சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் சத்தியக் கூட்டம் எது?

69

சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் சத்தியக் கூட்டம் எது?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَتَفَرَّقَتِ النَّصَارَى عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً

 

حديث صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யூதர்கள் எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். கிருத்தவர்கள் எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 4596 திர்மிதி 2640

 

இஸ்லாமிய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிவார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

இஸ்லாமிய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிவார்கள். இவர்கள் அனைவரும் சுவனம் செல்வார்களா? அல்லது நரகம் செல்வார்களா? இதில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லாமல் இஸ்லாமிய மக்களை தவிப்பில் விட்டுச் செல்ல வில்லை. கீழ் கானும் ஹதீஸ்களை கூர்ந்து கவனியுங்கள்.

 

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى إِحْدَى وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهَا فِي النَّارِ إِلاَّ مِلَّةً وَاحِدَةً فَقِيلَ لَهُ مَا الْوَاحِدَةُ ؟ قَالَ مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي

 

حديث حسن أخرجه الترمذي وغيره والحاكم في المستدرك 1/128، وراجع (الصحيحة) 204

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தார்கள், என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள், அவைகள் அனைத்தும் நரகம் செல்லும். ஒரு கூட்டத்தைத் தவிர, அந்த ஒரு கூட்டம் யார் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது? நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள் தான் என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்தத்ரக்” ஹாகிம் 1/128

 

நானும் என்னுடைய தோழர்களும் அதாவது ஸஹாபாக்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள் தான் அதாவது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்களையும் சரியான முறையில் பற்றிப் பிடித்து கொள்ளும் கூட்டமே சுவனம் செல்லும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقَتْ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَإِنَّ أُمَّتِي سَتَفْتَرِقُ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، كُلُّهَا فِي النَّارِ، إِلَّا وَاحِدَةً وَهِيَ الْجَمَاعَةُ

 

رواه أبو داود 4597، والترمذي 2640، وابن ماجه 47 وابن حبان 6247 والحاكم 443 وصححه حديث صحيح” وصححه، وحسنه ابن حجر في ” تخريج الكشاف 63 وصححه ابن تيمية في مجموع الفتاوى”3/345

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிவார்கள். அனைவரும் நரகில் இருப்பர்கள். ஒரு கூட்டத்தை தவிர. அவர்களே (என்னுடைய) ஜமாஅத் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 4597 திர்மிதி 2640 இப்னு மாஜா 479 இப்னு ஹிப்பான் 6247 ஹாகிம் 443

 

என்னுடைய சமுதாயம் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிவார்கள். அனைவரும் நரகில் இருப்பர்கள். ஒரு கூட்டத்தை தவிர. அவர்களே (என்னுடைய) ஜமாஅத் என்றார்கள். இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனம் செல்லும் ஒரு கூட்டம் ஜமாஅத் என்கிறார்கள். ஜமாஅத் என்பது ஸஹாபாக்களை குறிக்கிறது. ஸஹாபாக்கள் ஒழுங்கு முறைப்படி குர்ஆன் ஹதீஸ்களை படித்தது மட்டுமன்றி அதனை புரிந்து அதற்கு ஏற்றது போல் அமல்கள் செய்தது மட்டுமின்றி காலத்திற்கு ஏற்றது போல் பல சட்டங்களை கூறியுள்ளார்கள். அது மட்டுமின்றி அவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று சுவனத்திற்கு நன்மாராயனம் கூறப்பட்டவர்கள். அத்தகைய ஸஹாபாக்களை ஒழுங்கு முறைப்படி ஒரு கூட்டம் பற்றிப் பிடித்து கொள்ளும் என்றால்! அவர்களே சுவனவாதிகள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ، إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا : وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي

 

رواه الترمذي 2641 وحسَّنه ابن العربي في أحكام القرآن 3 / 432 وصححه الألباني في السلسلة الصحيحة

 

பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை சரிக்கு சமமாக என்னுடைய சமுதாயத்திற்கும் ஏற்படும். எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலர் தன் தாயிடம் பகிரங்கமாக (தவறான எண்ணத்தில்) வந்ததைப் போன்று என் சமுதாயத்திலும் அவ்வாறு செய்பவர்கள் தோன்றுவார்கள். பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு பிரிவுகளாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தைத் தவிர என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் (சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரு கூட்டம்) எது யா ரஸுலல்லாஹ்! என்று கேட்டனர். அதற்கு அவர்கள், நானும் எனது தோழர்களும் எந்த (பாதை)யை தேர்ந்தெடுத்தோமோ அந்த (பாதை)யில் இருப்பவர்கள் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2641 ஹாகிம் 444

 

சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரு கூட்டம் எது யா ரஸுலல்லாஹ்! என்று கேட்டனர். அதற்கு அவர்கள், நானும் எனது தோழர்களும் எந்த பாதையை தேர்ந்தெடுத்தோமோ அந்த பாதையில் இருப்பவர்கள் என்று கூறினார்கள். இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற பாதை என்று வரும் போது (ஸுன்னா)வை குறிக்கும். ஸுன்னத் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் செயல் அங்கிகாரம் என்று வரும் போது இதில் குர்ஆன் ஹதீஸ்கள் முழுமையாக அடங்கிவிடும். அடுத்து ஸஹாபாக்களின் பாதை (ஜமாஅத்)தை குறிக்கும். குர்ஆன் ஹதீஸ்களை எவ்வாறு புரிந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஆழமான விஷயங்களை அறிந்து அதன் நடந்தவர்கள் தான் ஸஹாபாக்கள். எனவே குர்ஆன் ஹதீஸை ஒருவனோ அல்லது ஒரு கூட்டமோ ஒழுங்கு முறைப்படி பின்பற்ற வேண்டும் என்றால் அவர்கள் ஸஹாபாக்களின் வழிமுறைகளை பற்றி பிடித்து கொள்வது அவசியமாகும்.

 

எனவே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (ஸுன்னத்)தையும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள் (ஜமாஅத்)தையும் பற்றி பிடித்தவர்களை அன்று தொட்டும் இன்று வரை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று அழைக்கப்படுகிறது. அத்தையை கூட்டத்தில் என்றென்றும் நிலைத்து இருப்பவர்கள் தான் சுவனம் செல்லும் கூட்டம் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ : – صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

 

(யா அல்லாஹ்) நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ (அத்தகைய அஹ்லுஸ் ஸுன்னா சத்திய ஸஹாபாக்கள் தாபீஈன்கள் இமாம்கள்) (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ (அத்தகைய முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள், ஷியாக்கள், காதியானிகள், வஹாபிகள்) சென்ற வழியுமில்லை வழிதவறியோர் வழியுமில்லை .

சூரா பாதிஹா ஆயத் 6,7

 

குறிப்பு :- அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! ஸஹாபாக்கள் தேவையில்லை குர்ஆன் ஹதீஸ் மட்டுமே போதும் என்று கூறிய பல கூட்டங்கள் இன்று வெவ்வேறு கோணங்களில் பிரிந்து அவர்களுக்குள்ளே மார்க்க விஷயத்தில் சன்டை பிடித்துக் கொள்கிறார்கள். மேலும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு தவறான விளக்கங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் ஸஹாபாக்கள் இமாம்களை மறுத்து தற்போது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மறுக்கும் அவளநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். (யா அல்லாஹ்) நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ அத்தகைய அஹ்லுஸ் ஸுன்னா சத்திய ஸஹாபாக்கள் தாபீஈன்கள் இமாம்கள் சென்ற வழியில் எங்களை இணைத்து விடுவாயாக. உன்னுடைய கோபத்திற்குள்ளானவர்களோ அத்தகைய முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள், ஷியாக்கள், காதியானிகள், வஹாபிகள் சென்ற வழியில் எங்களை இணைத்து விடாதே! ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.