கடவுளுக்கு அறவே இருக்கக்கூடாத கட்டாயமான பண்புகள்
( عَدَمٌ )
அதமு :- இல்லாதிருத்தல்.
( حُدُوْثٌ )
ஹுதூஸ் :- புதிதாகுதல்.
( فَنَٓاءٌ )
பன்னாவு :- அழிதல்.
( مُمَاثَلَةٌ لِلْحَوَادِثِ )
முமாசலது லில் ஹவாதிஸ் :- படைப்புக்களுக்கு ஒப்பாகுதல்.
( قِيَامُهٗ بِغَيْرِه )
கியாமுஹு பிஅய்ரிஹி :- பிறவஸ்துவால் நிலைத்திருத்தல்.
( اَلتَّعَدُّدُ )
அத்தஅத்துது :- தன் தன்மைகளிலும் செய்கைகளிலும் எண்ணிக்கையாயிருத்தல்.
( مَوْتٌ )
மவ்த் :- மரணம்.
( جَهْلٌ )
ஜஹ்ல் :- அறியாமை.
( كَرَاهَةٌ )
கராஹது :- நிர்ப்பந்தத்தால் செய்தல்.
( عَجْزٌ )
அஜிஷு :- இயலாமை.
( عَمٰى )
அமா :- குருடு.
( صَمَمٌ )
சமமு :- செவிடு.
( بُكْمٌ )
புக்மு :- ஊமை.
( مَيِّتٌ )
மய்யிது :- மரித்தவனாயிருத்தல்.
( مُكْرَهٌ )
முக்ரஹு :- சுயேச்சையின்றி வேறொன்றால் நிர்ப்பந்திக்கப்பட்டவனாயிருத்தல்.
( جَاهِلٌ )
ஜாஹில் :- அறியாதவனாயிருத்தல்.
( اَصَمُّ )
அஸம்வு :- செவிடனாயிருத்தல்.
( اَعْمٰى )
அஃமா :- குருடனாயிருத்தல்.
( اَبْكَمُ )
அபுகம் :- ஊமையனாயிருத்தல்.
♦️ குறிப்பு :- ஒவ்வொரு முஸ்லிம்களும் இவைகளை அறிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
நூல் :- (அல்லாஹ் அஹதானவன்)
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்