சத்திய ஸஹாபாக்களின் சிறப்புக்களும் அவர்களை பின்பற்ற வேண்டிய அவசியமும்

123

சத்திய ஸஹாபாக்களின் சிறப்புக்களும் அவர்களை பின்பற்ற வேண்டிய அவசியமும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ سَعِيدِ بْنِ أَبِى بُرْدَةَ عَنْ أَبِى بُرْدَةَ عَنْ أَبِيهِ قَالَ….النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நட்சத்திரங்கள் வானத்துக்குப் பாதுகாப்பாகும். அவை அழிந்து விட்டால் வானத்துக்கு வாக்களிக்கப் பட்டது வந்து விடும். நான் எனது தோழர்களுக்குப் பாதுகாப்பாகும். நான் சென்று விட்டால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும். அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும்.

 

அறிவிப்பவர் :- ஸயீத் இப்னு அபூ புர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் முஸ்லிம் 6629

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.

 

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 3673

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَبَّ أَصْحَابِي فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் ஸஹாபிகளை திட்டுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் ,மலக்குகளின் சாபமும் ,மக்களின் சாபம், இன்னும் அனைவரின் சாபம் உண்டாகும் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் தப்ரானி 2567

 

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

 

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.

சூரா தவ்பா ஆயத் 100

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً ، قَالُوا : وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي

 

رواه الترمذي 2641 وحسَّنه ابن العربي في ” أحكام القرآن ” 3 / 432 ، والعراقي في ” تخريج الإحياء ” 3 / 284 ، والألباني في ” صحيح الترمذي

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது உம்மத்தினர் எழுபத்தி மூன்று பிரிவினராகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர ஏனைய அனைவரும் நரகம் செல்வர் என்று கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் (அந்த ஒரு கூட்டம்) யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் சென்ற பாதையையும் என்னுடைய ஸஹாபிகள் சென்ற பாதையையும் தேர்ந்தெடுத்தவர்கள் என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் திர்மிதி 2641 ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானதாகும்.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلاءِ بْنِ زَبْرَ عَنْ يَحْيَى بْنِ أَبِي الْمُطَاعِ قَالَ سَمِعْتُ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ بَقِيَ بَعْدِي مِنْكُمْ فَسَيَرَى اخْتِلافًا شَدِيدًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ عُضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ

 

رواه أبو داود 4607 والترمذي 2676 وابن ماجة 43 والدارمي 96 وأحمد 17142 حديث صحيح

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய் பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.

 

அறிவிப்பவர் :- இர்பாள் இப்னு ஷாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம்
திர்மிதி 2676, இப்னு மாஜா 42, அபூதாவுத் 4607, ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானதாகும்.

 

سمِعْتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يقولُ: إنَّ اللهَ وضَعَ الحقَّ على لسانِ عُمَرَ يقولُ بهِ

رواه الترمذي 3682 إسناده صحيح

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை வைத்து விட்டான் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் திர்மிதி 3682 ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானது.

 

عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي أَبِي بَكْرٍ وَعُمَرَ

رواه أحمد 5/ 382، وصححه الألباني في ” صحيح الترمذي ” 3805 وقال شعيب الأرناؤوط:” حديث حسن

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்பதாக கூறி அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் சுட்டிக் காட்டினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் அஹ்மத் 5/382 திர்மிதி 3805 ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானதாகும்

 

சத்திய ஸஹாபாக்களை பின்பற்றலாம் என்பதற்கு திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலிருந்து தெளிவான முறையில் பல ஆதாரங்கள் உள்ளதால் சத்திய ஸஹாபாக்களை தாராளமாக பின்பற்றலாம். அதற்கு இஸ்லாம் பூரண அனுமதி அளித்துள்ளதை நாம் சாதனமாக புரிந்து கொள்ள முடிகிறது

 

குறிப்பு :- சத்திய ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சொல்லப்பட்ட பின்பும் பின்பற்றக்கூடாது என்று ஒருவன் சொன்னால் அல்லது ஒரு கூட்டம் சொன்னால் அவர்கள் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியாது அவர்கள் வழிதவரிய வழிகெட்ட கூட்டங்களில் நின்றுமுள்ளவர்களாகும் அதனால் தான் திர்குர்ஆன் கூறுகிறது

 

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ , صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْب عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

 

(யா அல்லாஹ்) நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ (அத்தகைய சத்திய ஸஹாபாக்கள் தாபீஈன்கள் இமாம்கள்) (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ (அத்தகைய முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள், ஷியாக்கள், காதியானிகள், போலி தவ்ஹீத் வஹாபிகள்) சென்ற வழியுமில்லை வழிதவறியோர் வழியுமில்லை .

சூரா பாதிஹா ஆயத் 6,7

 

நபிவழி எவ்வழியோ ஸஹாபாக்களும் அவ்வழியே நம்பினால் நாட்டம் நிறைவேரும் குர்ஆன் ஹதீஸ் இஜ்மா கியாஸ்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.