குர்ஆனை ஓதி விட்டு அதன் கூலியை இவ்வுலகில் தேடலாமா?

88

குர்ஆனை ஓதி விட்டு அதன் கூலியை இவ்வுலகில் தேடலாமா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

♦️என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். (திருக்குர்ஆன் : 5:44 2:41, 2:174, 3:199 பின்வருமாறு

 

وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا‌

 

♦️குர்ஆனை ஓதி விட்டு அதன் பலன்களை மறுமையில் தேடாமல் இவ்வுலகில் தேடுவார்கள் என்ற கருத்தை கூறும் ஹதீஸ் பின்வருமாறு

 

اقْرَؤوا القُرآنَ، وابْتَغوا به اللهَ، مِن قَبلِ أنْ يَأتيَ قَومٌ يُقيمونَه إقامةَ القِدْحِ، يتَعَجَّلونه، ولا يَتَأجَّلونَه

 

ஆதாரம் :- அபூதாவூத் 830 அஹ்மது 14898
 

♦️நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். அதன் மூலம் சாப்பிடாதீர்கள் என்ற கருத்தை கூறும் ஹதீஸ் பின்வருமாறு

 

اقْرَءُوا الْقُرْآنَ وَلاَ تَغْلُوا فِيهِ، وَلاَ تَجْفُوا عَنْهُ، وَلاَ تَأْكُلُوا بِهِ وَلاَ تَسْتَكْثِرُوا بِهِ

 

ஆதாரம் :- அஹ்மது 15575

 

اقْرَءُوا الْقُرْآنَ، وَلَا تَأْكُلُوا بِهِ، وَلَا تَجْفُوا عَنْهُ، وَلَا تَغْلُوا فِيهِ

 

ஆதாரம் :- அஹ்மது 15574

 

♦️கூலி எதுவும் பெறாத முஅத்தினை பாங்கு சொல்ல நியமிக்க வேண்டும் என்ற கருத்தை கூறும் ஹதீஸ் பின்வருமாறு.

 

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ اجْعَلْنِي إِمَامَ قَوْمِي فَقَالَ أَنْتَ إِمَامُهُمْ وَاقْتَدِ بِأَضْعَفِهِمْ وَاتَّخِذْ مُؤَذِّنًا لاَ يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا

 

ஆதாரம் :- நஸாயி 671 அஹ்மது16314

 

இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் குர்ஆனை ஓதி விட்டு அதன் பலன்களை இவ்வுலகில் தேடாதீர்கள், அதன் மூலம் வரும் வருமானத்தில் சாப்புடாதீர்கள், கூலி எதுவும் பெறாத முஅத்தினை பாங்கு சொல்ல நியமியுங்கள் என்ற கருத்தை தரும் குர்ஆன் ஹதீஸ்கள் மேற்கூறப்பட்டுள்ளது. இவைகளை காரணமாக வைத்து வஹாபிஷ அமைப்புக்கள் கத்தம் ஃபாத்திஹா ஓதுவது கூடாது என்ற கருத்தை வாதமாக முன் வைக்கின்றனர்.

 

இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானதாகும். காரணம் மஸ்ஜித் பள்ளிவாசல்களில் குர்ஆன் மத்ரஸாக்களில் கடமை புரியும் அனைத்து ஆலிம்களும் குர்ஆனை தான் ஓதுகின்றனர், அதனை கொண்டு தான் உபதேசம் செய்கின்றார், அது போல முஅத்தினும் பாங்கு சொல்கிறார், இருப்பினும் இரு சாராரும் மாதம் முடிவடையும் போது கூலியாக சம்பலத்தை பெற்றுக் கொள்கின்றனர். அந்த கூலியை கொண்டே சாப்பிடுகின்றனர். இதில் அஹ்லுஸ் ஸுன்னா, தப்லீக், வஹ்ஹாபிஷ தவ்ஹீத் ஆலிம்கள் அனைவரும் அடங்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 

♦️கேள்வி :- குர்ஆனை ஓதி விட்டு சாப்பிடுவது கூடாது என்றால்? குர்ஆனை ஓதி விட்டு அதனை கற்றுக் கொடுத்து விட்டு அதன் பலன்களை மாதம் முடிந்த உடன் கூலியாக இவ்வுலகில் எதிர் பார்ப்பது கூடாது என்று ஏன் உங்களுக்கு தெரியவில்லை? வஹாபிஷ தவ்ஹீத் ஆலிம்கள் இவ்வாறு பெற்றுக் கொள்வது கிடையாதா? இதுவும் குர்ஆன்  ஹதீஸ்களில் தானே இடம் பெற்றுள்ளது. நடுநிலையாக யோசியுங்கள்.

 

♦️குறிப்பு :- குர்ஆன் ஓதி, அதன் சட்டங்களை அதன் விளக்கங்ளை மக்களுக்கு தவறான முறையில் கூறி அதன் மூலம் வழிகேடர்களிடம் அதாவது யூத நஸாரா வஹ்ஹாபிஷ ஷீஆ அமைப்புக்களிடம் இருந்து ஆதாயங்களாக கூலிகளை இவ்வுலகில் பெற்றுக் கொள்வதும், அதனை கொண்டு சாப்பிடுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தையே மேற்கூறிய குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறதே அன்றி வேறில்லை.

 

குர்ஆன் ஓதி விட்டு அதன் பலன்களை இவ்வுலகில் தேடிக் கொள்ளலாம் அதை கொண்டு சாப்பிடலாம் என்ற கருத்தை தரும் குர்ஆன் ஹதீஸ்களை விரிவாக பார்க்கலாம்.

 

لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ‌ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًا ‌ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏

 

(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.

(அல்குர்ஆன் : 2:273)

 

அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை முற்றிலும் அர்ப்பணம் செய்து கொண்டவர்கள் இதில் குர்ஆனை நல்ல நோக்கத்திற்காக ஓதுபவர்கள், அதனை மக்களுக்கு கற்றுக் கொடுப்பவர்கள் அனைவரும் அடங்குவார்கள். அத்தகைய நல்லோர்கள் இதற்குரிய பலன் கூலிகளை கேட்காவிட்டாலும் சரி,  இவ்வுலக விஷயத்தில் அவர்களுக்குறிய கூலியை வழங்குங்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ  فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ فَقَالَ بَعْضُهُمْ لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ فَأَتَوْهُمْ، فَقَالُوا يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ فَهَلْ عِنْدَ أَحَدٍ مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ وَيَقْرَأُ الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ قَالَ فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ فَقَالَ بَعْضُهُمْ اقْسِمُوا فَقَالَ الَّذِي رَقَى لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ فَقَالَ وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ ثُمَّ قَالَ قَدْ أَصَبْتُمْ اقْسِمُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ شُعْبَةُ حَدَّثَنَا أَبُو بِشْرٍ سَمِعْتُ أَبَا المُتَوَكِّلِ بِهَذَا

 

ஸஹாபாக்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் (மாற்று மத) அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்ட போது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!” என்று கூறினர். அவ்வாறே அவர்களும் ஸஹாபாக்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டி விட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?’ என்று கேட்டனர். அப்போது ஸஹாபாக்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!” என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். ஸஹாபி ஒருவர், தேள் கொட்டப்பட்ட (மாற்று மத தலைவர்) மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..” என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘இதைப் பங்கு வையுங்கள்!” என்று ஒருவர் கேட்ட போது, ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!” என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸஹாபாக்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டு விட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2242

 

குர்ஆனை ஓதி விட்டு அதன் பலன்களை இவ்வுலகில் கூலியாக (ஆடுகளை) ஸஹாபக்கள் பெற்றுக் கொண்ட நிலையில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வந்து நடந்த நிகழ்வை கூறியபோது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை தடுக்கவில்லை. அதற்கு மாற்றமாக அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்ற கருத்தை கூறியதாக மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ خَارِجَةَ بْنِ الصَّلْتِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ عَمِّهِ أَنَّهُ مَرَّ بِقَوْمٍ  فَأَتَوْهُ فَقَالُوا إِنَّكَ جِئْتَ مِنْ عِنْدِ هَذَا الرَّجُلِ بِخَيْرٍ فَارْقِ لَنَا هَذَا الرَّجُلَ فَأَتَوْهُ بِرَجُلٍ مَعْتُوهٍ فِي الْقُيُودِ فَرَقَاهُ بِأُمِّ الْقُرْآنِ ثَلَاثَةَ أَيَّامٍ غُدْوَةً وَعَشِيَّةً وَكُلَّمَا خَتَمَهَا جَمَعَ بُزَاقَهُ ثُمَّ تَفَلَ فَكَأَنَّمَا أُنْشِطَ مِنْ عِقَالٍ فَأَعْطَوْهُ شَيْئًا فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَهُ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلْ فَلَعَمْرِي لَمَنْ أَكَلَ بِرُقْيَةٍ بَاطِلٍ لَقَدْ أَكَلْتَ بِرُقْيَةٍ حَقٍّ

 

ஹாரிஜா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சாச்சா அவர்கள் ஒரு கூட்டத்தின் பக்கம் சென்ற போது அந்த கூட்டத்தவர்கள் அவரிடம் திடுக்கமடைந்த ஒரு மனிதனைக் கொண்டு வந்து ஒதிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்த மனிதனுக்கு அவர் மூன்று நாட்கள் சூறதுல் பாத்திஹாவைக் கொண்டு காலையும் மாலையும் ஒதிப்பார்த்தார். ஒதி முடிந்ததும் உமிழ் நீரை திரட்டி துப்பினார். அப்போது அந்த மனிதர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் எழுந்தார். அந்த கூட்டத்தினர் அவருக்கு அன்பளிப்பு வழங்கினர். அதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறிய போது, என் ஆயுளின் மீது சத்தியமாக நீ அதை சாப்பிடு. எத்தனையோ பேர் அசத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகின்றனர். நீ சத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகிறாய் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஹாரிஜா இப்னு ஸல்த் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 3421

 

குர்ஆனை ஓதி விட்டு கூலியை இவ்வுலகில் அன்பளிப்பாக பெற்றுக் கொண்ட ஸஹாபாக்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்த்து கூறினார்கள். அதாவது என் ஆயுளின் மீது சத்தியமாக நீ அதை சாப்பிடு. எத்தனையோ பேர் அசத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகின்றனர். நீ சத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகிறாய் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை முற்றிலும் அர்ப்பணம் செய்து கொண்டவர்கள், குர்ஆனை நல்ல நோக்கத்திற்காக ஓதி விட்டு, மேலும் மக்களுக்கு அதனை கற்றுக் கொடுத்து விட்டு, அதற்குரிய பலன் கூலிகளை கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி,  இவ்வுலக விஷயத்தில் அவர்களுக்குறிய கூலியை இதற்கு பொறுப்பானவர்கள் வழங்க வேண்டும் என்பது இறைவனின் இறைகட்டளை என்பதை மேற்கூறிய குர்ஆன் ஹதீஸ்களை கொண்டு நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.