கலீபா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குறிப்புகள்
கலீபா ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குறிப்புகள்
♦️இயற் பெயர் :- அலி
♦️புனைப் பெயர் :- அபுல் ஹஸன்” அபூ துராப்”
♦️சிறப்பு பெயர் :- அஸத்துல்லாஹ்” அபுஸ்ஸிப்தைன், கர்ரமல்லாஹு வஜ்ஹஹு”
♦️தந்தை பெயர் :- அபூதாலிப்”
♦️தாய் பெயர் :- பாதிமா பின்த்தி அஸத்”
குறிப்பு :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெற்றோர்கள் இருவரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி அவர்களின் வளர்ப்பு பெற்றோர்கள் ஆவார்கள்.
♦️பிறப்பு :- யானை ஆண்டுக்கு பின் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் ரஜப் மாதம் 13 நாள் வெள்ளிக்கிழமை அன்று மக்காவில் பிறந்தார்கள்”
குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 30 வயது இருக்கும் கஃபாவை வலம் வரும் இடத்தில் பாதிமா பின்த்து அஸத் அவர்களுக்கு பிரசவ வழி ஏற்பட்ட சமயத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணையோடு கஃபாவில் உள்நுழைந்த மறுகணம் அன்னை அவர்களின் மூலம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள்.
♦️மனைவியர் :- பாத்திமா நாயகி, இன்னும் பலர்
குறிப்பு :- பாத்திமா நாயகியை” 21ம் வயதில் மணந்து கொண்டார்கள். அன்னை அவர்களின் மரணத்திற்கு பின்னர் உம்முள் பனீன், லைலா, அஸ்மா, ஸஹ்பா, உமாமா, கவ்லா, உம்மு ஸஈத், மிஹ்யாத் போன்ற பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள். இருப்பினும் தொடர்ச்சியாக 4 மேல் திருமணம் செய்து கொண்டதாக எந்த குறிப்புகளிலும் இடம் பெறவில்லை”
♦️ஆண் பிள்ளைகள் :- ஹசன்” ஹுசைன்” முஹ்ஸின்” அப்பாஸ், ஜஃபர், அப்துல்லாஹ், உஸ்மான், அப்துல்லாஹ், அபூபக்கர், யஹ்யா, முஹம்மத், அஸ்கர், உமர், முஹம்மத் அவ்ஸத், முஹம்மத் இன்னும் சிலர்
குறிப்பு :- அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மூலமாக பிறந்த முஹ்ஸின் அவர்கள் சிறு வயதிலேயே மரணித்து விட்டார்கள். ஹஸன் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் வழியாகவே ஸாதாத்துமார்களில் வழி வருகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
♦️பெண் பிள்ளைகள் :- ஜைனப்” உம்மு குல்சூம்” ருகையா, ரமலா” இன்னும் சிலர்”
♦️சிறப்புக்கள் :- ஞானத்தின் நுழைவாயிலாகவும், மார்க்க பற்று, மார்க்க அறிவு, இலக்கணம், இலக்கியம், நல்லொழுக்கம், பேணுதல். கொடை வள்ளல், நற்குணம், நீதம், வீரம், விவேகம், தியானம், நுண்ணறிவு ஆகியவற்றிலும் தலை சிறந்தவர்களாக இருந்தார்கள்.
♦️யுத்தம் :- தபூக் யுத்தத்தை தவிரவுள்ள ஏனைய யுத்தங்களில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒன்றினையும் பல யுத்தங்களில் வெற்றி மாலை சூடினார்கள்”
♦️ஆட்சி :- ஹிஜ்ரி 35 முதல் 40 வரை சுமார் 4 ஆண்டுகளும் 8 மாதங்கள் 9 நாட்களும் கிலாபத் ஆட்சி செய்துள்ளார்கள்”
♦️மரணம் :- ஹிஜ்ரி 40 ரமலான் மாதம் 19 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மரணம் அடைந்தார்கள்” அப்போது அவர்களுடை வயது 63″
குறிப்பு :- கவாரிஜ்களின் கூட்டத்தை சார்ந்த அப்துல் ரஹ்மான் இப்னு மல்ஜம் என்பவன் ஹிஜ்ரி 40ம் ஆண்டு கூபாவுக்குச் சென்று மறைந்திருந்து அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸுபஹ் தொழுகைக்காக செல்லும் போது நஞ்சூட்டப்பட்ட வாளினால் நெற்றியில் வெட்டி காயப்படுத்தினான். அதன் பின்னர் அவர்கள் இரண்டு நாட்களுக்குப்பின் மரணம் அடைந்தார்கள்.
♦️மரணித்த இடம் :- கூபா குறிப்பு :- ஈராக் நாட்டின் தலைநகரமான பாக்தாத் நகரத்திற்கு தெற்கே 170 கிமீ தொலைவில் அமைந்துள்ள கூபா நகரில் தான் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்