கூட்டு துஆ ஓதுவது பற்றிய பல கேள்விகளும் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் உண்டான பதில்களும்

72

கூட்டு துஆ ஓதுவது பற்றிய பல கேள்விகளும் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் உண்டான பதில்களும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

கேள்வி :- நபிமொழியில் லுஹர் தொழுகையில் 4 ரகாத்துதான் தொழ வேண்டும் என்று கூறினால் 4 ரகாத்துதான் நாம் தொழ வேண்டும். 5 அல்லது 6 ரகாத் தொழ முடியாது. அது போல பர்ளு தொழுகை முடிந்த பிறகு என்னென்ன துஆ ஓத சொன்னார்களோ அதை மட்டுமே ஓத வேண்டும். அது அல்லாததை ஓதக் கூடாது என்கின்றனர். இது சரியா?

 

பதில் :- பர்ளு என்றால் என்ன? ஸுன்னத் என்றால் என்ன? என்பதை ஆரம்பத்தில் படிக்க வேண்டும். காரணம் பர்ளு தொழுகை சொன்னது போல் சொன்ன பிரகாரம் செய்ய வேண்டும். அது கட்டாயமான காரியமாகும். 4 ரகாத் தொழ சொன்னால் 4 ரகாத் தான் தொழ வேண்டும் 5 அல்லது 6 ரகாத் தொழ முடியாது. சொன்ன பிரகாரம் செய்தால் நன்மை உண்டு. விடுபட்டால் பாவமாகும். அடுத்து ஸுன்னத் பர்ளு போன்று அல்ல. அதாவது பர்ளு தொழுகை முடிந்த பின்னர் மற்ற அமல்கள் ஸுன்னத்தாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸல்லம் அவர்கள் இது போன்ற நேரங்களில் திக்ரு துஆக்களில் ஈடுபட்டுள்ளார்கள். ஆக அதனை செய்தால் நன்மை உண்டு அது அல்லாத திக்ருகள் துஆக்கள் அல்லது திருக்குர்ஆன் ஸலவாத்துக்களை ஓதினாலும் அதற்கும் நன்மை உண்டு. இவைகள் விடுபட்டால் பாவம் கிடையாது.

 

عَنْ جَرِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1017, திர்மிதி 2675, தப்ரானி 2372

 

கேள்வி :- பர்ளு தொழுகை முடிந்த பின்னர் இமாம்கள் சத்தமிட்டு துஆ ஓதுவது நபிவழியா?

 

பதில் :- ஆம்” பர்ளு தொழுகை முடிந்த பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தமிட்டு ஓதிய துஆக்களை ஸஹாபாக்கள் செவிமடுத்துள்ளார்கள். ஆக இமாம் சத்தமிட்டு துஆ ஓதுவது ஸுன்னத்தாகும்.

 

عَنْ مُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது’ என்ற (துஆக்களை) ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 844

 

கேள்வி :- ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் எங்களுடைய தேவைகளை நாங்கள் கேட்காமல்! அடுத்தவர்களுடைய துஆக்களை ஏன் ஓத வேண்டும்?

 

பதில் :- ஒரு மனிதனுக்கு பல தேவைகள் உள்ளன. அந்த தேவைகளை இறைவனிடம் ஒரே நேரத்தில் முறைட்டு கேட்பது மனிதனின் இயல்பு. ஆக சுபஹ் தொழுகைக்கு பின்னர் ஒரு தேவையை கேட்பது, இதுபோல ஒரு நாளைக்கு 5 வக்து தொழுகையிலும் 5 விதமான தேவைகளை கேற்க முடியும்? இந்த அளவு கோலை வைத்தால் ஒரு வாரத்திற்கு ஒரு மாதத்திற்கு எத்தனை வக்து தொழுகை? எத்தனை தேவைகள்? இது சாத்தியம் ஆகுமா? இது வாதத்திற்கு சாத்தியமே தவிர நடைமுறையில் சாத்தியம் கிடையாது.

 

குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் குறிப்பிட்ட துஆக்ககளை ஓதி வந்துள்ளார்கள். கற்றும் கொடுத்துள்ளார்கள். இமாம்களும் சில துஆக்களை இடத்திற்கு ஏற்றவாறு கற்றுக் கொடுத்துள்ளார்கள். தொழுகை ஷாபி போன்ற தமிழ் நூல்களிலும் அந்த துஆக்கள் அதன் அர்த்தங்களுடன் இடம் பெற்றுள்ளது. இது போன்ற துஆக்களை ஓதக்கூடாது. சுயமாக நீங்கள் யோசித்து யோசித்து தான் ஓத வேண்டும் என்ற அவநம்பிக்கை சார்ந்த கருத்தை இஸ்லாம் எக்காலத்திலும் கூறவில்லை. ஆக தனிப்பட்ட முறையிலும் ஓத முடியும். அது போன்று குர்ஆன் ஹதீஸில் இடம் பெற்ற துஆக்கள் ஸஹாபாக்கள் இமாம்கள் கற்றுத் தந்த துஆக்களையும் தாராளமாக ஓத முடியும்.

 

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلَاتِي قَالَ قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

 

என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டபோது ‘இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் இருக்கிறாய் என்ற துஆவை ஓதுவீராக என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 834

 

கேள்வி :- பர்ளு தொழுகை முடிந்த பிறகு இமாம் ஓதும் துஆக்களுக்கு ஏன் ஆமீன் கூறவேண்டும்? தனிப்பட்ட முறையில் நாம் ஓதும் துஆவிற்கும் இமாம் ஓதும் துஆவிற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

 

பதில் :- பர்ளு தொழுகைக்கு பின்னர் இமாம் சத்தமிட்டு பகிரங்கமாக துஆ ஓதுவது ஸுன்னத்தாகும். இது பற்றிய ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இமாம் ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் துஆ ஓதும் போது அல்ஹம்து என்ற சொல்லில் இருந்து ஆரம்பம் செய்கிறார்கள். அதாவது ஆரம்பத்தில் அல்லஹ்வை புகழ்ந்து அடுத்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலாவாத்து கூறி துஆக்களை ஆரம்பம் செய்கிறார்கள். அந்த துஆக்களில் சுவர்க்கம் நரகம் பாவ மன்னிப்பு இம்மை மறுமை கப்ரு வேதனை குழப்பங்கள் பற்றிய துஆக்கள் அனைத்தும் இடம்பெற்றது மட்டுமின்றி ஹம்து ஸலவாத்துடன் துஆக்கள் முடிவடைகிறது.

 

குறிப்பு :- முஸ்லிம்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள் ஒவ்வொரு தொழுக்கு பின்னரும் நீங்கள் தனிப்பட்ட முறையில் இது போன்று தான் துஆ கேட்கிறீர்களா? நாம் தனிப்பட்ட முறையில் கேட்கும் துஆவிற்கும் இமாம் ஓதும் துஆவிற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை சர்வ சாதாரணமாக அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது.

 

حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ

 

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை துஆ செய்ததை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவியுற்றார்கள். நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் என்று கூறி அம்மனிதரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தார்கள். உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டி பிரார்த்திக்கலாம் துஆ கேட்கலாம் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- பளாலா பின் உபைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 1481

 

கேள்வி :- கூட்டு துஆ என்றால் என்ன? அடுத்து ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தமிட்டு துஆ ஓதினார்கள் சரி அதை செவிமடுத்த ஸஹாபாக்கள் ஆமீன் கூறினார்களா? அடுத்து எந்தெந்த நேரத்தில் கூட்டு துஆ ஓத வேண்டும்?

 

பதில் :- துஆ ஓதும் இமாம் ஆமீன் கூறினாலும் சரி கூறாவிட்டாலும் சரி குறிப்பாக துஆக்களை செவிமடுப்பவர்கள் ஆமீன் கூறினால் இதற்கு கூட்டு துஆ எனப்படும். அடுத்து ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறுங்கள் என்பது நபிமொழி நபிவழியாகும். உதாரணமாக அகீகா இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுக்க சொன்னார்கள். ஆனால் ஸஹாபாக்கள் கொடுத்தாக ஹதீஸ்களில் இல்லை என்றால் நாம் அகீகா கொடுப்பது தவறா? இல்லை தானே! அதே போன்று தான் இமாம் சத்தமிட்டு பகிரங்கமாக துஆ ஓதினால் அதை செவிமடுப்பவர்கள் ஆமீன் கூறுங்கள் என்பது நபிமொழி நபிவழியாகும். ஆக ஸஹாபாக்கள் ஆமீன் கூறியதாக ஹதீஸ்களில் இடம் பெறவில்லை என்றாலும் அதனை ஸஹாபாக்கள் நடைமுறை படுத்தி இருப்பார்கள். காரணம் அவர்கள் நபிவழியை அனுஅனுவாக பின்பற்றுபவர்கள் என்பதே எங்களின் நிலைப்பாடாகும். அடுத்து நல்ல நோக்கில் எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்கிறார்களோ அந்த இடங்களையெல்லாம் கூட்டு துஆ ஓதுவது ஸுன்னத்தாகும்.

 

عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ الْفِهْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَجْتَمِعُ مَلَأٌ فَيَدْعُو بَعْضُهُمْ وَيُؤَمِّنُ بَعْضُهُمْ إِلَّا أَجَابَهُمُ اللَّهِ تَعَالَى

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் (ஒருவர் துஆ ஓத) பிரார்த்தனை செய்ய, மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் (துஆவை) பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை.

 

அறிவிப்பவர் :- ஹபீப் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 5478

 

கேள்வி :- யூத நஸாராக்கள் ஆமேன் என்று கூறுகிறார்கள் நாம் ஆமீன் என்று கூறலாமா?

 

பதில் :- நபி ஈஸா மூஸா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் போன்றவர்களை ஏசு மோசே ஏப்ரஹாம் என்று யூத நஸாராக்கள் கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூறியதால் நாம் ஈஸா மூஸா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் என்று கூறக்கூடாதா? அப்படி அல்ல. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கூறப்பட்டதை போன்று நாம் கூறுகிறோம். அவ்வளவு தான். அதேபோன்று தான் அவர்கள் ஆமேன் என்று கூறுகிறார்கள் நாம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கூறப்பட்டது போல ஆமீன் என்று கூறுகிறோம். இதில் எந்த விதத்திலும் பிரச்சினை கிடையாது.

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا حَسَدَتْكُمُ الْيَهُودُ عَلَى شَيْءٍ مَا حَسَدَتْكُمْ عَلَى السَّلَامِ وَالتَّأْمِينِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆமீன் ஸலாம் என்ற இரு சொல்லில் யூதர்கள் பொராமை கொண்டது போல் வேரந்த சொல்லிலும் அவர்கள் பொராமை கொள்ளவில்லை.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 856

 

கேள்வி :- தொழுகைக்கு பின்னர் நம்முடைய தேவைகளை இமாமிடம் முறையிட்டு எங்களுக்காக துஆ கேளுங்கள் என்று கூறலாமா?

 

பதில் :- தாராளமாக தன் தேவைகளை நாம் கேட்க முடியும். சில சந்தர்ப்பங்களில் இமாமாக இருப்பவர்களிடம் தம் தேவைகளை துஆவாக கேளுங்கள் என்று கூறவும் முடியும். அதற்கு இஸ்லாத்தில் பூரண அனுமதி உள்ளது.

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَمَا هُوَ إِلَّا أَنَا وَأُمِّي وَأُمُّ حَرَامٍ خَالَتِي فَقَالَ قُومُوا فَلِأُصَلِّيَ بِكُمْ فِي غَيْرِ وَقْتِ صَلَاةٍ فَصَلَّى بِنَا فَقَالَ رَجُلٌ لِثَابِتٍ أَيْنَ جَعَلَ أَنَسًا مِنْهُ قَالَ جَعَلَهُ عَلَى يَمِينِهِ ثُمَّ دَعَا لَنَا أَهْلَ الْبَيْتِ بِكُلِّ خَيْرٍ مِنْ خَيْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ فَقَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ، خُوَيْدِمُكَ ادْعُ اللَّهَ لَهُ قَالَ فَدَعَا لِي بِكُلِّ خَيْرٍ وَكَانَ فِي آخِرِ مَا دَعَا لِي بِهِ أَنْ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். அப்போது (வீட்டில்) நான், என் தாயார் மற்றும் என் சிறிய தாயார் உம்முஹராம் ரலியல்லாஹு அன்ஹா ஆகியோர் மட்டுமே இருந்தோம். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எழுங்கள்! உங்களுக்காக நான் (நஃபில்) தொழுவிக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு எங்களுக்கு (தலைமை தாங்கித்) தொழுவித்தார்கள். (அது கடமையான தொழுகையின் நேரமல்ல.(இதன் அறிவிப்பாளரான ஸாபித் ரஹ்மத்துல்லாஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், ” இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தமக்கு (அருகில்) எந்தப் பக்கத்தில் நிறுத்தினார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் ” இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்” என்று பதிலளித்தார்கள்.-பின்னர், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் குடும்பத்தாருக்காக எல்லா விதமான இம்மை மறுமை நன்மை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போது என் தாயார், ” யா ரஸூலல்லாஹ்! (அனஸ்,) உங்களுடைய சிறு சேவகர். அவருக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்!” என்றார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எனக்கு எல்லா விதமான நன்மையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனையின் இறுதியில், “இறைவா! அனஸுக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அதில் அவருக்கு வளம் பாலிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1170

 

கேள்வி :- பர்ளு தொழுகை முடிந்த மறுகணம் இமாம் திடீரென எழுந்து செல்வது பித்அத் என்று கூறியுள்ளீர்களே! இது நபிவழிக்கு முறன் இல்லை?

 

பதில் :- நாம் கூறிய கருத்துக்கள் எக்காலத்திலும் குர்ஆன் ஹதீஸிக்கு முறன் கிடையாது. காரணம் நாம் கூறியது பர்ளு தொழுகை முடிந்த மறுகணம் எந்த காரணமும் இன்றி மனமுறன்டாக திடீரென்று இமாம் எழுந்து செல்வது வழிகெட்ட பித்அத்தாகும் என்ற கருத்தை நாம் கூறியுள்ளோம். ஆக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை திடீரென எழுந்து சென்றுள்ளார்கள். மனமுரன்டாக அல்ல என்ற கருத்தை ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ عُقْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي فَأَمَرْتُ بِقِسْمَتِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உக்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 851 நஸாயி 1365

 

கேள்வி :- இமாம் அரபியில் துஆ ஓதினால் அதன் அர்த்தம் விழங்காதே! இவ்வாறு இருக்க எப்படி ஆமீன் கூறுவது?

 

பதில் :- தொழுகை நடைபெறும் போது இமாம் சத்தமிட்டு சூரா பாதிஹாவை ஓதுகிறார்கள். அப்போது அந்த சூரா முடிவடையும் போது அனைவரும் ஆமீன் கூறுகிறீர்கள் அப்படி தானே! 100 க்கு 90 வீதமானோர் இந்த இடத்தில் ஆமீன் கூறவேண்டும் என்று ஹதீஸ் கூறுகிறது. அதனால் தான் நாங்களும் கூறுகிறோம் என்று கூறுகிறார்களே! தவிர அந்த அரபு வசனத்தின் அர்த்தம் தெரிந்த வண்ணம் ஆமீன் கூறுவது மிகக்குறைவு. ஆக துஆ ஓதப்பட்டால் ஆமீன் கூறுவது ஸுன்னத் அவ்வளவு தான். அவர் துஆவை தவறாக ஓதியிருந்தால் இறைவனிடம் இமாம் தான் குற்றவாளியாக கருதப்படுவார் என்ற கருத்தை இங்கு ஞாபகம் ஊட்டுக் கொள்கிறோம்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الْإِمَامُ { غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} فَقُولُوا آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘இமாம் ‘கைருல் மக்லூபி அலை ஹிம் வலழ்ழாலீன்’ என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் ஒருவர் கூறும் ஆமின் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து அமைந்து விடுகின்றதோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 782

 

கேள்வி :- இமாம் குழந்தை பாக்கியம் தந்தருள் இறைவா! என்று அரபில் துஆ கேட்கிறார். அச்சமயம் ஆமீன் கூறுவதில் அதிகமானோர் சிறுவர்கள் உள்ளனர். இப்போது இவர்கள் ஆமீன் கூறினால் ஏதும் பிரச்சனையா?

 

பதில் :- எந்த விதத்திலும் பிரச்சினை கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் இமாம்கள் கேட்பது கிடையாது. ஒரு வேளை கேட்டால்! அதற்கு சிறுவர்கள் ஆமீன் கூறினால். அதில் எவ்வித குற்றமும் இல்லை. காரணம் குர்ஆன் ஹதீஸில் பல துஆக்கள் வெவ்வேறு கோணங்களில் இடம் பெற்றுள்ளது. அவைகளில் ஸாலிஹான பிள்ளை பாக்கியம் தந்தருள் இறைவா! என்ற துஆக்களெல்லாம் நபிமார்கள் வழியாக குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. இது போன்ற குர்ஆன் வசனங்களை சிறுவர்கள் ஓதுவது ஹராம் என்று கூற முடியுமா? தெளிவு பெறுங்கள்.

 

قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏

 

தன் இறைவனிடம் பிரார்த்தித்து “என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை (பிள்ளையை) அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்” என்று கூறினார்.

அல்குர்ஆன் :- 3:38

 

கேள்வி :- சில இஸ்லாமிய நாடுகளில் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதாத காரணத்தால்! இவர்கள் அனைவரும் குற்றவாளிகளா? இது பற்றிய சட்டம் என்ன?

 

பதில் :- மக்கா மதீனா அது அல்லாத சில இஸ்லாமிய நாடுகளில் பர்ளு தொழுகைக்கு பின்னர் சத்தமிட்டு கூட்டு துஆ ஓதுவது கிடையாது என்பதை நாம் அறிவோம். அது அல்லாத நேரங்களில் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கூட்டு துஆ ஓதுகிறார்கள். ஆனால் சில மத்ஹப் சட்டப் பிரகாரம் பர்ளு தொழுகைக்கு பின்னர் சத்தமிட்டு கூட்டு துஆ ஓதுவது கிடையாது. இது இஸ்லாத்தின் பார்வையில் கூற்றமில்லை. காரணம் ஸுன்னத் என்பது செய்தால் நன்மை உண்டு விட்டால் பாவம் கிடையாது. ஆக அந்த ஸுன்னத்தை சில மத்ஹபில் செய்யவில்லை என்ற காரணத்தால் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட மாட்டார்கள்.. இருப்பினும் அந்த ஸுன்னத்துக்களை வழிகேடு என்று மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்பவர்களே! குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்து விடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்து விடாது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2674

 

கேள்வி :- ஒருவர் துஆ ஓத மற்ற மனிதர்கள் ஆமீன் கூறினால் அது மட்டும் தான் கூட்டு துஆவா?

 

பதில் :- இவ்வாறு சொல்ல கூறமுடியாது. காரணம் ஒருவர் வெளிப்படையில் துஆ ஓதினால். அதை செவிமடுப்பவர்கள் மனிதர்கள் ஆமீன் கூறுகிறார்கள். இது கூட்டு துஆ அதே போன்று நோயாளிகளை நோய் விசாரிக்க சென்றாலும் சரி கண்ணெதிரே இல்லாத சகோதரர்களுக்கு மக்களுக்கு துஆ கேட்டாலும் சரி அதற்கு மலக்குகள் ஆமீன் கூறுகிறார்கள். ஆக துஆக்கள் அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் கூட்டு துஆவாகவே கருதப்படுகிறது.

 

عَنْ أُمُّ الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ حَدَّثَنِي سَيِّدِي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ‘‘ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’’ என்று கூறுகிறார்கள்.

 

அறிவிப்பவர் :- உம்மு தர்கா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் :- முஸ்லிம் 2732, அபூ தாவூத் 1534, இப்னு மாஜா 2895

 

عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَوِ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் நோயாளியையோ மரணித்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் “ஆமீன்” கூறுகிறார்கள்.

 

அறிவிப்பவர் :- உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 919 அபூ தாவூத் 3115 திர்மிதி 977 இப்னு மாஜா 1447

 

குறிப்பு :- அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! குர்ஆன் ஹதீஸ் தெளிவாக உள்ளது. கூட்டு துஆ ஓதுவது ஸுன்னத்தாகும். ஆக வஹாபிஷ அற்ப பணத்திற்காக வேண்டி தானும் கெட்டு பிறர்களையும் வழிகெடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். யூதர்கள் ஆமீன் என்ற வார்த்தையில் அதிகம் பொறாமை கொண்டார்கள். அந்த வார்த்தைகளால் முஸ்லிம்கள் ஒன்று பட்டுவுள்ளனர் அந்த வார்த்தைகளை கொண்டு இறைவனிடம் தேவைகளை பெற்றுக் கொள்கின்றனர். இதனை அழிக்க நம்மால் முடியாத காரணத்தால் முஸ்லிம்களின் போர்வையில் உள்ள வஹ்ஹாபிஷ அமைப்புக்களை தேர்ந்தெடுத்து குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் மக்களை வழிகெடுத்து முஸ்லிம்களை பிளவு படுத்தி விட்டனர். இதன் காரணத்தினால் யூதர்களின் சதித்திட்டம் மேலோங்கி நிற்பதை நம்மால் காண முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.