சுபஹ் தொழுகைக்கு பின் ஓதும் துஆ

68

(பஜ்ர்) சுபஹ் தொழுகைக்கு பின் ஓதும் துஆ

 

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلي االِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ اجْعَلْ صَبَاحَنَا هذَاصَبَاحًا مُبَارَكاً مِنَ الْخَيْرِقَرِيْبًا وَّعَنِ اشَّرِّ بَعِيْدًا لاَّخَاسِأً وَلاَ خَاسِرًا وَّلامَحْرُوْمًا. اَللّهُمَّ اجْعَلْ اَوَّلَ يَوْمِنَا هذَالَنَاصَلَاحًاوَّاَوْسَطَهُ فَلَاحًاوَّااخِرَهُ نَجَاحًاوَّرَبَاحًا. اَللّهُمَّ صَبِّحْنَا مِنْكَ صَبَاحَ الرِّضَآءِ وَاكْفِنَا شَرَّمَافِي الْقَضَآءِ وَلاَتُعَذِّبْنَابِالْجَرَائِمِيَاكَرِيْمُ يَارَحِيْمُ. اَللّهُمَّ اخْعَلْ صَبَاحَنَاصَبَاحَ الصَّالٍحِيْنَ وَمَسَآءَنَامَسَآءَالذَّاكِرِيْنَ وَقُلُوْبَنَا قُلُوْبَ الْخَاشِعِيْنَ. وَاَبْدَانَنَا اَبْدَانَا الْمُطِيْعِيْنَ. وَاَعْمَالَنَا اَعْمَال الْمُتَّقٍيْنَ. وَاَسِنَتَنَا اَلْسِنَةَ الذَّاكِرِيْنَ. وَنَبِّهْنَا عَنْ نَوْمَةِالْغَافٍلِيْنَ وَشَارِكْنَافِيْ دُعَاءِالصَّالِحِيْنَ. وَارْزُقْنَاالْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِيْنَ. وَصَلَّي اللّهُ وَسَلَّمَ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعلَمِيْنَ.

 

இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் அருள்வாயாக! இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு பரக்கத்துள்ள காலைநேரமாக ஆக்கிஅருள்வாயாக! நன்மையில் சமீபத்ததாகவும், ;தீமையை விட்டு தூரமானதாகவும், தீங்கற்றதாகவும் நஷ்டமற்றதாகவும், நிர்ப்பயனற்றதாகவும் (எங்களுக்கு அதை)ஆக்கி வைப்பாயாக! இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை விசிராந்தியாகவும் சௌக்கியமானதாகவும் ஆக்கி வைப்பாயாக! இறைவனே உன்னிடமிருந்து எங்களுடைய காலை நேரத்தை திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக! கடந்’து போன காரியங்களின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! ஏ சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இறைவனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை உத்தமர்களுடைய காலை நேரமாக்கியருள்வாயாக! மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக! இன்னும் எங்கள் இருதயங்களை அச்சமுள்ள ஹிருதயங்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் சரீரங்களை வழிப்பட்டவர்களின் சரீரங்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்கி வைப்பாயாக! எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்கி வைப்பாயாக! மறதியாளர்களின் தூக்கத்தை விட்டும் எங்களை எழுப்பி வைப்பாயாக! உத்தமர்களுடைய பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக! இன்னும் ஏ சர்வலோகங்களின் இரட்சகனே சுவர்க்கத்தை எங்களுக்கு சாதனமாக்கித் தருவாயாக! அல்லாஹ்வுடைய சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும். சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.