ஒவ்வொரு வஸ்துக்களிலும் சூழ்ந்தவனாக அல்லாஹ் இருக்கின்றான்

102

ஒவ்வொரு வஸ்துக்களிலும் சூழ்ந்தவனாக அல்லாஹ் இருக்கின்றான்

 

اَلَاۤ اِنَّهُمْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ مُّحِيْطٌ‏

 

குர்ஆன் கூறுகிறது அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறான்.

சூரா ஹமீம் ஸஜதா ஆயத் 54

 

மக்களின் சந்தேகம் :- அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் “மக்கள்” இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

 

இறைவனின் பதில் :- அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறான் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️ஒவ்வொரு படைப்புக்களிலும் சூழ்ந்தவனாக அல்லாஹ் இருக்கிறான். படைப்புகள் தான் அல்லாஹ் என்று கூற முற்படுவதும், படைப்புக்களை வணங்கினால்! அல்லாஹ்வை வணங்கியதாகத்தானே அர்த்தம் என்று கூற முற்படுவலும் முறையிலும் தவறாகும்.

 

[படைத்தவன் வேறு படைப்புக்கள் வேறு இவைகளை ஆரம்பத்தில் அறிந்து கொள்ளுங்கள்]

 

அல்லாஹ்வின் கட்டாயமான பண்புகளில் முக்கியமான ஒன்று தான்

( مُخَالَفَةٌ لِلْحَوَادِثِ )

அல்லாஹ் :- படைப்புக்களுக்கு ஒப்பாகாமல் இருத்தல்.

 

அல்லாஹ்விற்கு அறவே இருக்கக்கூடாத பண்புகளில் முக்கியமான ஒன்று தான்.

 

( مُمَاثَلَةٌ لِلْحَوَادِثِ )

அல்லாஹ் :- படைப்புக்களுக்கு ஒப்பாகுதல்.

 

♦️படைப்புக்களுக்கு ஒப்பானவன் கடவுள் கிடையாது. படைப்புக்களுக்கு ஒப்பாகாமல் இருப்பவனே கடவுள். அவனை தான் நாம் அல்லாஹ் என்று கூறுகிறோம். மேலும் படைப்புகள் அழிந்து போகக்கூடியது. அல்லாஹ்வுக்கு அறவே இருக்கக்கூடாத பண்புகளில் முக்கியமான ஒன்று தான்

( فَنَٓاءٌ )

அழிதல்

அல்லாஹ்விற்கு அழிவு என்பது கிடையாது. படைப்புகளுக்கு அழிவு உண்டு, எனவே அழிந்து போகக்கூடிய படைப்புகள் எந்த வகையிலும் அல்லாஹ் கிடையாது.

 

♦️படைப்புகள் அனைத்தும் வெவ்வேறு கோணங்களில் தோற்றம் அழித்த போதிலும். அது காணல் நீரை போன்ற ஓர் மாயையாகும், அவைகள் குறிப்பிட்ட காலங்களில் அழிந்து போகக்கூடியது. நிரந்தரம் அற்றது என்பதை அறிந்து கொண்ட சூபியாக்கள், ஆரிபீன்கள் ஒவ்வொரு படைப்பு, வஸ்துக்களிலும் சூழ்ந்தவனாக இருக்கும் அல்லாஹ்வை அவர்கள் அகக்கண்களால் பார்க்கின்றார்கள்.

 

فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ‏

 

உதாரணமாக :- தொழும் போது அல்லாஹ்வை பார்ப்பது போன்று தொழ வேண்டும், அல்லது அல்லாஹ் உன்னை பார்க்கிறான் என்று தொழ வேண்டும் என்பது நபிமொழியாகும்.

 

♦️நாம் மஸ்ஜிதுகளில் வீடுகளில் தொழும் போது நமக்கு முன்னால் சுவர், அது அல்லாதது இருந்த போதிலும் நாம் அல்லாஹ்வை (அகக்கண்னால்) பார்ப்பது போன்று தான் தொழுவோம். இது போன்று தான் சூபியாக்கள், ஆரிபீன்கள் படைப்புக்கள் யாவும் காணல் நீர் போன்ற மாயை, அது நிரந்தரம் அற்றது என்பதை உணர்ந்தது மட்டுமின்றி அவைகளை சூழ்தவனாக இருக்கும் அல்லாஹ் மட்டுமே நிறந்தரமானவன், அவனையே அவர்கள் அகக்கண்களால் பார்க்கின்றனர்.

 

🔸எனவே இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது (எங்கும்) நிலைத்திருப்பவன் அல்லாஹ் (அவனே) மேலும் அவன் சூழ்ந்து இருக்கும் படைப்புக்கள் அல்லாஹ் கிடையாது. அது வெறும் மாயை என்பதை சூபியாக்கள், ஆரிபீன்கள் உணர்ந்து இருக்கிறார்கள்,

 

🔸இவைகளை தெளிவான முறையில் கூறப்போனால். நிரந்தரமாக [எங்கும் நிறைந்தோன்‌]. அல்லாஹ்வை அன்றி வேறில்லை. நிரந்தரமாக நிலைத்திருப்பவன் [எங்கும் அவனே] என்பதே ஏகத்துவ ஞானமாகும். இதைதான் வஹ்ததுல் உஜூது போதிக்கிறது. அல்லாஹ் அல்லாத படைப்புக்கள் நிரந்தரம் அற்றது, அது மாயை, அழிந்து போகக்கூடியது மறைந்து போகக்கூடியது. இதைத்தான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஸஹாபாக்கள், இமாம்கள், சூபியாக்கள், ஆரிபீன்கள் போதிக்கிறார்களே அன்றி வேறில்லை.

 

♦️குறிப்பு :- அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! இவ்வாறு நாமும் வெளிப்படையில் புரிந்து கொண்டால்! குர்ஆன் ஹதீஸ்களை மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை, இமாம்கள், சூபியாக்களை மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. வஹ்ததுல் உஜூதை மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை, மேலும் ஷரியத்திற்கும் முறனும் இல்லை. மேலும் இதில் எந்த ஷிர்கும் இல்லை. மேலும் உலமாக்களும் பாமர மக்களுக்கும் சர்வ சாதாரணமாக இவைகளை புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்த விளக்கத்தை நாம் அல்லாஹ் எமக்கு கொடுத்த சொற்ப அறிவை கொண்டும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஸஹாபாக்கள், இமாம்கள், சூபியாக்களின் கருத்துக்களை கூர்ந்து கவனித்து இவைகளை கூறியுள்ளோம். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.