குனூத் ஓதுவது பற்றிய கேள்விகளும் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் உண்டான பதில்களும்

83

குனூத் ஓதுவது பற்றிய கேள்விகளும் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் உண்டான பதில்களும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

கேள்வி :- தொழுகையில் குனூத்தை எந்தெந்த நேரத்தில் ஓத வேண்டும்?

 

பதில் :- குனூத் என்பதற்கு பணிதல், இறைஞ்சுதல் என்று பொருள்படும். ஒவ்வொரு சுபுஹுத் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தில் ருகூஉவிற்கு பின்னர் குனூத் ஓதுவது முக்கியமான ஸுன்னத்தாகும். அடுத்து ரமலான் மாதத்தின் பிற்பகுதி 15 நாட்களில் வித்ரு தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூஉவிற்கு பின்னர் குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும். அடுத்து சோதனை காலங்களில் அதாவது உணவுப் பஞ்சம், வறட்சி, தொற்று நோய், எதிரிகள் விரோதிகளினால் அச்சம் உண்டானாலும் மற்றும் துண்பங்கள் சோதனைகள் போன்றவை ஏறட்பட்டாலும் பர்ளு தொழுகையின் கடைசி ரக்அத்தில ருகூஉவிற்கு பின்னர் குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும்.

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ قَنَتَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ ثُمَّ تَرَكَهُ وَأَمَّا فِى الصُّبْحِ فَلَمْ يَزَلْ يَقْنُتُ حَتَّى فَارَقَ الدُّنْيَا

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (சோதனை காலங்களில்) ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் :- தாரகுத்னி “ஸுனன்” 2/39 இப்னு அபீஷைபா “முஸன்னப்” 2/312

 

கேள்வி :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதினார்கள். அதுபோல ஸஹாபாக்களும் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதினார்களா?

 

பதில் :- மரணிக்கும் வரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குனூத் ஓதினார்கள். அது போல அவர்களை பின்தொடர்ந்த ஸஹாபாக்களும் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

 

عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ الْفَجْرَ بِالْبَصْرَةِ فَقَنَتَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஸரா நகரில் எங்களுக்கு சுபஹ் தொழுகை நடத்தினார்கள். அச்சமயம் குனூத் ஓதினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ரஜா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அபீஷைபா 2/211

 

عَنْ قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْفَجْرِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள். அதுபோல அபூ பக்கர் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா” ஆகியோர்களும் குனூத் ஓதினார்கள்.

 

அறிவிப்பவர் :- கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ரஸ்ஸாக் 4962

 

عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْنُتُ فِي الْفَجْرِ

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதியதை நான் செவிமடுத்தேன்.

 

அறிவிப்பவர் :- உபைத் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அபீஷபா 2/315

 

عَنِ ابْنِ مَعْقِلِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتَانِ فِي صَلَاةِ الْفَجْرِ عَلِيٌّ وَأَبُو مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا

 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருவரும் பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஃகில் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அபீஷைபா 2/212 தாரகுத்னி 2/37

 

عَنْ أَبِي الْجَهْمِ عَنِ الْبَرَاء رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقْنُتُ فِي الْفَجْرِ

 

பராஅ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஜஹ்மி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 2/206

 

கேள்வி :- குனூத் ஓதும் போது இரு கைகளையும் உயர்த்த வேண்டுமா?

 

பதில் :- பொதுவாகவே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ கேட்கும் போது இரு கைகளையும் உயர்த்திய வண்ணம் துஆ கேட்பார்கள். அதுபோல குனூத் ஓதும் போது நாமும் இரு கைகளையும் உயர்த்தி துஆ கேட்பது நபிவழியாகும்.

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ..فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ وَجَدَ عَلَى شَيْءٍ قَطُّ وَجْدَهُ عَلَيْهِم، فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ فِي صَلاَةِ الغَدَاةِ رَفَعَ يَدَيْهِ فَدَعَا عَلَيْهِمْ

 

(எழுபது ஹாபிழ்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலைப்பட்டது போல் வேறெந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபுஹ் தொழுகையில் தன்னுடைய இரு கைகளை உயர்த்தி (எதிரிகளுக்கு) எதிராக குனூத் ஓதியதை நான் பார்த்தேன்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 11994 பைஹகி” ஸுனன் 3229

 

கேள்வி :- ஜமாஅத்தாக தொழும் போது இமாம் சத்தமிட்டு குனூத் ஓதலாமா?

 

பதில் :- தொழுகையில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்திமிட்டு ஓதிய குனூத் துஆக்களை ஸஹாபாக்கள் செவிமடுத்துள்ளார்கள். ஆக இமாம் சத்தமிட்டு குனூத் ஓதுவது நபிவழியாகும்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو فِي الْقُنُوتِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ سِنِينَ كَسِنِي يُوسُفَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சோதனை காலங்களில்) குனூத் ஓதும்போது, ‘இறைவா! ஸலமா இப்னு ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! உன் (தண்டனைப்) பிடிளை முளர் குலத்தாரின் மீது (இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக!’ யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்து (எகிப்திய மக்களுக்கு அளித்த) கொடிய பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போல் அவர்களுக்கும் சில ஆண்டுகளை (தண்டனையாக) அளிப்பாயாக!’ என்று ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 2932

 

கேள்வி :- ஜமாஅத்தாக தொழும் போது இமாம் சத்தமிட்டு குனூத் ஓதினால்! அதனை பின்தொடர்ந்து தொழுபவர்கள் ஆமீன் கூறலாமா?

 

பதில் :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் இமாமாக முன்நின்று சத்தமிட்டு குனூத் ஓதினார்கள். அதனை பின்தொடர்ந்தவர்கள் ஆமீன் கூறியுள்ளார்கள். ஆக ஜமாஅத்தாக தொழும் போது இமாம் சத்தமிட்டு குனூத் ஓதினால்! அதனை பின்தொடர்ந்து தொழுபவர்கள் ஆமீன் கூறுவது நபிவழியாகும்.

 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். தொடர்ச்சியாக ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபஹ் ஆகிய ஒவ்வொரு தொழுகைகளின் கடைசி ரக்அத்தி்ல் “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராக குனூத் ஓதினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்தொடர்ந்து தொழுதார்கள் ஆமீன் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 1443, அஹ்மத் 2746

 

கேள்வி :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குனூத் ஓதும் போது அதனை பின்தொடர்ந்து தொழுதார்கள் ஆமீன் கூறியதாக இடம் பெறும் மேற்கூறிய ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானதா?

 

பதில் :- மேற்கூறிய ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் “ஹிலால் பின் ஹப்பாப் ரஹ்மத்துல்லாஹ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் என்று பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளார்கள். ஆனால் கடைசி நேரத்தில் மூளை குழம்பிவிட்டது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதை காரணமாக வைத்து மேற்கூறிய ஹதீஸை மறுக்க முற்படுவது முற்றிலும் தவறானவை. காரணம் மேற்கூறிய ஹதீஸை அவர்கள் கடைசி நேரத்தில் அறிவிக்கவில்லை. அதற்கு முன்னரே! அவர்கள் அறிவித்த காரணத்தால் மேற்கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வஹாபிஷ அல்பானி மட்டுமின்றி பல அறிஞர்களும் உருதி செய்துள்ளார்கள். அவை பின்வருமாறு

 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ صحَّح إسنادَه ابن جرير في تفسيره 1/316 وقال النووي في المجموع 3/502 إسناده حسن أو صحيح وحسنه ابن حجر في الفتوحات الربانية 2/288 ليس في إسناده مطعن إلا هلال بن خباب فإن فيه مقالا وقد وثقه أحمد وابن معين وغيرهما هلال بن خباب وصالح ابن خباب أخوين ثقتين وصحح إسناده أحمد شاكر في تحقيق المسند 4/263 وحسنه الألباني في صحيح سنن أبي داود 1443

 

கேள்வி :- சுபஹ் தொழுகையின் கடைசி ரகாத்தில் ருகூஉவிற்கு முன்னர் குனூத் ஓதுவதா? அல்லது ருகூஉவிற்கு பின்னர் குனூத் ஓதுவதா?

 

பதில் :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹ் தொழுகையின் கடைசி ரகாத்தில் ருகூஉவிற்கு பின்னர் குனூத் ஓதியுள்ளார்கள் என்று பல அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது. ஆக சுபஹ் தொழுகையின் கடைசி ரகாத்தில் ருகூஉற்கு பின்னர் குனூத் ஓதுவது நபிவழியாகும்.

 

عَنْ مُحَمَّدٍ قَالَ قُلْتُ لِأَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ هَلْ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الصُّبْحِ قَالَ نَعَمْ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا

 

நான் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், ருகூஉவிற்குப் பின்பு ஓதினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1200 நஸாயி 1071

 

கேள்வி :- ஒவ்வொரு சுபஹ் தொழுகையிலும் ஓதவேண்டிய குனூத் துஆ ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளதா?

 

பதில் :- ஒவ்வொரு சுபஹ் தொழுகையிலும் ஓதவேண்டிய குனூத் துஆக்கள் ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓடிவந்த அந்த குனூத்தை கற்றுக் கொள்வது மட்டுமின்றி அதனை ஒவ்வொரு சுபஹ் தொழுகையின் கடைசி ரகாத்தில் ருகூஉவிற்கு பின்னர் ஓதுவது நபிவழியாகும்.

 

عَن ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعلى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ يَقْنُتُ بِهَؤُلَاءِ الكَلِمَاتِ في صَلَاةِ الصُّبْحِ وفي الوِتْرِ باللَّيْلِ اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لا يَذِلُّ من وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹ் தொழுகையிலும் வித்ரு தொழுகையிலும் குனூத் ஓதும் போது இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குத் தந்திருப்பவற்றில் பரகத் செய்வாயாக! நீ விதியாக்கியவைகளில் உள்ள கெடுதியை விட்டும் என்னைக் காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன், உன் மீது எதையும் விதிக்க முடியாது. நிச்சயமாக நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது, உன் மகத்துவம் மேலானது என்று ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 2/211

 

கேள்வி :- குனூத்தில் புதிதாக இயற்றிய துஆக்களை ஓதலாமா?

 

பதில் :- குனூத் ஓதும் போது புதிதாக இயற்றிய குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான துஆக்களை தாராளமாக ஓத முடியும். அதில் எவ்வித குற்றமும் இல்லை. காரணம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் குனூத்துன் நாஸிலா போன்ற துஆக்களை அவர்கள் இயற்றி ஓதினார்கள். அதில் முஃமின்களின் பெயர்களை சுற்றிக் காட்டியும், எதிரி கூட்டங்களின் பெயர்களை சுற்றிக் காட்டியும் ஓதியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் முஸ்லாம்களுக்கு எதிரிகள் மூலமும் கொரோனா போன்ற வைரஸ்கள் மூலமும் பல கோணங்களில் சோதனைகள் ஏற்படுகிறது. ஆக நாம் இன்றைய காலகட்டத்தில் நமக்கு எதுவெல்லாம் சோதனையாக அமைகிறதோ அவைகளை சுற்றிக் காட்டிய வண்ணம் தான் குனூத்தில் துஆக்களை ஓத வேண்டும். ஆக குனூத்தில் புதிதாக இயற்றிய துஆக்களை ஓதுவதில் எவ்வித குற்றமும் இல்லை.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو فِي الْقُنُوتِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ سِنِينَ كَسِنِي يُوسُفَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சோதனை காலங்களில்) குனூத் ஓதும்போது, ‘இறைவா! ஸலமா இப்னு ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! உன் (தண்டனைப்) பிடிளை முளர் குலத்தாரின் மீது (இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக!’ யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்து (எகிப்திய மக்களுக்கு அளித்த) கொடிய பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போல் அவர்களுக்கும் சில ஆண்டுகளை (தண்டனையாக) அளிப்பாயாக!’ என்று ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 2932

 

கேள்வி :- தாபீன்கள் காலத்தில் ஓதப்பட்ட குனூத் துஆக்கள் பித்அத் எனப்படுகிறது. இதன் காரணத்தினால் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்களா?

 

பதில் :- தாபீன்கள் காலத்தில் ஓதப்பட்ட குனூத் துஆக்கள் புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத் என கூறப்படுகிற காரணத்தால். அவைகள் வழிகேடு அல்ல. இஸ்லாத்தை பொருத்த வரையில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட குனூத் துஆக்கள் பித்அத்துல் ஹஸனிய்யா” நல்ல பித்அத்தாகும். இதற்கு இஸ்லாத்தில் பூரண அனுமதி உள்ளது.

 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِه

 

ரமழானில் ஓரிரவில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நான் பள்ளிக்குச் சென்றேன். சிலர் தனித்தும், வேறு சிலர் ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தனர். இதனைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு இவர்களை ஒரே இமாமின் கீழ் ஜமாஅத்தாக தொழச் செய்வது மிகச் சிறந்தது எனக் கூறி உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஜமாஅத்தாக்கினார்கள். மற்றொரு நாள் நான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிக்குச் சென்றபோது மக்கள் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருந்தனர். இது கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘இதோர் நல்ல பித்அத்’ என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துர் றஹ்மான் இப்னு அப்துல் காரி ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம் புஹாரி 2010

 

கேள்வி :- சில இஸ்லாமிய நாடுகளில் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதாத காரணத்தால்! இவர்கள் அனைவரும் குற்றவாளிகளா? இது பற்றிய சட்டம் என்ன?

 

பதில் :- இது பற்றிய தெளிவுகளை கூட்டு துஆ பற்றிய கேள்வி பதில்களின் போது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இவைகளை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்! சில இஸ்லாமிய நாடுகளில் ஹனபி மத்ஹப் சட்டப் பிரகாரம் பர்ளு தொழுகைக்கு பின்னர் குனூத் ஓதுவது கிடையாது. இது இஸ்லாத்தின் பார்வையில் கூற்றமில்லை. காரணம் ஸுன்னத் என்பது செய்தால் நன்மை உண்டு விட்டால் பாவம் கிடையாது. ஆக அந்த ஸுன்னத்தை சில மத்ஹபில் செய்யவில்லை என்ற காரணத்தால் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட மாட்டார்கள். இருப்பினும் அந்த ஸுன்னத்தை வழிகேடு என்று மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்பவர்களே! குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்து விடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்து விடாது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2674

 

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! கூட்டு துஆ குனூத் இவையெல்லாம் மத்ஹபில் மட்டும் தான் உள்ளது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கிடையாது என்று மக்கள் மத்தியில் சுய இலாபத்திற்காக மக்களை ஏமாற்றுபவர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். ஒழுங்கு முறைப்படி குர்ஆன் ஹதீஸைகளை படிப்பது மட்டுமின்றி அதன் படி நடந்து கொள்ளுங்கள். உங்கள் கொல்கை தலைவர்களின் மீது வைத்திருக்கும் பற்றையும் அது அல்லாத அமைப்புக்களின் மீதுள்ள பற்றையும் ஒரு பக்கம் வைத்து விட்டு, நாம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மேற்கூறிய அம்சங்களை நிதானமாகச் சற்று சிந்தித்துப் பாருங்கள், நடுநிலையாக யோசியுங்கள், வழிகேட்டிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சியுங்கள். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.