கடவுளுக்கு இருக்கவேண்டிய கட்டாயமான பண்புகள்.
( وُجُوْدٌ )
உஜூது :- உள்ளமை.
( قِدَمٌ )
கிதமு :- உண்டானதற்குத் துவக்கமின்மை, பூர்வீகத்தன்மை.
( بَقَٓاءٌ )
பக்காவு :- நிலைத்திருத்தல்.
( مُخَالَفَةٌ لِلْحَوَادِثِ )
முஹாலிபது லில் ஹவாதிஸி :- படைப்புக்களுக்கு ஒப்பாகாதிருத்தல்.
( قِيَامُهٗ بِنَفْسِهِ )
கியாமுஹு பிநப்ஸிஹி :- தன்னைக் கொண்டே நிலைத்திருத்தல்.
( وَحْدَانِيَّةٌ )
வஹ்தானிய்யத் :- ஒருவனாயிருத்தல்.
( حَيٰوةٌ )
ஹயாத் :- உயிரோட்டம்.
( عِلْمٌ )
இல்மு :- அறிவு.
( اِرَادَةٌ )
இராதத் :- நாட்டம்.
( قُدْرَةٌ )
குத்ரத் :- சக்தி
( سَمْعٌ )
சம்வு :- செவியேற்குதல்.
( بَصَرٌ )
பஸர் :- பார்க்குதல்.
( كَلَامٌ )
கலாம் :- பேசுதல்.
( حَيٌّ )
ஹய்யு :- “உடலில்லாமல்” உயிரோடிருப்பவன்.
( عَالِمٌ )
ஆலிம் :- “இருதயமின்றியே” அறிபவன்.
( مُرِيْدٌ )
முரீது :- நாட்டமுடையவன்.
( قَادِرٌ )
காதிரு :- ஆதாரமின்றியே தத்துவமுடையவன்.
( سَمِيْعٌ )
சமி :- “காதின்றிக்” கேட்பவன்.
( بَصِيْرٌ )
பசீர் :- “கண்ணின்றிப்” பார்க்கிறவன்.
( مُتَكَلِّمٌ )
முதகல்லிம் :- “நாவின்றிப்” பேசுகிறவன்.
♦️ குறிப்பு :- ஒவ்வொரு முஸ்லிம்களும் இவைகளை அறிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
நூல் :- (அல்லாஹ் அஹதானவன்)
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்