சுத்தம் செய்வது பற்றிய தகவல்கள்

155

சுத்தம் மூன்று வகைகள் 

 

1) உடல் சுத்தம்  

2) உடைச் சுத்தம்  

3) இடம் சுத்தம் 

♦️குறிப்பு :- இம்மூன்று வகையான சுத்தமும் நிறைவேற வேண்டும். இல்லையெனில் தொழுகையை நிறைவேற்ற முடியாது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். 

 

தொடக்கு இரண்டு வகைகள்

 

1) சிறு தொடக்கு

2) பெரும் தொடக்கு  

♦️குறிப்பு :- சிறு தொடக்கை நீக்குவதற்கு வுழு செய்து கொண்டால் போதுமாகும். ஆனால் பெரும் தொடக்கை நீக்குவதற்குக் குளிக்க (முழுக) வேண்டும். சிறு தொடக்கை பற்றி முன்னைய பதிவுகளில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. முழுக்காகி விட்டால் அதாவது குளிப்பு கடமையாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும். எவ்வாறு குளிப்பு கடமையாகும் என்பது பற்றி சுருக்கமாக பார்க்கலாம். 

 

முழுக்கை விதியாக்கும் காரியங்கள் ஆறாகும்

 

1) ஆண், பெண் உடல்வுறவு சேர்க்கை.  

2) விந்து வெளிப்படுவது. 

3) மரணித்தல் அதாவது மரணமடைந்தவர்களைக் குளிப்பாட்டுவது. 

மேற்கூறிய மூன்றும் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது. பெண்களுக்கு மட்டும் சொந்தமானது மூன்று அவை பின்வருமாறு

4) பிள்ளைப்பேறு வெளிப்பட்டால். அதாவது ஈரமின்றிப் பிரசவம் ஏற்பட்டாலும் சரியே. 

5) ஹைழ் மாதாவிடாய் வெளிப்பட்டால். 

6) நிபாஸ் வெளிப்பட்டால். இது பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும். 

 

முழுக்கின் ஷர்த்துக்கள் நான்காகும்

 

1) முஸ்லிமாக இருத்தல். 

2) துப்பரவான தண்ணீரைத் தேடுதல். 

3) உடம்பில் பட்டிருக்கும் நஜீசை நீக்குதல். 

4) தண்ணீரைச் செல்ல விடாது தடை செய்யக்கூடியவைகளை நீக்கிக் கொள்ளுதல். 

 

முழுக்கின் பர்ளுகள் இரண்டாகும் 

 

1) பெருந்தொடக்கை நான் நீக்குகிறேன்” என்று மனதால் நிய்யத் செய்து கொள்ளுதல். 

2) அந்த நிய்யத்தோடு உடல் முழுவதும் தண்ணீரால் நனையும்படி குளித்துக் கொள்ளுதல். 

 

முழுக்கு கடமையானவர்கள் செய்யக்கூடாத காரியங்கள் ஐந்தாகும் 

 

1) தொழுதல் 

2) குர்ஆனை ஓதுதல் 

3) குர்ஆனைத் தொடுதல்  

4) பள்ளிவாசலில் தரிபடுதல்  

5) கஃபா எனும் புனித ஆலயத்தை தவாபு செய்தல் 

 

  الطُّهُورُ شَطْرُ الإِيمَان 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சுத்தம் ஈமானில் பாதியாகும். 

அறிவிப்பவர் :- ஹாரிஸ் இப்னு ஆஸிம் அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 முஸ்லிம் 223 தாரமீ 679 அஹ்மது 22902

♦️குறிப்பு :- சுத்தம் ஈமானில் அங்கம் பாதியாகும். இஸ்லாத்தின் இரண்டாவது கடமையான ஐங்காலத் தொழுகையைத் தொழுவது கட்டாயக் கடமையாகும். அதனை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றால்! அதற்கு சுத்தம் மிக முக்கியமாகும். எனவே ஒவ்வொரு முஸ்லிம்களும் சுத்தம் செய்து கொள்ளும் மேற்கூறிய முறைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.