சீர்திருத்தவாதிகள் பற்றிய சிந்தனை துளிகள்
3) சீர்திருத்தவாதிகள் பற்றிய சிந்தனை துளிகள்
சமகாலத்தில் தன்னிடம் அதிகளவில் அறிவும் பேச்சுத் திறனும் இருக்கின்ற காரணத்தால் அதனை வைத்துக் கொண்டு ஊர், உலகை மாற்றிடவும் மக்களின் குறைகளை திருத்திடவும் பலர்கள் முயற்சி செய்கிறார்கள்.
மேற்கூறிய முயற்சி பெரும்பாலும் கடைசி வரை எவருக்கும் பயனளிப்பது கிடையாது. காரணம் என்னவாக இருக்கும்….?
தன்னிடம் அதிகளவில் குறைகளும் தவறுகளும் காணப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் ஏக இறைவனின் திருப்பொருத்தம் எங்கிருந்து கிடைக்கப்பெறும்? ஏக இறைவனின் திருப்பொருத்தம் இல்லாமல் நம்மில் பலர்கள் ஊர் உலகை திருத்த முற்படுவது வேடிக்கையாக போய் விட்டது.
சீர்திருத்தவாதிகளே! ஆரம்பத்தில் தன்னிடம் உள்ள தவறுகளையும் குறைகளையும் பிறர்களுக்கு மத்தியில் வைத்து மறைப்பதை விடவும் தன்னிடம் இருந்தே முழுமையாக அதனை நீங்கள் (மறைக்கும் பொழுது) முற்றாக அழிக்கும் பொழுது. நீங்கள் சீதேவியாக மாறுகிறீர்கள். அதன் காரணத்தால் ஏக இறைவனின் திருப்பொருத்தத்தை நீங்கள் அதிகளவில் அடைந்து கொள்வீர்கள்.
அதன் பின்னர் நீங்கள் சீர்திருத்தம் செய்ய முற்பட்டால் பெரும்பாலும் ஊர் உலகம் மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் உங்கள் அழைப்பை ஏற்று நிரந்தரமாக நேர்வழியில் வருவார்கள். இதனைத் தான் நபிமார்களும் அவ்லியாக்களும் நடைமுறைப் படுத்தி வந்தார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தன்னிடம் உள்ள குறைகளை தான் அறிவதை விடவும் தன் இறைவன் நன்கறிந்தவன் என்பதை ஆழமாக மனதில் பதிந்து கொள்ளுங்கள். என்னிடமும் அதிகளவில் குறைகள் தவறுகள் உள்ளது. நாம் புனித நூல்களில் இருந்து தீர்க்கதரிசிகளான நபிமார்கள் மற்றும் அவ்லியாக்களின் வரலாறுகளை அதிகளவில் உற்று நோக்கினோம். அதில் ஊர் உலகை திருத்த முன்னர், தன்னைத் தானே திருத்திக் கொள்ள முற்படுபவன் சிறந்த அறிவாளி என்றும், சீதேவி என்றும் ஏக இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றவன் என்ற நிதர்சனமான உண்மையை அதனூடாக உணர்ந்து கொண்டேன்.