11) கவி நடையில் புகழ்ந்து பாடுவதற்கு மௌலிது என்று கூறலாமா?

113

கவி நடையில் புகழ்ந்து பாடுவதற்கு மௌலிது என்று கூறலாமா?

 

மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர், மேலும் அதனை மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், புண்ணியம் கருதியும் ஓதி வருகின்றனர். இந்த செயலுக்கு இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

 

நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து கவி பாடுவதற்கு மௌலிது என்ற வார்த்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பயன் படுத்தப்படவில்லை. இருப்பினும் அது பேச்சு வழக்கில் அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்களால் பயன் படுத்தப்படுகிறது. உதாரணமாக தவ்ஹீத் ஜமாஅத்தினர்கள் பெருநாள் தொழுகைக்கு திடல் தொழுகை என்ற பெயர் கொண்டு அழைப்பது போல நபிமார்கள் நல்லடியார்களை கவி நடையில் புகழ்ந்து பாடுவதற்கு மௌலிது என்ற வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

 

பாங்கு என்ற சொல் என்ன மொழி என்றுகூட பெரும்பாலான முஸ்லிம் மக்களுக்கு தெரியாது இருப்பினும் தொழுகைக்காக அதான் சொல்கிறது என்றால்! நம்மவர்கள் பாங்கு சொல்லப்படுகிறது என்று பேச்சு வழக்கில் கூறுவது நடை முறையில் உள்ளது. இதனை காரணமாக வைத்து பாங்கு என்ற சொல் (வார்த்தை) திருக்குர்ஆன் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளதா என்று கேட்கலாமா?

 

உதாரணமாக :- தாய் தந்தை என்ற சொல் தமிழ் மொழி சொல்லாகும். உம்மி அபீ என்ற சொல் அரபி மொழி சொல்லாகும். உம்மா வாப்பா என்ற சொல் என்ன மொழி? என்ற கேள்விக்கு பதில் கிடையாது. வாப்பா என்ற சொல்லுக்கு தந்தை என்று எந்த அகராதி நூலில் வந்துள்ளது என்று கேட்டாள் யாருக்காவது பதில் சொல்ல முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள். மேலும் அப்பா என்றால் தமிழ் மொழியில் தந்தைக்கு சொல்லப்படும் இருப்பினும் முஸ்லிம்கள் தந்தையின் தந்தைக்கு தாயின் தந்தைக்கு வயது முதிர்ந்தவர்களுக்கு அப்பா என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறலாம் என்று எந்த அகராதி நூலில் வந்துள்ளது என்று கேட்டாள் யாருக்காவது பதில் சொல்ல முடியுமா? நடுநிலையாக சிந்தித்துப் பாருங்கள்.

 

அதானுக்கு பாங்கு என்ற சொல்லை பயன் படுத்துவதை போல. தாய் தந்தைக்கு பேச்சு வழக்கில் உம்மா வாப்பா என்ற சொல்லை பயன் படுத்துவதை போல. தந்தையின் தந்தை, தாயின் தந்தை, முதியவர்களுக்கு அப்பா என்ற வார்த்தையை பயன் படுத்துவதை போல. நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து கவி நடையில் பாடுவதற்கு மௌலிது என்ற வார்த்தையை பேச்சு வழக்கில் அடையாளப் பெயராக அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்கள் பயன் படுத்தி வருகிறார்கள்.

 

குறிப்பு :- நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து கவி நடையில் பாடுவதற்கு மௌலிது என்ற வார்த்தைகளை பயன்படுத்தக்காடாது என்றிருந்தால் தவ்ஹீத் ஜமாஅத், தாருல் தவ்ஹீத், ஸலபி, ஜமாத்தே இஸ்லாமிய்யா, தப்லீக் ஜமாஅத், பைஸல் ஜமாஅத், சில்லா, மர்கஸ், ஜும்மா ராத்திரி, திடல் தொழுகை, ஷிர்க் ஒழிப்பு மாநாடு, தெருமுனை பிரச்சாரம், இரத்த தானம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்காடாது. காரணம் இது போன்ற வார்த்தைகள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எந்த அமைப்புக்களுக்கும் அந்த நிகழ்வுக்கும் பயன் படுத்தவில்லை என்பதை நாம் இங்கு ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.