கண்திருஷ்டி உண்மை என்று குர்ஆன் ஹதீஸ்கள் பறைசாற்றுகிறது
கண்திருஷ்டி உண்மை என்று குர்ஆன் ஹதீஸ்கள் பறைசாற்றுகிறது
صحيح البخاري | كِتَابُ الطِّبِّ. | بَابُ الْعَيْنِ حَقٌّ
سنن أبي داود | كِتَابٌ : الطِّبُّ | بَابٌ : مَا جَاءَ فِي الْعَيْنِ
سنن الترمذي | بَابٌ : مَا جَاءَ أَنَّ الْعَيْنَ حَقّ
سنن ابن ماجه | كِتَابُ الطِّبِّ. | بَابٌ : الْعَيْنُ
موطأ مالك | كِتَابٌ : الْجَامِعُ | الْوُضُوءُ مِنَ الْعَيْنِ
ஒவ்வொரு (நபிமொழி) ஹதீஸ் கிரந்தங்களிலும் #கண்திருஷ்டி பற்றிய ஓர் பாடம் இருக்கும் போது வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் அதனை மறுக்க முற்படுவது ஏனோ?……..
கேள்வி :- கண்திருஷ்டி என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?
பதில் :- மனித ஜின் இனத்தைச் சேர்ந்தவர்களின் தீய பார்வையினால் ஏற்படும் தீங்குகளுக்கு கண்திருஷ்டி, கண்ணூர் என்றழைக்கப்படும். மேலும் ஒரு மனிதரை அல்லது ஏதோ ஓர் பொருளை ஆச்சரியத்தோடு அல்லது ஏக்கங்களோடு உற்று நோக்கும் போது அல்லது (பொறாமை) கெட்ட எண்ணங்களோடு உற்று நோக்கும் போது. அவரின் உடலிலிருந்து மறைந்த வண்ணம் வெளியாகும். சில தீயசக்திகள் அவரின் பார்வையால் வெளிப்பட்டு உற்று நோக்கிய அந்த மனிதருக்கு அல்லது அந்த பொருட்களுக்கு பல விபரீதங்கள்” தீங்குகளை ஏற்படுத்துகிறது இதற்கு கண்திருஷ்டி (கண்ணூர்) எனக் கருதப்படுகிறது. இது பற்றிய முழு விவரங்களையும் ஷைத்தான் என்ற கேள்வி பதில் நூலில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த நூல் பின்னர் வெளிவரும். மேலும்
وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌۘ وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ
(அல்குர்ஆன் : 68:51,52)
மேற்கூறிய இந்த வசனத்தை ஓதினால் அல்லாஹ் நாடினால் கண்திருஷ்டி நீங்கிவிமென்று ஹழ்ரத் ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
கண்திருஷ்டி பாதிப்பிலிருந்து விடுபட மேற்கூறிய இந்த துஆக்களை ஓதிக் கொள்ளுங்கள். காரணம் (கண்திருஷ்டி) தீங்கிலிருந்து விடுபட இந்த துஆவை நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தம் மகன்களுக்கும் தம் பேரர்களுக்கும் ஓதி வந்தார்கள்.
ஆதாரம் புஹாரி 3371
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்