காலையிலும் மாலையிலும் பொதுவாக ஓதும் துஆ
காலையிலும் மாலையிலும் பொதுவாக ஓதும் துஆ
اَللَّهُمَّ بِكَ اَصْبَحْنَا وَبِكَ اَمْسَيْنَا وَبِكَ نَحْيٰى وَبِكَ نَمُوْتُ وَاِلَيْكَ النُّشُوْرُ
யாஅல்லாஹ்! நாங்கள் உன் உதவியைக் கொண்டே இந்தக் காலைநேரத்தில் இருக்கிறோம். உன் உதவியைக் கொண்டே மாலை நேரத்திலும் இருக்கிறோம். இன்னும் உன் உதவியைக் கொண்டே உயிர் வாழ்கிறோம். உன் உதவியைக் கொண்டே மரணமடைவோம். இன்னும் எழுப்புதலும் உன் பக்கமேயாகும்.
اللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
யா அல்லாஹ்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன.
காலையில் ஓதும் துஆ
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ ولَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
(அல்லாஹ்வின் கிருபையால்) நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். ஆட்சியும் அல்லாஹ்வுக்கே! புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே! வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு) இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே எல்லா புகழும் உரியது. அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். என் இரட்சகா! இந்நாளின் நன்மை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும் இந்நாளில் ஏற்படும் தீமை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள தீமையிலிருந்து உன்னை கொண்டு நான் காவல் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். என் இரட்சகா! நரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனையிலிருந்து உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்.
மாலையில் ஓதும் துஆ
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلّ شَيْءٍ قَدِيْرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்