கைகளை நீட்டியபடி மழை வேண்டுதல் என்ற பெயரில் தவ்ஹீத் அமைப்பு ஏன் ஜபம் செய்கிறார்கள்?

139

கைகளை நீட்டியபடி மழை வேண்டுதல் என்ற பெயரில் தவ்ஹீத் அமைப்பு ஏன் ஜபம் செய்கிறார்கள்?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

بَابُ رَفْعِ النَّاسِ أَيْدِيَهُمْ مَعَ الْإِمَامِ فِي الِاسْتِسْقَاءِ
بَابُ رَفْعِ الْإِمَامِ يَدَهُ فِي الِاسْتِسْقَاءِ

 

மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்துவது பற்றிய பாடம் அடுத்து மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாம் கைகளை உயர்த்துவது பற்றிய பாடம் என்ற தலைப்பில் ஸஹீஹுல் புஹாரி கிதாபில் தனிப்பட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் பல ஹதீஸ் கிதாபுகளிளும் இடம் பெறுள்ளது.

 

அப்படி இருக்க எதற்காக ஸஹீஹான பல ஹதீஸ்களை விட்டு விட்டு தனிப்பட்ட முறையில் ஓர் ஹதீஸை தவறாக புரிந்து குழுக்களாக இணைந்து பிராத்தனை என்ற பெயரில் ஏன் காமெடி பண்ணுகிறீர்கள். இதனால் தான் அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ பேஜின் மூலம் உங்கள் வழிகேட்டை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகிறோம் உங்களை இழிவு படுத்தும் நோக்கில் அல்ல. குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் நீங்கள் கூரும் தவறான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முறனானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தானே அன்றி வேறில்லை.

 

கைகளை நீட்டி பிரார்த்தனை செய்பவர்கள் கூறும் ஆதாரமும் அதற்குறிய தெளிவும் :-

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَسْقِي هَكَذَا ؛ يَعْنِي وَمَدَّ يَدَيْهِ، وَجَعَلَ بُطُونَهُمَا مِمَّا يَلِي الْأَرْضَ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ.

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்கள் இவ்வாறு மழைத்தேடி பிரார்த்திப்பார்கள். அதாவது தனது இரு கைகளையும் நீட்டி அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மைய பார்க்க படக்கூடிய அளவிற்கு தனது இரு உள்ளங்கைகளை தரையை ஒட்டியுள்ள பொருளை நோக்கி கவிழ்த்தி விடுவார்கள்.

 

அறிவிப்பவர் : அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 1771 மேலும் முஸ்லிம் 1632

 

ஷரீபில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள் என்று சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.
மேற்கூறிய ஹதீஸில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது கைகளை நீட்டினார்கள் தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள் என்றால் எப்படி செய்தார்கள் என்பதை அதே அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெளிவான முறையில் அதிகப்படியான வேறுபல ஹதீஸ்களில் அறிவித்து உள்ளார்கள். அவை பின்வருமாறு

 

عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَشَرِيكٍ سَمِعَا أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அக்குள் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு (துஆச் செய்யும் போது) தம் கைகளை உயர்த்தினார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1030, 3565, 6343 முஸ்லிம் 895, அபூ தாவூத் 1770, இப்னு மாஜா 1180 நஸாயி 1513 அஹ்மது 12867, 12903, 13187, 13257 தாரமி 1576

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِهِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ، وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போதே தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை காணப்படும் அளவிற்கு உயர்த்துவார்கள்.

 

அறிவிப்பவர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1031, 3565, 6341, முஸ்லிம் 896, அபூ தாவூத் 1170, இப்னு மாஜா 1180 நஸாயி 1513, 1748, அஹ்மது 13726,14006 இடம் பெற்றுள்ளது 

 

سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : أَتَى رَجُلٌ أَعْرَابِيٌّ مِنْ أَهْلِ الْبَدْوِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَاشِيَةُ، هَلَكَ الْعِيَالُ، هَلَكَ النَّاسُ. فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ يَدْعُو، وَرَفَعَ النَّاسُ أَيْدِيَهُمْ مَعَهُ يَدْعُونَ

 

ஒரு வெள்ளிக் கிழமையன்று ஒரு கிராமவாசி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். யா ரஸூலல்லாஹ்! கால்நடைகள் அழிந்துவிட்டன. குடும்பமும் அழிந்தது. மக்களும் அழிந்தார்கள்’ என்றார்கள். உடனே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். அவர்களுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1029, 932, 933, 1014, 1015, 1016, 1017, 1018, 1019, 1021, 1033, 3582, 6093, 6342, முஸ்லிம் 897 அபூ தாவூத் 1175,1174 நஸாயி 1504, 1515, 1516, 1517, 1518, 1527, 1528 அஹ்மது 12019, 12949, 13016, 13566, 13693, 13743, 13867 இடம் பெற்றுள்ளது.

 

இவைகளை கூர்ந்து கவனியுங்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழைதேடி பிராத்தனை செய்யும் போது தான் கைகளை அதிகப்படியாக உயர்த்தி உள்ளார்கள். அதாவது அவர்களின் அக்குள் வென்மை தெறியும் அளவுக்கு உயர்த்தினார்கள் என்று மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

அப்படி என்றால் மேற்கூறிய ஆரம்ப ஹதீஸில் தனது இரு கைகளையும் நீட்டி அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மைய பார்க்க படக்கூடிய அளவிற்கு தனது இரு உள்ளங்கைகளை தரையை ஒட்டியுள்ள பொருளை நோக்கி கவிழ்த்தி விடுவார்கள். தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்‌‌ என்று கூறிய காரணம் என்னவெனில். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு அக்குள்களின் வெண்மையை பார்க்க படக்கூடிய அளவிற்கு தனது இரு உள்ளங்கைகளை நீட்டியபடி உயர்த்தி, புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்‌‌. அச்சமயம் கைகள் உயர்ந்திருக்கும், புறங்கைகள் வளைந்து வானை நோக்கி சைகை முறையில் இருக்கும், மேலும் கைகள் தலைவரை உயர்ந்து உள்ளங்கைகள் வளைந்த வண்ணம் பூமியை நோக்கி கவிழ்ந்து இருக்கும் நிலையில் பிராத்தனை செய்வார்கள். இது போன்ற பிராத்தனை இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமே செய்யப்பட்டது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- அன்புக்குரிய வஹாபிஷ தவ்ஹீத் சகோதர சகோதரிகளே! மம்மிசிலை போன்று நெஞ்சில் கைகளை கட்டிய நீங்கள் விரலை ஆட்டு ஆட்டென்டு ஆட்டிய நீங்கள் இப்போது மழை வேண்டுதல் என்ற பெயரில் என்ன செய்தீர்கள்? நிதானமாக சிந்தித்து பாருங்கள். உங்கள் கொல்கை வழிகேடு என்பதை நாம் அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ பேஜின் மூலம் ஒவ்வொரு பதிவிலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிரூபித்து வருகிறோம். நடுநிலையாக யோசியுங்கள். கொல்கை வெறி வேண்டாம். இன்ஷா அல்லாஹ்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.