சாப்பிடும் போதும் பருகும் போதும் ஓதும் துஆ
சாப்பிடும் போது ஓதும் துஆ
بِسْمِ اللهِ وَعَلٰى بَرَكَةِ اللهِ
அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு, அல்லாஹ்வின் பரக்கத்தின் மீது (இவ்வுணவை நான் சாப்பிடுகிறேன்)
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்து விட்டால்
بِسْمِ اللهِ اَوَّلَهُ وَاٰخِرَهُ
இதன் துவகத்கத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயரால் (சாப்பிடுகிறேன்)
உணவு சாப்பிடும் போது பின்வரும் துஆவை ஓத வேண்டும்.
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَاَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ
யாஅல்லாஹ்! இதில் எங்களுக்கு பரக்கத்துச் செய்வாயாக! இதை விடச் சிறந்ததை எங்களுக்கு உணவாக அளிப்பாயாக!
பானங்கள் அருந்தும் போது ஓதும் துஆ
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
யா அல்லாஹ்! இதில் எங்களுக்கு பரக்கத்துச் செய்வாயாக! இன்னும் இதிலிருந்து அதிகத்தை எங்களுக்கு வழங்குவாயாக!
சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ
اَلْحَمْدُ لِلهِ الَّذِىْ هُوَ اَشْبَعَنَا وَاَرْوَانَا وَاَنْعَمَ عَلَيْنَا
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், அவன் எத்தகையவன் என்றால் எங்களுக்கு வயிற்றை நிரப்பி, தாகத்தை தீர்த்தான். இன்னும் எங்களுக்கு பர்கியமளித்து கருணை செய்தான்.
اَلْحَمْدُ لِلهِ الَّذِىْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ
எங்களுக்கு உணவளித்து, தண்ணீர் புகட்டி, எங்களை முஸ்லிம்களில் உள்ளவர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
உணவு ஆகாரம் தந்தவர்களுக்காக ஓதும் துஆ
اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ فَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
யா அல்லாஹ் இவர்களுக்கு நீ அளித்தவற்றில் இவர்களுக்கு நீ பரக்கத்துச் செய்வாயாக! இன்னும் இவர்களுக்கு மன்னிப்பளித்து கிருபை செய்வாயாக! அல்லது
اَللّٰهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنِىْ وَىسْقِ مَنْ سَقَانِىْ
யா அல்லாஹ்! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்கு நீர் புகட்டியவருக்கு நீ நீர்புகட்டுவாயாக!
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்