تعالى عنه قال: قال رسولُ الله صلّى الله تعالى عليه وآله وسلّم: إنَّ في الْجَنَّةِ نَهْرًا، يُقَالُ له: رَجَبٌ، أَشَدُّ بَيَاضًا من اللَّبَنِ وأَحْلَى من العَسَلِ، مَنْ صَامَ مِنْ رَجَب يَوْمًا، سَقَاهُ اللهُ عزّ وجلّ مِنْ ذلك النَّهْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” ஸுஃபுல் ஈமான் 3811
குறிப்பு :- இம்மாதத்தின் 27ஆம் திகதி தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனைச் சந்திக்க மிஃராஜ் இரவில் விண்ணுலகப் பயணம் செய்தார்கள். இவ்விரவில் தான் தொழுகை பரிசாக வழங்கப்பட்டது.
ஷஃபான் மாதம்
ஷஃபான் : இம்மாதம் பங்கிடுதல் என்ற பொருளில் அழைக்கப்படுகின்றது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْها تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபான் (மாதமாகும்) அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் அபூ தாவுத் 642
عن عائشة رضي الله عنها قالت كان أحب الشهور الي النبي صلي الله عليه وسلم شعبان
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாதங்களில் மிகப் பிரியமானது ஷஃபான் மாதமாகும்.
ஆதாரம் :- நுஜ்ஹதுல் மஜாலிஸ் 1/194
குறிப்பு :- இம்மாதத்தின் 15ஆம் திகதி பராஅத்துடைய இரவில் தான் அதிகளவில் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. நமது செயல்கள் நல்லமல்கள் இறைவனிடம் எடுத்துக் காட்டப்படுகிறது. ரிஸ்க் விஸ்தீரணம் அடைகிறது.
ரமலான் மாதம்
ரமலான் : இம்மாதம் நோன்பு நோற்பதால் அடியார்களின் பாவங்கள் எரிக்கப்படும் காரணத்தால் சுட்டெரிக்கும் மாதம் என்ற பொருளில் அழைக்கப்படுகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ، فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரகத் பொருந்திய மாதமான ரமலான் மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் அல்லாஹ் உங்கள் மீது நோன்பை கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் சுவனத்து வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்து வாசல்கள் அடைக்கப்படுகின்றது. மேலும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அதில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும். எவன் அதன் நன்மையைவிட்டும் தடுக்கப்பட்டானோ அவன் (அனைத்து நன்மைகளை விட்டும்) தடுக்கப்பட்டவனாவான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 2106
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 37
குறிப்பு :- இம்மாதத்தின் 27ஆம் திகதி லைலதுல் கத்ருடைய இரவு எனக் கருதப்படுகிறது. இவ்விரவு ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்ததாகும். இவ்விரவில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது.
ஷவ்வால் மாதம்
ஷவ்வால் : இம்மாதம் சிதரி விடுதல் என்ற பொருளில் அழைக்கப்படுகிறது.
عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْها، قَالَتْ : تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ، وَبَنَى بِي فِي شَوَّالٍ، فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன். மேலும் ஷவ்வாலில் தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன். மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபி அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கேட்டார்கள்.
ஆதாரம் முஸ்லிம் 1423
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்ற வரைப் போன்றவராவார்.
அறிவிப்பவர் :- அபூ அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2159
குறிப்பு :- இம்மாதத்தில் தான் முதல் நாளில் தான் ரமழான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பேற்ற மக்கள் ஈதுல் ஃபித்ர் பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுகின்றனர்.
துல் கஃதா மாதம்
துல் கஃதா : இம்மாதம் இருத்தல் அதாவது (யுத்தம் செய்வதை விட்டும்) தவிர்ந்து இருத்தல் என்ற பொருளில் அழைக்கப்படுகிறது.
عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
அறிவிப்பவர் :- அபூ பக்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3197, 4406
துல் ஹஜ் மாதம்
துல் ஹஜ் :– இஸ்லாமிய ஆண்டின் நிறைவு மாதம் என்று அழைக்கப்படுகிறது.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللَّهم عَنْه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ الْعَشْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நற்செயல்கள் செய்யப்படும் நாட்களில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைவிட அல்லாஹ்வக்கு பிரியமான நாட்கள் வேறொன்றும் இல்லை என்றார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 762
عَنِ ابْنِ الْمُسَيَّبِ قَالَ : قَالَتْ عَائِشَة رَضِي اللَّهم عَنْها : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ، وَإِنَّهُ لَيَدْنُو، ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلَائِكَةَ، فَيَقُولُ : مَا أَرَادَ هَؤُلَاءِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1348
குறிப்பு :-இம்மாதத்தில் தான் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை நிறைவேற்றப்படும் மாதம் இது. இம்மாதத்தின் முதல் பத்து இரவுகள் மிகப் புனிதமானவை.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்