காற்று மற்றும் புயல் காற்று வீசும் போது ஓத வேண்டிய துஆக்கள்
காற்று வீசும் போது ஓதும் துஆ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا
யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையை நான் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
அதிகளவில் காற்று வீசும் போது
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ளதின் நன்மையையும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்பபட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். இந்த காற்றின் தீமையைவிட்டும் இதிலுள்ளதின் தீமையைவிட்டும் எதனை கொண்டு இது அனுப்பபட்டுள்ளதோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
புயல் காற்று வீசும் போது
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
யா அல்லாஹ்! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்