சிஹ்ர் சூனியம் என்பது பொய், பித்தலாட்டம், மேஜிக் என்று குர்ஆனில் ஒரு வசனம் கூட இல்லை

510

சிஹ்ர் சூனியம் என்பது பொய், பித்தலாட்டம், மேஜிக் என்று குர்ஆனில் ஒரு வசனம் கூட இல்லை

 

A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி ✍️)
நூல் 📚 :- [திருக்குர்ஆனுடைய பார்வையில் சூனியமும் சூனியத்தால் பாதிக்கப்பட்டோர்களும்]

 

திருக்குர்ஆனில் “சிஹ்ர்” (சூனியம்) என்ற சொல் சுமார் 18 இடங்களிலும் “சஹரது” (சூனியக்காரர்கள்) என்ற சொல் 8 இடங்களிலும் “சாஹிர்” (சூனியக்காரன்) என்ற சொல் 9 இடங்களிலும் “சாஹிரூன்” (சூனியக்காரர்கள்) என்ற சொல் 1 இடத்திலும் “மஸ்ஹூரா” (சூனியம் செய்யப்பட்டவர்) என்ற சொல் 3 இடங்களிலும் “முஸஹ்ஹரீன்” (சூனியம் செய்து விட்டார்கள்) என்ற சொல் 2 இடங்களிலும் இடம் பெற்றுள்ளன.

 

சிஹ்ர் என்ற அரபுச் சொல்லுக்கு இலக்கிய நூல்களில் வெவ்வேறு அர்த்தங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அதனுடைய அடிப்படை அர்த்தம் திருப்புதல் அல்லது மாற்றுதல் என்பதாகும்.

நூல் :-லிசானுல் அரப்

 

சிஹ்ர் சூனியம் என்பது ஷைத்தானின் சூழ்ச்சி வேலையை குறிக்கும். அதாவது ஷைத்தானின் சூழ்ச்சி வேலையை கொண்டு ஒருவரின் மனோநிலையை மாற்றுவது, ஆரோக்கியமாக இருப்பவரை நோயின் பக்கம் திருப்புவது, அல்லது ஒருவரை ஒன்றுமில்லாமல் (ஸீரோ 0) ஆக்குவது. இன்னும் தெளிவான முறையில் கூறப்போனால் ஒருவரை முடக்குவது அல்லது முழுமையாக அழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதனை பொய் பித்தலாட்டம் மேஜிக் கண்கட்டி வித்தை என்று மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்வது மட்டுமின்றி சூனியம் சம்பந்தமாக இடம்பெற்ற பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தன் மனோ இச்சைப்படி மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு இறைவேதம் திருக்குர்ஆன் எந்த சந்தர்ப்பங்களிலும் ஆதாரமாக மாட்டாது. அவர்களின் வாதங்களுக்கு திருக்குர்ஆன் நேர்மாற்றமாக அமைந்துள்ளதை இச்சிறு நூலை முழுமையாக கூர்ந்து கவனித்தால் சர்வ சாதாரணமாக அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

 

ﺍِﺫْ ﻗَﺎﻝَ ﺍﻟﻠّٰﻪُ ﻳٰﻌِﻴْﺴَﻰ ﺍﺑْﻦَ ﻣَﺮْﻳَﻢَ ﺍﺫْﻛُﺮْ ﻧِﻌْﻤَﺘِﻰْ ﻋَﻠَﻴْﻚَ ﻭَﻋَﻠٰﻰ ﻭَﺍﻟِﺪَﺗِﻚَ ۘ ﺍِﺫْ ﺍَﻳَّﺪﺗُّﻚَ ﺑِﺮُﻭْﺡِ ﺍﻟْﻘُﺪُﺱِ ﺗُﻜَﻠِّﻢُ ﺍﻟﻨَّﺎﺱَ ﻓِﻰْ ﺍﻟْﻤَﻬْﺪِ ﻭَﻛَﻬْﻠًﺎ ۚﻭَﺍِﺫْ ﻋَﻠَّﻤْﺘُﻚَ ﺍﻟْـﻜِﺘٰﺐَ ﻭَﺍﻟْﺤِﻜْﻤَﺔَ ﻭَﺍﻟﺘَّﻮْﺭٰٮﺔَ ﻭَﺍﻟْﺎِﻧْﺠِﻴْﻞَ ۚ ﻭَﺍِﺫْ ﺗَﺨْﻠُﻖُ ﻣِﻦَ ﺍﻟﻄِّﻴْﻦِ ﻛَﻬَﻴْـــٴَــﺔِ ﺍﻟﻄَّﻴْﺮِ ﺑِﺎِﺫْﻧِﻰْ ﻓَﺘَـﻨْﻔُﺦُ ﻓِﻴْﻬَﺎ ﻓَﺘَﻜُﻮْﻥُ ﻃَﻴْﺮًۢﺍ ﺑِﺎِﺫْﻧِﻰْ ﻭَ ﺗُﺒْﺮِﺉُ ﺍﻟْﺎَﻛْﻤَﻪَ ﻭَﺍﻟْﺎَﺑْﺮَﺹَ ﺑِﺎِﺫْﻧِﻰْ ۚ ﻭَﺍِﺫْ ﺗُﺨْﺮِﺝُ ﺍﻟْﻤَﻮْﺗٰﻰ ﺑِﺎِﺫْﻧِﻰْ ۚ ﻭَﺍِﺫْ ﻛَﻔَﻔْﺖُ ﺑَﻨِﻰْۤ ﺍِﺳْﺮَﺍٓﺀِﻳْﻞَ ﻋَﻨْﻚَ ﺍِﺫْ ﺟِﺌْﺘَﻬُﻢْ ﺑِﺎﻟْﺒَﻴِّﻨٰﺖِ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻛَﻔَﺮُﻭْﺍ ﻣِﻨْﻬُﻢْ ﺍِﻥْ ﻫٰﺬَﺍۤ ﺍِﻟَّﺎ ﺳِﺤْﺮٌ ﻣُّﺒِﻴْﻦ

 

குர்ஆன் கூறுகிறது அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.

சூரா மாயிதா ஆயத் 110

 

ﻭَﺍِﺫْ ﻗَﺎﻝَ ﻋِﻴْﺴَﻰ ﺍﺑْﻦُ ﻣَﺮْﻳَﻢَ ﻳٰﺒَﻨِﻰْۤ ﺍِﺳْﺮَﺍٓﺀِﻳْﻞَ ﺍِﻧِّﻰْ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠّٰﻪِ ﺍِﻟَﻴْﻜُﻢْ ﻣُّﺼَﺪِّﻗًﺎ ﻟِّﻤَﺎ ﺑَﻴْﻦَ ﻳَﺪَﻯَّ ﻣِﻦَ ﺍﻟﺘَّﻮْﺭٰٮﺔِ ﻭَﻣُﺒَﺸِّﺮًۢﺍ ﺑِﺮَﺳُﻮْﻝٍ ﻳَّﺎْﺗِﻰْ ﻣِﻦْۢ ﺑَﻌْﺪِﻯ ﺍﺳْﻤُﻪٗۤ ﺍَﺣْﻤَﺪُؕ ﻓَﻠَﻤَّﺎ ﺟَﺎٓﺀَﻫُﻢْ ﺑِﺎﻟْﺒَﻴِّﻨٰﺖِ ﻗَﺎﻟُﻮْﺍ ﻫٰﺬَﺍ ﺳِﺤْﺮٌ ﻣُّﺒِﻴْﻦٌ

 

குர்ஆன் கூறுகிறது மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.

சூரா ஸஅப் ஆயத் 6

 

ﻓَﻠَﻤَّﺎ ﺟَﺎٓﺀَﺗْﻬُﻢْ ﺍٰﻳٰﺘُﻨَﺎ ﻣُﺒْﺼِﺮَﺓً ﻗَﺎﻟُﻮْﺍ ﻫٰﺬَﺍ ﺳِﺤْﺮٌ ﻣُّﺒِﻴْﻦٌۚ

 

குர்ஆன் கூறுகிறது இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் “இது பகிரங்கமான சூனியமேயாகும்” என்று கூறினார்கள்.

சூரா நம்ல் ஆயத் 13

 

ﻓَﻠَﻤَّﺎ ﺟَﺎٓﺀَﻫُﻢْ ﻣُّﻮْﺳٰﻰ ﺑِﺎٰﻳٰﺘِﻨَﺎ ﺑَﻴِّﻨٰﺖٍ ﻗَﺎﻟُﻮْﺍ ﻣَﺎ ﻫٰﺬَﺍۤ ﺍِﻟَّﺎ ﺳِﺤْﺮٌ ﻣُّﻔْﺘَـﺮًﻯ ﻭَﻣَﺎ ﺳَﻤِﻌْﻨَﺎ ﺑِﻬٰﺬَﺍ ﻓِﻰْۤ ﺍٰﺑَﺎٓٮِٕﻨَﺎ ﺍﻟْﺎَﻭَّﻟِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது ஆகவே , மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்; “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.

சூரா கஸஸ் ஆயத் 36

 

ﻓَﻠَﻤَّﺎ ﺟَﺎٓﺀَﻫُﻢُ ﺍﻟْﺤَـﻖُّ ﻣِﻦْ ﻋِﻨْﺪِﻧَﺎ ﻗَﺎﻟُﻮْﺍ ﻟَﻮْﻟَﺎۤ ﺍُﻭْﺗِﻰَ ﻣِﺜْﻞَ ﻣَﺎۤ ﺍُﻭْﺗِﻰَ ﻣُﻮْﺳٰﻰ ؕ ﺍَﻭَﻟَﻢْ ﻳَﻜْﻔُﺮُﻭْﺍ ﺑِﻤَﺎۤ ﺍُﻭْﺗِﻰَ ﻣُﻮْﺳٰﻰ ﻣِﻦْ ﻗَﺒْﻞُ ۚ ﻗَﺎﻟُﻮْﺍ ﺳِﺤْﺮٰﻥِ ﺗَﻈَﺎﻫَﺮَﺍ ﻭَﻗَﺎﻟُﻮْۤﺍ ﺍِﻧَّﺎ ﺑِﻜُﻞٍّ ﻛٰﻔِﺮُﻭْﻥ

 

குர்ஆன் கூறுகிறது எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்றனர்.

சூரா கஸஸ் ஆயத் 48

 

ﻗَﺎﻝَ ﺍٰﻣَﻨْﺘُﻢْ ﻟَﻪٗ ﻗَﺒْﻞَ ﺍَﻥْ ﺍٰﺫَﻥَ ﻟَـﻜُﻢْؕ ﺍِﻧَّﻪٗ ﻟَـﻜَﺒِﻴْﺮُﻛُﻢُ ﺍﻟَّﺬِﻯْ ﻋَﻠَّﻤَﻜُﻢُ ﺍﻟﺴِّﺤْﺮَۚ ﻓَﻠَﺎُﻗَﻄِّﻌَﻦَّ ﺍَﻳْﺪِﻳَﻜُﻢْ ﻭَﺍَﺭْﺟُﻠَﻜُﻢْ ﻣِّﻦْ ﺧِﻠَﺎﻑٍ ﻭَّﻟَﺎُﺻَﻠِّﺒَـﻨَّﻜُﻢْ ﻓِﻰْ ﺟُﺬُﻭْﻉِ ﺍﻟﻨَّﺨْﻞِ ﻭَﻟَـﺘَﻌْﻠَﻤُﻦَّ ﺍَﻳُّﻨَﺎۤ ﺍَﺷَﺪُّ ﻋَﺬَﺍﺑًﺎ ﻭَّﺍَﺑْﻘٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.

சூரா தாஹா ஆயத் 71

 

ﺍَﻛَﺎﻥَ ﻟِﻠﻨَّﺎﺱِ ﻋَﺠَﺒًﺎ ﺍَﻥْ ﺍَﻭْﺣَﻴْﻨَﺎۤ ﺍِﻟٰﻰ ﺭَﺟُﻞٍ ﻣِّﻨْﻬُﻢْ ﺍَﻥْ ﺍَﻧْﺬِﺭِ ﺍﻟﻨَّﺎﺱَ ﻭَﺑَﺸِّﺮِ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﺍٰﻣَﻨُﻮْۤﺍ ﺍَﻥَّ ﻟَﻬُﻢْ ﻗَﺪَﻡَ ﺻِﺪْﻕٍ ﻋِﻨْﺪَ ﺭَﺑِّﻬِﻢْؔؕ ﻗَﺎﻝَ ﺍﻟْﻜٰﻔِﺮُﻭْﻥَ ﺍِﻥَّ ﻫٰﺬَﺍ ﻟَﺴٰﺤِﺮٌ ﻣُّﺒِﻴْﻦٌ

 

குர்ஆன் கூறுகிறது மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.

சூரா யூனுஸ் ஆயத் 2

 

ﻛَﺬٰﻟِﻚَ ﻣَﺎۤ ﺍَﺗَﻰ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻣِﻦْ ﻗَﺒْﻠِﻬِﻢْ ﻣِّﻦْ ﺭَّﺳُﻮْﻝٍ ﺍِﻟَّﺎ ﻗَﺎﻟُﻮْﺍ ﺳَﺎﺣِﺮٌ ﺍَﻭْ ﻣَﺠْﻨُﻮْﻥٌۚ

 

குர்ஆன் கூறுகிறது இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.

சூரா தாரியாத் ஆயத் 5

 

وَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அவர்களிடம் இந்தச் சத்திய வேதம் வரவே, அவர்கள் இதனை (இது) சூனியம் தான். நிச்சயமாக நாங்கள் இதனை நிராகரிக்கின்றோம்” என்று கூறுகின்றனர்.

சூரா ஜுஹ்ஃரூப் ஆய்த் 30

 

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَـمَّا جَآءَهُمْۙ هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‏

 

குர்ஆன் கூறுகிறது நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவைகளைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர்.

சூரா அஹ்காஃப் ஆயத் 7

 

நபிமார்கள் ரஸூமார்கள் விடயத்தில் சூனியம் என்ற வார்த்தையை காஃபிர்கள் குறிப்பிட்டு கூறிய காரணத்தால் சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் மேஜிக்” கண்கட்டி வித்தை என்ற அர்த்தத்தின் அடிப்படையில் தான் காஃபிர்கள் பயன் படுத்தியுள்ளனர் என்ற வாதங்களும் தெளிவுகளும்.

 

மேற்கூறிய இறைவசனங்களை கூர்ந்து கவனியுங்கள். நபிமார்கள் ரஸூல்மார்களையும் இறைவன் ஒவ்வொரு கூட்டத்தினர்களுக்கும் தூதராக அனுப்பி வைத்துள்ளான். அவர்கள் அந்த மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் போதும். அவர்களுக்கு இறங்கப்பட்ட வேதம் இறைவனின் வார்த்தைகள் என்பதாகக் கூரும் போதும். இன்னும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களை மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளிப்படுத்தும் போதும். காஃபிர்கள் இவைகளையெல்லாம் தெளிவான சூனியம் என்று கூறியது மட்டுமல்லாமல் இவைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நபிமார்கள் ரஸூல்மார்களையும் சூனியக்காரர்கள் என்பதாகக் குறிப்பிட்டு கூறியுள்ளதை மூலகாரணமாக வைத்து நபிமார்கள் ரஸூல்மார்கள் விடயத்தில் காஃபிர்கள் சூனியம் என்ற வார்த்தையை பொய் பித்தலாட்டக்காரர் என்ற அடிப்படையில் தான் பயன் படுத்தியுள்ளனர் என்று ஹதீஸ் மறுப்பாளர்கள் கூறும் வாதங்கள் முற்றிலும் தவறாகும்.

 

காரணம் சூனியக்கார்கள் தான் ஷைத்தான்களை மூலமாக வைத்து ஒவ்வொரு அற்புதமான விடயங்களையெல்லாம் மக்கள் மத்தியில் செய்து வந்தார்கள். குறிப்பாக காஃபிர்களை ஏமாற்றியும் பயமுறுத்தியும் வைத்திருந்தார்கள். இதனால் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

 

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

ஆதாரம் :- அஹ்மது 26833

 

சூனியத்தை உன்மை என்று நம்புதல் அதாவது சூனியத்தின் மூலம் சுயமாக எல்லாம் செய்யலாம் என்று யாராவது ஈமான் கொண்டால் நம்பினால் அவர் சுவனம் நுழைய மாட்டார் என்ற ஹதீஸை தெழிவு பெறுவதற்காக வேண்டியே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சூனியக்காரர்கள் தான் ஷைத்தானை மூலமாக வைத்து சுயமாக எல்லாம் செய்யலாம் என்றும். குறிப்பாக சில அற்புதங்களை செய்து காண்பித்தும் காஃபிர்களை ஏமாற்றி வைத்திருந்தார்கள். இதையெல்லாம் நம்பியிருந்த காஃபிர்களுக்கு மத்தியில் நபிமார்கள் ரஸூல்மார்கள் பல அற்புதங்கள் காட்டும் போதும். அவர்களுடைய இறைவேதம் இறைவனிடமிருந்து இறங்கியது என்பதாக அந்த காஃபிர்களுக்கு மத்தியில் அவர்கள் கூரும் போதும். சூனியக்காரர்களை போன்று இவர்களும் சொல்கிறார்களே! இவர்களும் செய்கிறார்களே! அப்படியென்றால் இவர்கள் (நபியாக) இறைத்தூதராக இருக்க முடியாது. அந்த சூனியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று காஃபிர்கள் கூறுவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

 

இது போன்ற காரணங்களை மூலாதாரமாக வைத்து தான் எந்த ஒரு நபியோ அல்லது ரஸூலோ அவர்களுக்கு அச்சம் ஊட்டி எச்சரிக்கை செய்யும் போதெல்லாம் அவர்களை பார்த்து சூனியக்காரர் என்ற வார்த்தையை காஃபிர்கள் கூறினார்களே தவிர. சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் மேஜிக் கண்கட்டி வித்தை என்ற ஓர் அடிப்படையில் அவர்கள் கூறியதாக திருக்குர்ஆனில் எங்குமே இடம் பெறவில்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

காஃபிர்கள் சூனியம் என்ற சொல்லை ஷைத்தானின் சூழ்ச்சி என்ற அடிப்படையில் தான் கூறியுள்ளார்களா?

 

اِلٰى فِرْعَوْنَ وَ هَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ‏

 

குர்ஆன் கூறுகிறது ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம் (அவரை அனுப்பி வைத்தோம்.) அதற்கவர்கள் (மூஸாவைப்) “பெரும் பொய் சொல்லும் சூனியக்காரன்” என்று கூறினார்கள்.

சூரா முஃமின் ஆயத் 24

 

பொய் சொல்லும் சூனியக்காரர் என்ற கருத்தை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி கூறிய காரணம் என்ன? சூனியம் எனும் ஷைத்தானின் சூழ்ச்சியை கொண்டு மக்கள் மத்தியில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அற்புதம் நிகழ்த்திவிட்டு நான் இறைவனின் இறைதூதர் இது இறைவனின் இறைவேதம் என்றெல்லாம் பொய்யை சொல்கிறார். உன்மையில் இவர் பொய் சொல்லும் சூனியக்காரர் என்று காஃபிர்களால் அழைக்கப்பட்டார்கள்.

 

فَاَلْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ ‏

 

குர்ஆன் கூறுகிறது ஆகவே (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப்பாம்பாகி விட்டது.

சூரா அஃராப் ஆயத் 107 மேலும்

 

وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِىَ بَيْضَآءُ لِلنّٰظِرِيْنَ

 

குர்ஆன் கூறுகிறது அவர் தன்னுடைய கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மை யானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது.

சூரா அஃராப் ஆயத் 108 மேலும்

 

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌ ۙ‏

 

குர்ஆன் கூறுகிறது (இதனைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) “நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கின்றார்” என்று கூறினார்கள்.

சூரா அஃராப் ஆயத் 109

 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னுடைய கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார்கள். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மையாக இருந்தது. மேலும் அவர்கள் கைத்தடியை எறிந்த போது உடனே அது பெரிதோர் மலைப்பாம்பாகி விட்டது. இதனை கண்ட ஃபிர்அவ்னின் தலைவர்கள். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கிறார் என்று அக்கூட்டத்தினர் கூறிய காரணம் சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் மேஜிக் கண்கட்டி வித்தை என்ற அர்த்தத்தில் அல்ல. அதற்கு மாற்றமாக சூனியம் என்பது ஷைத்தானுடைய சூழ்ச்சி வேலையாகும். அதில் தேர்ச்சி பெற்ற சூனியக்காரராக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் தான் காஃபிர்கள் இவ்வாறு கூறியுள்ளார்களே தவிர வேறில்லை.

 

ﻗَﺎﻝَ ﺍَﺟِﺌْﺘَﻨَﺎ ﻟِﺘُﺨْﺮِﺟَﻨَﺎ ﻣِﻦْ ﺍَﺭْﺿِﻨَﺎ ﺑِﺴِﺤْﺮِﻙَ ﻳٰﻤُﻮْﺳٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது (ஃபிர்அவ்ன்) மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்? என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.

சூரா தாஹா ஆயத் 57

 

ﻗَﺎﻝَ ﻣُﻮْﺳٰٓﻰ ﺍَﺗَﻘُﻮْﻟُﻮْﻥَ ﻟِﻠْﺤَﻖِّ ﻟَﻤَّﺎ ﺟَﺎٓﺀَﻛُﻢْ ؕ ﺍَﺳِﺤْﺮٌ ﻫٰﺬَﺍ ؕ ﻭَﻟَﺎ ﻳُﻔْﻠِﺢُ ﺍﻟﺴَّﺎﺣِﺮُﻭْﻥَ

 

குர்ஆன் கூறுகிறது அதற்கு மூஸா “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியோ நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள் என்று கூறினார்.

சூரா யூனுஸ் ஆயத் 77

 

ஆரம்ப இறைவசனததில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சூனியத்தை கொண்டு எங்களை நாட்டை விட்டும் வேழியேற்ற பார்க்கிறார்கள் என்பதாக (காஃபிர்களுடைய) ஃபிர்அவ்னின் நிலைப்பாடாகும். மற்ற இறைவசனத்தில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இதுவா சூனியம் என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.

 

மேற்கூறிய இரு இறைவசனங்களையும் கூர்ந்து கவனியுங்கள். சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் மேஜிக் கண்கட்டி வித்தை அல்ல. அது ஷைத்தான்டைய சூழ்ச்சி என்பதை காஃபிர்கள் முன் கூட்டியே அறிந்திருந்தார்கள். இதனால் தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த அற்புதத்தை சூனியம் என்று அவநம்பிக்கை கொண்டது மட்டுமின்றி, சூனியம் எனும் ஷைத்தானின் சூழ்ச்சியை கொண்டு தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எங்களை எங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற பார்க்கிறார்கள் என்பதே காஃபிர்களின் நிலைப்பாடாகும்.

 

காரணம் சூனியக்காரர்கள் தான் ஷைத்தானை மூலமாக வைத்து பல அற்புதங்களை செய்து காண்பித்து காஃபிர்களை ஏமாற்றி வைத்திருந்தார்கள். அதே போண்று தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அது அல்லாத நபிமார்கள் ரஸூல்மார்களும் பல அற்புதங்களை மக்கள் மத்தியில் செய்பவர்களாக இருந்தார்கள். இதையெல்லாம் காரணமாக வைத்துதான் சூனியம் என்ற வார்த்தையை காஃபிர்கள் நபிமார்கள் ரஸூல்மார்களுடைய விடயத்தில் குறிப்பிட்டு கூறியுள்ளார்களே தவிர சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் என்ற அடிப்படையில் காஃபிர்கள் எங்கும் கூறவில்லை. இவ்வாறு கூருவது திர்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

சூனியம் என்றால் பொய்யான ஏமாற்று தந்திரம் என்பதாக ஹதீஸ் மறுப்பாளர்கள் கூரும் ஆதாரமும் அதற்குரிய தெளிவும்

 

ﻳَﻮْﻡَ ﻳُﺪَﻋُّﻮْﻥَ ﺍِﻟٰﻰ ﻧَﺎﺭِ ﺟَﻬَﻨَّﻢَ ﺩَﻋًّﺎؕ

 

குர்ஆன் கூறுகிறது அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.

சூரா தூர் ஆயத் 13 மேலும்

 

ﻫٰﺬِﻩِ ﺍﻟﻨَّﺎﺭُ ﺍﻟَّﺘِﻰْ ﻛُﻨْﺘُﻢْ ﺑِﻬَﺎ ﺗُﻜَﺬِّﺑُﻮْﻥَ

 

குர்ஆன் கூறுகிறது அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்) நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.

சூரா தூர் ஆயத் 14 மேலும்

 

ﺍَﻓَﺴِﺤْﺮٌ ﻫٰﺬَﺍۤ ﺍَﻡْ ﺍَﻧْﺘُﻢْ ﻟَﺎ ﺗُﺒْﺼِﺮُﻭْﻥَۚ

 

குர்ஆன் கூறுகிறது “இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?

சூரா தூர் ஆயத் 15

 

காஃபிர்கள் நரகத்தை (பொய்) பிக்க அதாவது மறுக்கும் நோக்கில் சூனியம் என்ற வார்த்தையை கூறியுள்ள காரணத்தால் சூனியம் என்ற வார்த்தை பொய் என்ற அடிப்படையில் தான் அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள் எனக்கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்கள் முற்றிலும் தவறானவையாகும்.

 

காரணம் நபிமார்கள் ரஸூல்மார்கள் மக்கள் மத்தியில் பல அற்தாட்சிகளை காட்டும் போதும், பல அற்புதங்களை செய்யும் போதும், இவையெல்லாம் சூனியம் என்றே காஃபிர்கள் மறுத்து வந்தார்கள். இது பற்றிய தகவல்களை ஆரம்பத்தில் திருக்குர்ஆன் இறைவசனங்களை வைத்து தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

 

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் காஃபிர்கள் எவ்வாறு அற்தாட்சிகளையும் அற்புதங்களையும் சூனியம் எனக் கூறினார்களோ அதே போன்று தான் நரகத்தையும் சூனியம் எனக் கூறியுள்ளார்கள். காரணம் அதை அவர்கள் பொய் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. இந்த நரகத்தை பற்றி (கூறியவர்கள்) அதாவது தெழிவு படுத்தியவர்கள் நபிமார்கள் ரஸூல்மார்களாகும். காஃபிர்களுடைய பார்வையில் நபிமார்கள் ரஸூல்மார்கள் சூனியக்காரர்களாகும். இவைகளை மூல காரணமாக வைத்து தான் நபிமார்களையும் ரஸூல்மார்களையும் அவர்கள் கொண்டு வந்த அற்தாட்ச்சிகளையும். அவர்கள் கூறிய அந்த (நரகத்தையும்) அவர்கள் காட்டிய அனைத்து அற்புதங்களையும் சூனியம் அதாவது (ஷைத்தானுடைய வேலை) என்பதாகக் கூறியவாறே காஃபிர்கள் மறுத்து வந்தார்கள். இதனால் தான் மேற்கூறிய இறைவசனத்தில் இறைவன் நரகத்த்தை மறுத்த அந்த காஃபிர்களை நோக்கிக் கூறுகிறான்.

 

இது சூனியம் தானா? அதாவது இது (ஷைத்தானுடைய வேலை தானா?) அல்லது பார்க்க முடியாத (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா? என்பதாக காஃபிர்களை நோக்கி இறைவன் மேற்கூறிய இறைவசனத்தில் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

குறிப்பு :- சூனியம் என்ற சொல்லை காஃபிர்கள் ஷைத்தானுடைய சூழ்ச்சி என்ற அடிப்படையில் தான் பயன் படுத்தியுள்ளார்களே தவிர சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் என்ற அர்த்தத்தின் அடிப்படையில் அவர்கள் எங்குமே பயன் படுத்தவில்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் என்றால் பெறும் சூனியக்காரன் ஃபிர்அவ்னை தவிர வேறு எவரும் இருக்க முடியாது

 

 

قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ يٰمُوْسٰى‏

 

குர்ஆன் கூறுகிறது “மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்? என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.

சூரா தாஹா ஆயத் 57 மேலும்

 

فَلَنَاْتِيَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَاۤ اَنْتَ مَكَانًـا سُوًى‏

 

குர்ஆன் கூறுகிறது அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோரும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).

சூரா தாஹா ஆயத் 58

 

ஆரம்ப இறைவசனத்தில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் பக்கம் அழைப்பதற்காக வேண்டி பல அற்புதங்களை மக்கள் மத்தியில் செய்து காட்டினார்கள். அச்சமயம் அவர்களை நோக்கி ஃபிர்அவ்ன் சூனியத்தை கொண்டு எங்களை எங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற பார்க்கிறீர்களா? என்பதாகக் கூறியவன். அடுத்த இறைவசனத்தில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வாறு சூனியம் செய்தார்களோ அதே போண்ற சூனியத்தை திடனாக நாங்களும் செய்து காண்பிப்போம். என்பதாக ஃபிர்அவ்ன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி உறுதியாக கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

இவைகளை கூர்ந்து கவனியுங்கள். மேற்கூறிய ஆயத்துக்களிள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்தது சூனியம் அதாவது பொய் பித்தலாட்டம் என்பதாக ஃபிர்அவ்னின் நிலைப்பாடாக இருந்திருந்தால் மிக பெரிய சூனியக்காரான் பிர்அவ்னை தவிர வேறு எவரும் இருக்க முடியாது. காரணம் ஃபிர்அவ்ன் தன்னையே கடவுள் என்று வாதிட்டவன், மிக பெரிய பொய்யன், பித்தலாட்டக்காரன் அப்படியிருக்கையில் ஏன் ஃபிர்அவ்ன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் போட்டி போடாமல் பெரும் பெரும் சூனியக்காரர்களை அழைக்க வேண்டும் என்ற காரணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِىْ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ‏

 

குர்ஆன் கூறுகிறது ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) “தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினான்.?

சூரா யூனுஸ் ஆயத் 79

 

فَتَوَلّٰى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهٗ ثُمَّ اَتٰى‏

 

குர்ஆன் கூறுகிறது அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான்.

சூரா தாஹா ஆயத் 60

 

சூனியம் என்பது ஷைத்தானுடைய சூழ்ச்சி வேலை என்பதை ஃபிர்அவ்ன் நன்கு அறிந்திருந்தான். இவைகளையெல்லாம் காரணமாக வைத்து தான் ஷைத்தானை மூலமாக வைத்து சூழ்ச்சி செய்யக்கூடிய பெரும் பெரும் சூனியக்காரர்களை கொண்டு நாம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சர்வ சாதனமாக வெண்று விடலாம் என்ற கெட்ட எண்ணத்துடன் ஃபிர்அவ்ன் பெரும் பெரும் சூனியக்காரர்களை அழைத்தானே தவிர பொய் பித்தலாட்டம் செய்வதற்காக வேண்டி தேர்ச்சி பெற்ற சூனியக்காரர்களை அவன் அழைக்கவில்லை. இதில் அதிகமானோர்களுக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

 

சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் கிடையாது அது ஷைத்தான்களின் சூழ்ச்சி என்றே காஃபிர்களின் நிலைப்பாடாகும்

 

 

ﻧَﺤْﻦُ ﺍَﻋْﻠَﻢُ ﺑِﻤَﺎ ﻳَﺴْﺘَﻤِﻌُﻮْﻥَ ﺑِﻪٖۤ ﺍِﺫْ ﻳَﺴْﺘَﻤِﻌُﻮْﻥَ ﺍِﻟَﻴْﻚَ ﻭَﺍِﺫْ ﻫُﻢْ ﻧَﺠْﻮٰٓﻯ ﺍِﺫْ ﻳَﻘُﻮْﻝُ ﺍﻟﻈّٰﻠِﻤُﻮْﻥَ ﺍِﻥْ ﺗَﺘَّﺒِﻌُﻮْﻥَ ﺍِﻟَّﺎ ﺭَﺟُﻠًﺎ ﻣَّﺴْﺤُﻮْﺭًﺍ

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றிவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்

சூரா பனி இஸ்ராயில் ஆயத் 47

 

ﺍَﻭْ ﻳُﻠْﻘٰٓﻰ ﺍِﻟَﻴْﻪِ ﻛَﻨْﺰٌ ﺍَﻭْ ﺗَﻜُﻮْﻥُ ﻟَﻪٗ ﺟَﻨَّﺔٌ ﻳَّﺎْﻛُﻞُ ﻣِﻨْﻬَﺎ ؕ ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻈّٰﻠِﻤُﻮْﻥَ ﺍِﻥْ ﺗَﺘَّﺒِﻌُﻮْﻥَ ﺍِﻟَّﺎ ﺭَﺟُﻠًﺎ ﻣَّﺴْﺤُﻮْﺭًﺍ

 

குர்ஆன் கூறுகிறது அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

சூரா புர்க்கான் ஆயத் 8

 

قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) “உங்கள் மீது எவரோ சூனியம் செய்து விட்டார்கள். (ஆதலால், உங்களுடைய புத்தி தடுமாறிவிட்டது.)

சூரா ஷுஃரா ஆயத் 153 , 185

 

ஆரம்ப இரு இறைவசனங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் அதாவது (ஷைத்தான் தீண்டிய) ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்று காஃபிர்கள் கூறியுள்ளனர். மற்ற இறைவனத்தில் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி உங்களுக்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள். (ஷைத்தான் உங்களை தீன்டி விட்டான்) அதனால் தான் நீங்கள் புத்திமாறி பேசுகிறீர்கள் என்று காஃபிர்கள் கூறியுள்ளனர். இவைகளை கூர்ந்து கவனியுங்கள். காஃபிர்கள் சூனியம் என்ற வார்த்தையை பொய் பித்தலாட்டம் என்ற அடிப்படையில் கூறவில்லை. அதற்கு மாற்றமான முறையில் அதாவது ஷைத்தானுடைய தீங்கு சூழ்ச்சி என்ற அர்த்தத்தின் அடிப்படையில் தான் காஃபிர்கள் சூனியம் என்ற வார்த்தையை குறிப்பிட்டு கூறியுள்ளார்கள் என்ற கருத்தை திருக்குர்ஆன் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

சூனியம் என்பது மேஜிக் கண்கட்டி வித்தை என்று திருக்குர்ஆன் கூருகிறது எனக் கூருவோரின் வாதமும் அதற்குரிய விளக்கமும்

 

ﻗَﺎﻝَ ﺑَﻞْ ﺍَﻟْﻘُﻮْﺍۚ ﻓَﺎِﺫَﺍ ﺣِﺒَﺎﻟُﻬُﻢْ ﻭَﻋِﺼِﻴُّﻬُﻢْ ﻳُﺨَﻴَّﻞُ ﺍِﻟَﻴْﻪِ ﻣِﻦْ ﺳِﺤْﺮِﻫِﻢْ ﺍَﻧَّﻬَﺎ ﺗَﺴْﻌٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது சூனியக்காரர்களுடைய கயிறுகளும் தடிகளும் அவர்களது சூனியத்தால் சீறுவதை போன்று அவர்களுக்கு தோற்றமலித்தது.

சூரா தாஹா 66

 

ﻓَﺎَﻭْﺟَﺲَ ﻓِﻰْ ﻧَﻔْﺴِﻪٖ ﺧِﻴْﻔَﺔً ﻣُّﻮْﺳٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது ஆகவே மூஸா அலை அவர்கள் தன் பயத்தை உனந்தார்கள்.

சூரா தாஹா ஆயத் 67

 

சூனியம் என்பது மேஜிக் அதாவது கண்கட்டி வித்தை என்றிருந்தால் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பயந்திருக்க மாட்டார்கள். அது ஷைத்தானுடைய சூழ்ச்சி என்பதனால் தான் அவர்கள் பயந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. மேலும்

 

قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى‏

 

குர்ஆன் கூறுகிறது (மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்! என்று நாம் சொன்னோம்.

சூரா தாஹா ஆயத் 68

 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி நீர் பயப்புடாதீர் என்று இறைவனுடைய வார்த்தை வரும் வரைக்கும். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பயந்தார்கள் என்றிருந்தால் இதற்கு பெயர் என்ன? பொய்யா? அல்லது பித்தலாட்டமா? அல்லது மேஜிக் கண்கட்டி வித்தையா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். சூனியக்காரர்கள் செய்தது மேஜிக் கண்கட்டி வித்தை என்றிருந்தால் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ மூலம் இறைவன் அறிவித்துக் கொடுத்திருப்பான். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெரியாத விடயம் ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு தெரிந்து விட்டதா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மேலும்

 

قَالَ اَلْقُوْا فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ‏

 

குர்ஆன் கூறுகிறது அதற்கு (மூஸா), நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று (சூனியக்காரர்களை நோக்கிக்) கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.

சூரா அஃராப் ஆயத் 116

 

சூனியக்காரர்கள் அவர்களுடைய சூனியத்தை கொண்டு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உற்பட அங்கிருந்த அனைத்து மக்களுடைய கண்களை மருட்டி அந்த மக்களுடைய கண்களுக்கு (பாம்புகள்) போன்று தோற்றமளிக்க செய்து அங்கிருந்த அனைவரையும் திடுக்கிடச்செய்யும் அளவுக்கு வழுவான சூனியத்தை சூனியக்காரர்கள் செய்துள்ளார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

எனவே சூனியம் என்பது ஷைத்தானுடைய வேலை அல்ல. அது வெரும் மேஜிக் கண்கட்டி வித்தை என்றிருந்தால் சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் நெழிவது போன்று எப்படி தோற்றமளிக்க செய்ய முடியும்? மேலும் கயிறுகளையும் தடிகளையும் நெழிவது போன்று தோற்றமளிக்க செய்து அங்கிருந்த அனைத்து மக்களுக்களுடைய கண்களையும் மறைத்து எவ்வாறு அவர்களை திடுக்கிடச் செய்ய முடியும்? குறிப்பாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கண்களையும் மறைத்து அவர்களுடைய உள்ளத்தில் பயத்தை உண்டாக்கிய அந்த செயலுக்கு எங்கிருந்து சக்தி கிடைத்தது? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். புத்தியுள்ளவர்களுக்கு இதில் நிறைய படிப்பினைகள் உள்ளது.

 

குறிப்பு :- சூனியம் என்பது ஷைத்தானுடைய சூழ்ச்சி வேலையாகும். அவைகளை கொண்டு மக்களை திடுக்கிடச் செய்து பயமுறுத்த முடியும் என்றும். அது பொய் பித்தலாட்டம் மேஜிக் கண்கட்டி வித்தை கிடையாது என்றும். மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் மேஜிக் கண்கட்டி வித்தை என்று அறிந்ததால் தான் சூனியக்கார்கள் ஸஜதாவில் விழுந்து இஸ்லாத்தை தழுவினார்களா?

 

ﻓَﺎَ ﻟْﻘٰﻰ ﻣُﻮْﺳٰﻰ ﻋَﺼَﺎﻩُ ﻓَﺎِﺫَﺍ ﻫِﻰَ ﺗَﻠْﻘَﻒُ ﻣَﺎ ﻳَﺎْﻓِﻜُﻮْﻥَ ۖ ۚ

 

குர்ஆன் கூறுகிறது பிறகு மூஸா தம் கைத்தடியைக் கீழே எரிந்த உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய (பாம்புகளை) விழுங்கி விட்டது.

சூரா ஷுஃரா ஆயத் 45

 

ﻓَﺎُﻟْﻘِﻰَ ﺍﻟﺴَّﺤَﺮَﺓُ ﺳٰﺠِﺪِﻳْﻦَۙ

 

குர்ஆன் கூறுகிறது (இதை பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜதாவில் விழுந்தனர்.

சூரா ஷுஃரா ஆயத் 46

 

ﻗَﺎﻟُﻮْۤﺍ ﺍٰﻣَﻨَّﺎ ﺑِﺮَﺏِّ ﺍﻟْﻌٰﻠَﻤِﻴْﻦَۙ

 

குர்ஆன் கூறுகிறது அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம் (என்று கூறினார்)

சூரா ஷுஃரா ஆயத் 47

 

சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் என்பதை அறிந்ததால் தான் சூனியக்கார்கள் ஸஜதாவில் விழுந்து இஸ்லாத்தை தழுவினார்கள் என்று ஹதீஸ் மறுப்பாளர்கள் கூறும் வாதங்கள் திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை கீழ் கானும் இறைவசனங்களை மூலமாக வைத்து நாம் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்ளலாம்.

 

ﻓَﻠَﻤَّﺎ ﺟَﺎٓﺀَ ﺍﻟﺴَّﺤَﺮَﺓُ ﻗَﺎﻟُﻮْﺍ ﻟِﻔِﺮْﻋَﻮْﻥَ ﺍَٮِٕﻦَّ ﻟَـﻨَﺎ ﻟَﺎَﺟْﺮًﺍ ﺍِﻥْ ﻛُﻨَّﺎ ﻧَﺤْﻦُ ﺍﻟْﻐٰﻠِﺒِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது ஆகவே சூனியக்காரர்கள் வந்த உடன் அவர்கள் பிர்அவ்னை நோக்கி தின்னமாக நாங்கள் (மூஸாவை) வென்று விட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குறிய) வெகுமதி கிடைக்கும் அல்லவா என்று கேட்டார்கள்.

சூரா ஷுஃரா ஆயத் 41

 

ﻗَﺎﻝَ ﻧَﻌَﻢْ ﻭَﺍِﻧَّﻜُﻢْ ﺍِﺫًﺍ ﻟَّﻤِﻦَ ﺍﻟْﻤُﻘَﺮَّﺑِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள் என்று அவன் கூறினான்.

சூரா ஷுஃரா ஆயத் 42

 

சூனியம் என்பது ஷைத்தானுடைய சூழ்ச்சி வேலையாகும். சூனியக்காரர்கள் ஷைத்தான்களை கடவுளாக எடுத்தது மட்டுமின்றி அவைகளை மூலமாக வைத்து சுயமாக எல்லாம் செய்யலாம் என்பதே அவர்களின் ஆழமான நம்பிக்கையாகும். இதனால் தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தின்னமாக நாங்கள் வென்று விடுவோம் என்று ஃபிர்அவ்னிடம் உறுதியாகக் கூறினார்கள். அதன் பின்னர் அதே நிலைப்பாட்டில் இருந்த சூனியக்காரர்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு போட்டி போட்டனர். இருப்பினும் அந்த போட்டியின் முடிவில் எங்களுடைய இறைவன் தீயசக்தி (ஷைத்தானை விட) நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வணங்கும் இறைவன் சக்தி மிக்கவன் என்று போட்டியில் முடிவில் சூனியக்காரர்கள் உணர்ந்து கொண்ட காரணத்தால் ஸஜதாவில் விழுந்து இஸ்லாத்தை தழுவினார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- சூனியம் என்பது பொய் பித்தலாட்டம் மேஜிக் கண்கட்டி வித்தை என்பதாக திருக்குர்ஆனில் எங்கும் இடம் பெறவில்லை. மேலும் காஃபிர்களின் நிலைப்பாடு சூனியம் என்பது ஷைத்தானுடைய வேலை அவைகளை கொண்டு சுயமாக எல்லாம் செய்யலாம் என்பது அவர்களின் (ஈமான்) நம்பிக்கையாகும். மேலும் கஃபிர்கள் சூனியம் என்ற வார்த்தையை பொய் பித்தலாட்டம் என்ற அடிப்படையில் எந்த நபிமார்கள் ரஸூல்மார்கள் விடயத்திலும் குறிப்பிட்டு கூறவில்லை. மேலும் சூனியம் என்பது மேஜிக் கண்கட்டி வித்தை என்ற கருத்தை சூனியக்காரர்கள் கூறியதாக திருக்குர்ஆனில் எங்குமே இடம் பெறவில்லை. இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது சூனியம் என்பது ஷைத்தானின் சூழ்ச்சியை குறிக்கின்றது. அவைகளை பொய் பித்தலாட்டம் மேஜிக் கண்கட்டி வித்தை என்பதாகக் கூறும் ஹதீஸ் மறுப்பாளர்கள் திருக்குர்ஆனை ஒழுங்கு முறைப்படி படிக்கவில்லை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இதற்கு பின்னரும் தன் சுய புத்தியை வைத்து மேற்கூறிய விடயத்தை மறுக்க முற்படுவது, தன் கொள்கைக்கும் தன்னுடைய தலைவரின் கருத்துக்கும் முறன் என்று கூறியவாறு அவைகளை மறுக்க முற்படுவது திருக்குர்ஆனை மறுப்பதற்கு சமம் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️ 
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.