குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றலாமா?

142

குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றலாமா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ مَالِكٌ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ

 

حديث ضعيف

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). இரண்டு அவனுடைய நபியின் வழிமுறைகள்.

 

அறிவிப்பவர் :- மாலிக் ரஹ்மத்துல்லாஹ். ஆதாரம் முஅத்தா மாலிக் 2618

 

இந்த ஹதீஸை அறிவிக்கும் மாலிக் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் கிடையாது. எனவே மேற்கூறிய ஹதீஸ் பலஹீனமானதாகும்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ شَيْئَيْنِ لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا كِتَابَ اللَّهِ وَسُنَّتِي، وَلَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ

 

يحيى بن معين : قال الدوري عنه : ليس بشيء وقال في موضع آخر : صالح بن موسى ” البخاري قال في (الضعفاء) : منكر الحديث وقال النسائي : لا يكتب حديثه ، ضعيف وقال في (الضعفاء) : متروك الحديث والدارقطني:قال في (السنن) : ضعيف وابن حجر العسقلاني قال في (تقريب التهذيب) : متروك

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் உங்களிடம் விட்டுச் செல்லும் இரண்டை நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாமல் நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்) மற்றது அவனுடைய நபியின் வழிமுறைகள். இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 319 தாரகுத்னி 149

 

மேற்கூறிய ஹதீஸில் ஸாலிஹ் இப்னு மூஸா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலஹீனமானவர் என்ற காரணத்தால் ஹதீஸும் பலஹீனமடைகிறது.

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنِ اعْتَصَمْتُمْ بِهِ فَلَنْ تَضِلُّوا أَبَدًا كِتَابَ الله وَسُنَّةَ نَبِيِّهِ

 

أحمد بن حنبل يقول : ابن أبي أويس ليس به بأس وأبوه ضعيف الحديث. والنسائي : قال في (الضعفاء) : ضعيف وقال في موضع آخر : ليس بثقة وقال ابن عدي : بن أبي أويس ضعیف

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனது நபியின் வழிமுறையாகும்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 318 பைஹகி 20123

 

மேற்கூறிய ஹதீஸில் அபூ உவைஸ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலஹீனமானவர் என்ற காரணத்தால் ஹதீஸும் பலஹீனமடைகிறது.

 

எனவே குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுங்கள் என்பதாகக் கூறப்படும் மேற்கூறிய ஹதீஸ்களாக இருந்தாலும் சரி அது அல்லாத வேறு சில ஹதீஸ்களாக இருந்தாலும் சரி அவைகள் அனைத்தும் அறிவிப்பாளர் தொடர்களில் அதிகளவில் குறையுள்ள பலஹீனமான ஹதீஸ்களாகவே ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

குர்ஆன் ஹதீஸை எவ்வாறு சத்திய ஸஹாபாக்கள் அஹ்லு பைத்தினர்கள், அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் கற்றறிந்து கூறினார்களோ அதன்படி முஃமின்கள் ஏற்று நடக்கிறார்கள். இருப்பினும் வஹாபிஷ அமைப்புக்கள் தவ்ஹீத் என்ற பெயரில் ஸஹாபாக்கள், அஹ்லு பைத்தினர்கள், அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் அறிஞர் பெருமக்கள் தேவையில்லை என்று கூறியவாறு தன் இஷ்டப்படி குர்ஆன் ஹதீஸை தவறாக விளங்கிக் கொண்டு தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்துக் கொண்டும் மக்கள் மத்தியில் குழப்பம் விளைவித்துக் கொண்டு இருக்கின்றனர். இது போன்றவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்.

 

وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ‏

 

பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்! என அவர்களிடம் சொல்லப்பட்டால், நிச்சயமாக நாங்கள் (தவ்ஹீத் வாதிகள்) சீர்திருத்தம் செய்பவர்களே! என அவர்கள் கூறுகிறார்கள். மேலும்

 

اَلَا اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰـكِنْ لَّا يَشْعُرُوْنَ‏

 

எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பவாதிகளாவர். ஆயினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. மேலும்

 

وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْاۤ اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ‌ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰـكِنْ لَّا يَعْلَمُوْنَ‏

 

இன்னும் (முஃமின்கள்) மனிதர்கள் ஈமான் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்! என அவர்களிடம் சொல்லப்பட்டால் “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா? என்றே அவர்கள் பதில் சொல்கிறார்கள் எச்சரிக்கை! நிச்சயமாக இவர்கள்தாம் மூடர்களாவர். ஆயினும் (இதனை) அவர்கள் அறிவதில்லை!

சூரா பகரா ஆயத் 11, 12, 13

 

குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவது முற்றிலும் தவறாகும். இருப்பினும் ஒருவர் குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்றால் குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள சத்திய ஸஹாபாக்கள், அஹ்லு பைத்தினர்கள், மார்க்க விஷயத்தில் அதிகாரம் உடைய அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் அறிஞர் பெருமக்கள் குர்ஆன் ஹதீஸ்களை எப்படி புரிந்து அதன் படி நடந்தார்களோ அந்த முறைப்படி நாமும் அவைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் முஃமின்கள் சென்ற வழியில் நாமும் பயணிக்க நேரிடும் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.